ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும் - Ekadasi Vratham procedure in Tamil

ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்
ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்

ஹே , சத்யவதி ! முன் , தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காக திருப்பாற்க்கடலைக் கடைந்த காலத்தில் தோன்றிய ஆலகால விஷத்தை சிவபெருமான் தேவாசுர ஸ்த்ரீகளின் மாங்கல்யம் நிலைபெற தனது கண்டத்தில் அடக்கிய அத்தினமே ஏகாதசியாகும் . அன்றிரவு பூராவும் தேவர்கள் ஜாகரணத்துடன் சிவபெருமானைப் பூஜித்து நற்பேறு பெற்றனர் . ஆகையால் இது யாவரும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமாகும் . " சூக்தம் ஏகாதசி விரதம் " என்பது கண்ணன் திருவாக்கு .

ஆடி ஆவணி மாத பூஜை  பொருட்கள் பட்டியல் பூஜையின் பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை - pooja items should have at home part 1

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

 இந்த விரதத்தை மார்கழி மாதத்தில் சுக்லபக்ஷ ஏகாதசியை முதலாவதாகக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும் .

 மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசி ஆரம்ப ஏகாதசியாகும் . அத்தினத்தில் முற்காலத்தில் நாடிசங்கன் என்பவனின் மகன் மரு என்னும் அசுரனிடம் தோற்று ஓடிய இந்திரன் விஷ்ணுவிடம் முறையிட , அவரது திருமேனியினின்று ஒர் சக்தி , பெண்ணாகத் தோன்றி மரு என்ற அவ்வசுரனைக் கொன்று இந்திராதி தேவர்களின் துயரைப் போக்கினாள் . அதனால் அந்த சக்தியானவள் ஏகாதசியன்று பேருடையவளாய் அந்த தினத்தையும் ஏகாதசியென நோற்பிக்கும் வரத்தையும் பெற்றாள்.

ஏகாதசி விரதம் எந்த மாதத்தில் தொடங்க வேண்டும் - Monthly Ekadesi  Vratham procedure in Tamil 

 மார்கழி மாத க்ருஷ்ண பக்ஷ ஏகாதசிக்கு மோக்ஷ ஏகாதசி என்று பெயராகும் . கோகுலபுரத்தில் வசித்த வைகானஸர் என்ற ராஜருஷியானவர் இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து நற்பதவியை அடைந்தார் . 

தை , மாத சுக்லபக்ஷ ஏகாதசிக்கு புத்ரதா ஏகாதசி என்று பெயர் . அந்த ஏகாதசி தினத்தில் பத்திரவதி எனும் நகரத்தில் அரசனான சுகேதுவும் , அவனின் மனைவியான சைப்யா என்பவளும் இந்த விரதத்தை அனுஷ்டித்து புத்திரப்பேறு அடைந்தனர் . 

தை மாத க்ருஷ்ண பக்ஷ ஏகாதசிக்கு சபல ஏகாதசி என்று பெயர் . சம்பகாவதி எனும் தேசத்திய ராஜகுமாரனான ஏகலன் என்பவன் இதனை அனுஷ்டித்து தத்துவ ஞானமடைந்து மோக்ஷம் பெற்றான் . 

மாசி மாத சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு ஜய ஏகாதசி என்று பெயர் . கந்தர்வ குலத்தவனான மாலியவானும் , அவனது மனைவியான புஷ்பவதியும் இதனை அனுஷ்டித்து இந்த்ர சாபத்தால் நேர்ந்த  பிசாசஉருவம் நீங்கப் பெற்றனர்.

மாசி மாத க்ருஷ்ணபக்ஷ ஏகாதசிக்கு ஷட்ல ஏகாதசி என்று பெயர்.ஓர் ப்ராமண மங்கையானவள் இதனை அனுஷ்டித்து இஷ்ட சித்தி பெற்றாள்.

 பங்குனி மாத சுக்லபக்ஷ ஏகாதசிக்கு ஆமலக ஏகாதசி என்று பெயர் . தைதிச நகரத்திய சஸபிந்து என்ற அரசனும் ஜயந்திரபுரத்திய அரசனான விதுரனும் இதனை அனுஷ்டித்து இஷ்ட சித்தி பெற்றனர்.

 பங்குனி மாத க்ருஷ்ணபக்ஷ ஏகாதசிக்கு விஜய ஏகாதசி என்று பெயர் . ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியானவர் , இந்த விரதத்தை அனுஷ்டித்து ராவண அழிக்கச் செய்து , சீதையை மீட்டு ராஜ்யத்தை அடைந்தார்

சித்திரை மாத சுக்லபக்ஷ ஏகாதசிக்கு காமதா ஏகாதசி என்று பெயர் . நாகலோகத்திய கந்தர்வனான லலிதன் என்பவன் அனுஷ்டித்து புண்டரீகன் எனும் அரசனால் இடப்பட்ட சாபத்தினால் அடைந்த ராக்ஷஸ உருவம் நீங்கப்பெற்றான் .

 சித்திரை மாத க்ருஷ்ணபக்ஷ ஏகாதசிக்கு பாபவினாசினி ஏகாதசி என்று பெயர் . அந்த ஏகாதசியை தேவகன்னிகையான மஞ்சுளா என்பவள் அனுஷ்டித்து பாபங்கள் நீங்கப்பெற்றனள் . 

வைகாசி மாத சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு மோஹினி ஏகாதசி என்று பெயர் . தியுதிமான் என்ற அரசனும் , திருஷ்டபதி என்ற வைஸ்யனும் இதனை அனுஷ்டித்து பரமபதமடைந்தனர் . 


வைகாசி மாத க்ருஷ்ணபக்ஷ ஏகாதசிக்கு வரூதினி ஏகாதசி என்று பெயர் . அநேக பக்தர்கள் இதனை அனுஷ்டித்து வைகுண்ட பதவியடைந்தனர் .

 ஆனி மாத சுக்லபக்ஷ ஏகாதசிக்கு பாண்டவ ஏகாதசி என்று பெயர் . பாண்டவர்கள் இதனை அனுஷ்டித்து என்னை ( கண்ணனை ) த்துணையாக அடைந்தனர் . 

ஆனி மாத க்ருஷ்ணபக்ஷ ஏகாதசிக்கு அபர ஏகாதசி என்று பெயர் . அன்று நித்திரை கொள்ளாத அநேக பாதகர்கள் இதனை அனுஷ்டித்து ஸ்ரீவைகுண்டம் அடைந்தனர் .

ஆடி மாத சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு பத்ம ஏகாதசி என்று பெயர் , மாந்தாதா என்ற சக்ரவர்த்தியானவர் இதனை அனுஷ்டித்து மாதம் மும்மாரி பொழிந்து தேசம் செழிக்க அரசாண்டு வத்தார் . 

ஆடி மாதக்ருஷ்ணபசு ஏகாதசிக்கு யோகினி ஏகாதசி என்று பெயர் , யஷனாகிய ஹேமமாலியும் , அவனது மனைவியராகிய விஸாலாக்ஷியும் , ஸ்வருபையும் இதனை அனுஷ்டித்து குபேரனால் நேர்ந்த சாபத்திலிருந்து விடுபட்டனர் . 

ஆவணி மாத சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு நந்தன ஏகாதசி என்று பெயர் . மஹீஜித் என்ற ராஜன் இதனை அனுஷ்டித்து புத்திரப் பேறு பெற்றான் . 

ஆவணி மாதக்ருஷ்ணபக்ஷ ஏகாதசிக்கு கர்மீக ஏகாதசி என்று பெயர் . இந்த ஏகாதசி தினத்தில் பசியால் வாடி வதங்கி உயிர் நீங்கிய யாவரும் மோக்ஷமடைந்தனர் .

 புரட்டாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசிக்கு வாமன ஏகாதசி என்று பெயர் . விரோசனன் என்பவனின் குமாரனான மஹாபலி என்பவன் இதனை அனுஷ்டித்ததினால் மஹாவிஷ்ணுவின் திருவடி அடைந்தான் .

 புரட்டாசி மாத க்ருஷ்ணபக்ஷ ஏகாதசிக்கு அஜா ஏகாதசி யென்று பெயர் . இதனை ஹரிச்சந்திரன் அனுஷ்டித்து தனது ராஜ்யத்தை அடைந்தான் . 

ஐப்பசி மாத சுக்லபக்ஷ ஏகாதசிக்கு பாசாங்குசஸ ஏகாதசி என்று பெயர் . தர்மராஜர் இதனை அனுஷ்டித்து தன் தர்மத்தை நிலை நாட்டினார் .

 ஐப்பசி மாத க்ருஷ்ணபக்ஷ ஏகாதசிக்கு இந்த்ர ஏகாதசி என்று பெயர் . இந்திரசேனன் என்பவன் இதனை அனுஷ்டித்து தன் தந்தைக்கு ஸ்வர்க்கம் தந்தான் . 

கார்த்திகை மாத சுக்லபக்ஷ ஏகாதசிக்கு ப்ரபோதினி ஏகாதசி என்று பெயர் . இதனை அனுஷ்டித்து போக முக்தியடைந்தவர் களின் தொகை கணக்கிலடங்காது . 

கார்த்திகை மாத க்ருஷ்ணபக்ஷ ஏகாதசிக்கு ரமா ஏகாதசி என்று பெயர் . அதனை , கணவனைப் பிரிந்த சந்த்ரபாகையென்ற ராஜகுமாரி ஆனவள் அனுஷ்டித்து தன் கணவனை அடைந்து இன்புற்று வாழ்ந்தாள் , என்று பகவான் சத்யபாமைக்கு ஏகாதசி விரத மஹிமைகளை விவரமாக எடுத்துரைத்தார் .

 ஏகாதசி அன்று காலை முதல் துவாதசி காலை வரை தண்ணீர் தவிர மற்ற ஏதும் சாப்பிடாமல் அருந்தாமல் இருந்தால் . நோய் நொடியின்றி 120 வயது வரை வாழலாம் . அப்படி நோய் நொடிகளின்றி வாழ்பவர்கள்தான் எல்லா சௌகர்யங்களையும் அடைந்தவர்களாகக் கருதப்படுகின்றனர் . ஐந்தாவது அத்யாயம் முற்றிற்று.