கார்த்தீக புராணம் தமிழில்

முன்னுரை:-

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது . அதிலும் கன் குருடு செவிடு  இல்லாமல் பிறப்பது அரிது என்றும் மூதோர் , மானிட  ஜென்மம் அடைந்தபின் சந்தோஷம் அடைவது என்பது அதை விட அரிது . அதற்காக தம் முன்னோர்கள் நமக்காக பல புராணக்கதைகள் , இதிஹாசங்கள் , உபநிஷத்துக்கள் வாயிலாக மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற விழிப்புணர்வை கொடுத்துள்ளார்கள் , அதை தற்போது இப்புராணத்தின் துணையோடு படித்து இன்புறுவோம்.

Karthika puranam tamil Introduction
Karthika puranam tamil Introduction

மனிதனின் ஆயுள் 120 வயது என்று புராணம் கூறுகிறது . அதை , தற்போதைய விஞ்ஞானமும் உறுதி செய்துள்ளது. விரதத்தினால் நாம் நோய் நொடியின்றி வாழமுடியும் என்றும் நாம் 120 வயது வரை வாழ ஏகாதசி விரதம் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை இந்நூல் உணர்த்துகிறது . மேலும் பாபம் செய்தவன் என்ன வழியில் புண்யம் அடையமுடியும் என்பதை மிக அழகாக நமக்கு எடுத்துரைக்கின்றது கார்த்திகை புராணம்.

கார்த்திகை சோமவாரம் நெல்லி மர , துளசி செடிகளை எப்படி பூஜை செய்து அதன் பலனை எவ்வாறு அடைவது என்பதை மிகத் தெளிவாக எடுத்து உரைக்கின்றது. ஆக கார்த்திகை , மார்கழி மாதம் மட்டுமல்லாமல் , தாங்கள் வாங்கிய உடன் ஒரு முறை படித்துணர்வது மிக நல்லது என்றே கருதுகிறேன்.

துவாரபாலகர்கள், கஜேந்திர மோஷம் அடைந்த விதம், நதிகள் உருவான விதம், இந்த கார்த்திக புராணத்தை படித்து, கேட்டவர்களுக்கு கிடைத்த மோட்சம் போன்றவற்றை விரிவாக விளக்கம் தருகிறது.

இந்த மருந்தகத்தை ( புராணத்தை ) நம் ஒவ்வொருவர் வீட்டிலும் வைத்து பூஜித்து, அதை படித்து அதன் விவரங்களை நன்ருகத் தெரிந்து தெளித்து அதன்படி நடந்தால் நாம் பிறப்பின் பயனை அடையலாம்.

கார்த்தீக புராணம் படிக்கும் இடம்?

மகளிர் யாவரும் கோவில்களிலோ அல்லது சத்திரங்களிலோ இதைப் படிக்கலாம். சுய உதவிக்குழுவினரும் படித்து பயன் அடையலாம்.
இந்த கார்த்தீக புராணத்தை படிக்கப்படிக்க சொர்க்கம் என்னருகில் இருப்பதை போன்ற ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தியது.

கார்த்தீக புராணம் படிக்க உகந்த காலம்?

ஏகாதசி, பௌர்ணமி, அமாவாஸ்யை, வைகாசி விசாகம், கிருத்திகை போன்ற நாட்களில் இயற்கை நமக்கு அளிக்கும் பயன்களை நமது முன்னோர்கள் அறிந்து தானும் பயனடைந்து நமக்கும் கொடுத்திருக்கிறர்கள் என்றால் நாம் நிச்சயம் புண்ணியம் செய்வதவர்களே. ஆகவே , பயனடைந்து அவர்களை போற்றுவோம்.

இந்த புராணத்தை நாங்கள்  வெளியிட உதவிய மதுரை மேலூர்,    ஸ்ரீமதி ஜெயா சுந்தரேசன் அவர்களுக்கும் இந்த நூலை திருத்தில் கொடுத்த மறைதிரு .பூஜயஸ்ரீ ஸ்ரீரங்கம் வேங்கடாகுராம் பாகவதம் அவர்களுக்கும் , ப்ருப் ரீடிங் செய்த ஸ்ரீமதி, சரஸ்வதி அவர்களுக்கும் எனது பணிவான நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் . 

சுபம் !