Download Now
KARTHIKA PURANAM TAMIL CHAPTER 5 pdf
KARTHIKA PURANAM TAMIL CHAPTER 5 pdf

கார்த்தீக புராணம் ஐந்தாவது அத்யாயம்

பகவான் இவ்வாறாகச் சொன்னதைக் கேட்ட சத்யபாமையானவள் , மிகவும் சந்தோஷித்து பெருமகிழ்ச்சி அடைந்து , ஹே நாதா ! தாங்கள் இந்தக் கார்த்தீக புராண மஹிமையை இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று கேட்க , அப்படியே ஆகட்டும் என்று கண்ணபிரான் உத்சாகத்துடன் சொல்லத்துவங்கினார்.

ஓ பாமா ! ஒரு நாள் பிருது மஹாராஜாவானவர் , நாரதரைப் பார்த்து ஹே ! முனிபுங்கவா ! தாங்கள் இதுவரையில் சொன்ன சத்ய வாக்கியங்களைக் கேட்டு மனம் பூரிப்படைந்தேன். இன்னும் இன்னின்ன மாதங்களில் செய்யவேண்டிய ஸ்தான விதிகளும் , கார்த்தீக விரதத்தின் நியமங்களையும் , அனுஷ்டா னங்களையும் விதிப்படி எடுத்துரைக்க வேண்டுமென விநயத்துடன் கேட்க , நாரதர் பிருது மகாராஜரைப் பார்த்து சொல்லத்துவங்கினார் பகவானைதயானித்துக்கொண்டே ... 

Karthika Puranam Tamil Adyam 1-30 pdf

ஹே ராஜனே ! நீயே விஷ்ணுவின் அம்சமாக விளங்குகிறாய் . உனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை . என்றாலும் , தர்ம சிலளாகிய உனக்கு நானறிந்த வரையில் சொல்கிறேன் கேள் , ஓ , ராஜனே ! கார்த்திக விரதத்தை அனுஷ்டிப்பவன் ஐப்பசி , கார்த்திகை ஆகிய இரண்டு மாதங்களிலே வரும் சுகலபக்ஷ பாசாங்குஸ ப்ரபோதினி என்னும் ஏகாதசியன்று பசி , தாகம் , நித்திரை முதலிய விஷயங்களில் மனதைச் செலுத்தாமல் , பிராத காலத்தில் நித்ரையை விட்டெழுந்து , ஒரு செம்பில் ஜலத்தை எடுத்துக்கொண்டு தான் வசிக்கும் வீட்டிற்கு தென் மேற்கான நைருதி திக்கில் சென்று மலவிசர்ஜனம் செய்ய வேண்டும் . அதுசமயம் பூணூலை வலது காதில் சுற்றிக் கொண்டும் , அங்க வஸ்திரத்தை தலையில் கட்டிக்கொண்டும் , புற்கள் நிறைந்து வளர்ந்துள்ள இடத்தில் பெருமூச்சு விடாமல் வாயை மூடிக்கொண்டும் , " காலையில் வடக்குத் திக்கை நோக்கியும் , மாலையில் தெற்குத் திக்கை நோக்கியும் , உட்கார்ந்து மலஜலம் கழிக்கவேண்டும் " பின்னர் கால் , கைகளை சுத்தம் செய்துகொண்டு , தந்த சுத்தி செய்து கொள்ள வேண்டும் . அதாவது முக சுத்தி , தந்த சுத்தி , ஜிஹ்வா சுத்தி என்று மூன்று சுத்திகளுண்டு . அம்மூன்று சுத்திகளையும் முறையே செய்து கொள்ளவேண்டும் . ஏனெனில் அப்படிச் செய்வதால் பூர்ணமான ஆயுள் , தேஹ பலம் , கீர்த்தி , புத்ர சம்பத்து, பசு விருத்தி , தான்ய விருத்தி , தனம் , ஞானம் , நிலையான கீர்த்தி முதலியவை உண்டாகும் . அப்படிச் செய்யத் தவறினால் விரத பங்கமேற்பட்டு , தர்மமும் வீணாகும் . தவிர மந்திர ஜபமும் பலனைத் தராது போகும் . ஆகையால் ஒவ்வொருவரும் தவறாமல் இம்மூன்று சுத்திகள் செய்து கொள்ளவேண்டும் . தந்த சுத்தி செய்துகொள்ள பாலுள்ள குச்சியாக பணிரெண்டு அங்குல நீளமுடையதான குச்சியால் பல் துலக்கவேண்டும் . நிஷித்த தினமாகிய ப்ரதமை , அமாவாஸ்யை , பௌர்ணமி , சஷ்டி , நவமி ஆகிய திதிகளிலும் , ஞாயிற்றுக்கிழமையிலும் , க்ரஹண காலத்திலும் , பாலுள்ள குச்சி ஆகாது . மேலும் , கண்டகி என்ற முள்ளந்தண்டு , பஞ்சு , வெண்ணொச்சி , புரசு , ஆமணக்கு முதலிய மரக்குச்சிகளால் பல் விளக்கக்கூடாது . இம்முறைப்படி விரதம் அனுஷ்டிப் போரும் , மற்றோரும் தந்த சுத்தி செய்து , ஜிஹ்வா சுத்தி ( நாக்கை வழித்து கபத்தை கழித்தல் ) யும் , முகத்தையும் நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும் . பின்னர் , ஸ்நானம் செய்து நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு பகவானை ஆராதிக்க வேண்டும்.

ஓ , பாமா ! இனி பூஜாவிதிகளைப்பற்றிச் சொல்கிறேன் கேள் , என்று பகவான் சொல்லலானார் . ஹே , ப்ரியே ! பகவானுக்குப் பூஜை செய்யும் போது மிகுந்த பயபக்தியுடன் , அர்க்யம் , பாத்யம் , கந்தபுஷ்ப தாம்பூலாதிகளால் முறைப்படி ஷோடஸ உபசாரங்களோடும் , தத்வமார்க்கமாக ஸ்தோத்ரம் செய்தும் பூஜிக்கவேண்டும் . இன்னும் , பதினெட்டு வித வாத்யங் களுடன் நர்த்தன கீதங்களால் பகவானை சந்தோஷிக்கச் செய்யவேண்டும் . அப்படி ஆராதனை செய்கிறவர்கள் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்குச் சமானமான நிலையை அடைவார்கள் . லோகத்தில் மானிடர்கள் நன்மைகள் அடைவதற்கு பகவானால் தபம் , ஞானம் , யக்ஞம் , தானம் முதலிய நான்கு வித வழிகள் சொல்லப்பட்டுள்ளது . க்ருத யுகத்தில் தபம் செய்தாலும் , த்ரேதா யுகத்தில் ஞானமார்க்கத்தை கடை பிடிப்பதாலும் , த்வாபர யுகத்தில யக்ஞம் செய்வதாலும் , கலியுகத்தில் தானம் மற்றும் நாமஸ்மரணம் செய்வதாலும் ஜீவன் முக்தனாகின்றான் என்று முக்கியமென்று சாஸ்திரங்கள் கூறியிருக்கின்றன . மேலும் கலியுகத்தில் பகவத்பக்தியே பிரதானமென்றும் அறிந்து கொள்ளவேண்டும் . மேலும் , ஒரு காலத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் நாரதரைப்பார்த்து , ஹே . நாரத முனிவரே நான் வைகுண்டத்தில் மாத்திரம் வசிப்பவன் அல்ல . கோடானு கோடி ஜீவராசிகளிடத்திலும் அந்தர்யாமியாக வாசம் பண்ணுகிறேன் . அதிலும் முக்கியமாக யோகிகளின் ஹ்ருதய கமலத்திலும் , என்மீது அத்யந்த பக்தியுள்ள பகவத் பக்தர்களுடைய ஹ்ருதய கமலத்திலும் , சதா வாசம் பண்ணிக் கொண்டிருக்கிறேன் .

பகவந் நாம ஸங்கீர்த்தனம் பண்ணுகின்ற இடத்திலும் நான் சதா வசிப்பவன் . எனது பக்தர்கள் செய்யும் பூஜைகளையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் . எனது திவ்ய சரிதங்களையும் நாம சங்கீர்த்தனங்களையும் ச்ரவணம் செய்து கொண்டே ப்ராணனை விடுபவர்கள் விஷ்ணு வம்சத்தில் பிறந்து புகழுடன் வாழ்வார்கள் . என்று மஹா விஷ்ணுவானவர் நாரதரிடம் கூறியதை உனக்கு எடுத்து உரைக்கிறேன் . ஹே . பாமா ! இனி பகவானுக்கும் , மற்றுமுள்ள தேவர்களுக்கும் பூஜிக்கவேண்டிய பத்ர புஷ்பங்களின் வகைகளைக் கூறுகிறேன் . கேட்பாயாக என்று புன்னகை மாறாமல் சொல்லலானார் . ஹே பரிய , நாயகியே , பொதுவாக வாகை , வெள்ளைக் காக்கணத்தி , மல்லிகை , தாமரை , எருக்கம் முதலிய பத்ர புஷ்பங்களைக் கொண்டு தேவார்ச்சனை செய்யவேண்டியது . இவைகள் கிடைக்காத பட்சத்தில் அட்சதைகளால் பூஜிக்கலாம் . முக்கியமாக விஷ்ணுவிற்கு துளசியும் , ப்ரம்மாவிற்கு தாமரையும் , சிவனுக்கு வில்வமும் , சூர்யனுக்கு செந்தாமரையும் , சந்திரனுக்கு வெள்ளை அல்லியும் , அங்காரகனுக்கு செண்பக புஷ்பமும் , புதனுக்கு வெண்காந்தல் மலரும் , வியாழனுக்கு முல்லையும் , சுக்ரனுக்கு வெண் தாமரைப் புஷ்பமும் , சனிச்வரனுக்கு கருங்குவளையும் , ராகுவிற்கு மந்தாரைப் புஷ்பமும் , கேதுவிற்கு செவ்வல்லி மலரும் , பூஜிப்பதற்கு உசிதமானவைகள் . இவ்விதமாக அந்தந்த தேவதைகளுக்கு அந்தந்த மலரைக் கொண்டும் , இலையைக் கொண்டும் , அர்ச்சித்து மிக்க பயபக்தியோடு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து , ஹே கருணாநிதே ! நான் செய்துள்ள பூஜார்ச்சனைகளில் மந்திரத்திலோ , க்ரியைகளிலோ , பக்தியிலோ ஏதாவது குற்றம் குறை எற்பட்டிருந்தாலும் மன்னித்து நான் செய்த பூஜையை சம்பூர்ணமாக ஏற்றுக் கொண்டு என்னைப் புனிதனாக்கி , கடைத்தேற்ற வேண்டும் என்று ப்ரார்த்தித்து , பிரதக்ஷிணம் செய்து ஆடிப்பாடி பகவானை சந்தோஷிக்கச் செய்யவேண்டும் . இவ்விதமாக பகவானைப் பூஜிக்கிறவர்கள் இஹத்திலும் , பாத்திலும் பரமசுகத்தை சிவ பூஜை முதலியவைகளைச் செய்பவர்கள் , அவர்களின் அனுபவிப்பார்கள் . மேலும் கார்த்திகை மாதத்தில் ஹரிபூஜை , முன்னோர்களுடன் கூடி அநேக கோடி கல்பகாலம் ஸ்ரீவைகுண்ட வாசம் பண்ணுவார்கள் . ஹே , பாமா ! இனி நாரதர் பிருது மஹாராஜனுக்கு உரைத்த தீரத்த மஹிமைகளையும் ஸ்நான விதியையும் சகல ஏகாதசி
மஹிமையும் கூறுகிறேன் கேள்! என்று கண்ணபிரான் பாமையிடம் சொல்லத்துவங்கினார்.

சகல ஏகாதசி விரதம் விவரம் பற்றி அடுத்த பதிவில் காண்போம்