KARTHIKA PURANAM TAMIL BOOK CHAPTER 6
KARTHIKA PURANAM TAMIL BOOK CHAPTER6 

கார்த்தீக புராணம் ஆறாவது அத்யாயம்

கங்கா ஸ்நான மஹிமை

 ஓ பாமாமணி ! பஞ்ச உஷத்காலத்தில் ( காலை 4.00 மணிமுதல் 6.00 மணிக்குள் ) நித்திரை  விட்டெழுந்து எள் , தர்ப்பை , அக்ஷதை , சந்தனம் , புஷ்பம் முதலியவைகளை எடுத்துக் கொண்டு புண்யமான பாகீரதி எனும் கங்கையை அடைந்து ஸ்ரீமஹா விஷ்ணுவை மனதில் நினைத்து ஸ்நானம் செய்து நித்யகர்மாக்களை அனுஷ்டித்து தீர்த்த தேவதைகளின் ப்ரீதிக்காக கமலா பதியாயும் ஷீராப்திசயனராயும் ருஷீகேசராயும் விளங்குகின்ற ஸ்ரீமந் நாராயணனை த்யானித்து வணங்கி அர்க்யம் கொடுக்கவேண்டும் . அப்படிச் செய்வதால் பகவானுக்கு ப்ரீதி ஏற்பட்டு நமது இஷ்டங்களை பூர்த்தி செய்வார் . மேலும் , பகவான் வைகுண்டத்திலும் , ப்ரயாகையிலும் பத்ரி ஆஸ்ரமத்திலும் , துவாரகையிலும் , பக்தர்களின் ஹ்ருதயகமலத்திலும் சதா வாசம் பண்ணுகிறார் . அந்த பகவானுக்கு ஆதியும் இல்லை . அந்தமும் இல்லை . அவர் , ரிஷி ஸ்ரேஷ்டர்கள் செய்யும் யக்ஞம் , யாகம் , தபம் முதலியவைகளை எல்லா தேவர்களுடன் ப்ரசன்னமாக இருந்து ரக்ஷித்து வருகிறார் .

Karthika Puranam Story - Tamil - chapter 4 pdf

ஹே , பாமா ! எவனொருவன் கார்த்திகை மாதத்தில் ஸ்நான முறைப்படி ஸ்நானம் செய்து ஹே க்ருஷ்ணா ! ஹே கோவிந்தா என்னால் செய்யப்பட்ட ஸ்நானம் ஜபம் , தபம் , நித்ய நைமித்திக சத்கர்மாக்கள் , தானம் , தர்மம் முதலியவை களின் பலத்தை யாவும் தங்களுக்கே சமர்ப்பிக்கிறேன் . இதை ஏற்றுக்கொண்டு என்னை அனுக்ரஹிக்க வேண்டும் என்று சொல்லி தீர்த்தத்தை கையில் எடுத்துக்கொண்டு பகவானுக்கு அர்கயப்ரதானமளிக்கிறானோ அவன் மறு பிறப்பின்றி சாஸ்வதமாக வைகுண்டத்தில் ஸ்வர்க்க போகத்தை அனுபவிப்பான் .

 ஹே பாமா ! இன்னும் கேள் . இந்த பாகீரதி என்ற கங்கையானது மிகவும் பரிசுத்தமானது . இந்தத் தீர்த்தத்தில் சிவனும் , விஷ்ணுவும் , சூர்யனும் வாசம் செய்கிறார்கள். கங்கையில் ஸ்நானம் செய்யும்போது நாபி அளவிற்கு மேல்போகாத ஆழத்தில் இறங்கி முறைப்படி ஸ்நானம் செய்ய வேண்டும் . கார்த்திக வரதம் அனுஷ்டிப்பவர்கள் கார்த்தீக மாதத்தில் வரும் த்விதியை , சப்தமி , அஷ்டமி , நவமி த்ரயோதசி , அமாவாஸ்யை , பௌர்ணமி முதலிய திதிகளில் எள், நெல்லிப்பருப்பு இவைகளைக் கொண்டு ஸ்நானம் செய்யக்கூடாது . சரீர சுத்திக்காக முதலில் ஒருதரம் ஸ்நானம் செய்து பின் மந்திரங்களைச் சொல்லி ஸ்நானம் செய்ய வேண்டும் . வைதீகர்கள் வேத மந்திரங்களைச் சொல்லிக் கொண்டும் , வைதீகமல்லாதவர்களும் ஸ்திரீகளும் பாலர்களும் புராண மந்த்ரங்களைச் சொல்லி ஸ்நானம் செய்ய வேண்டும் . 

"ஸ்நான மந்தரம் : வீட்டில் கிணற்றங்கரையிலோ ( அ ) குளிக்கும் அறைகளிலோ ( அ ) ஓடும் நதி தீரத்திலோ ( அ ) குளங்களிலோ ( அ ) ஸமுத்ரத்திலோ ( அ ) புண்ய நதிகளிலோ எந்த இடத்தில் குளித்தாலும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்."

Vishnu 108 names in Tamil pdf / 108 பெருமாள் பெயர்கள் தமிழ் pdf

ஸ்நான மந்திரம்


த்ரிதா பூ'த்தே'வகார்யார்த்த'ம்ய : புராபக்தபா'வன :
ஸோவிஷ்ணுஸ்ஸர்வபாபக் ந : புநாதுக்ருபயாத்ரமாம்
விஷ்ணோராக் ஞாம் அநுப்ராப்ய கார்த்தீகவ்ரதகாரகான்
ரக்ஷந்தி தே வாஸ்தே ஸர்வேமாம் புனந்து சவாஸவா :
வேத மந்த்ராஸ்சபீ ஜாஸ் சஸரஹஸ்யாமகா'ன்விதா :
கஸ்யபாத் வ்யாஸசமுனயோமாம் புனந்து சதேவதா :
கங்கா'த் யஸ்ஸர்வஸரித : தீர்தா'னி ஜலதா ' நதா ' : 
ஸஸப்தஸாக ராஸ்ஸர்வே மாம் புனந்து ஜலாஸயா :
பதிட்வரதாஸ்த்வதி'த்யாத்'யா : யக்ஷஸித்தா'ஸ்ஸபன்னகா ' : 
ஓஷத்'ய : பர்வதாஸ்சாபிமாம் புனந்து த்ரிலோகஜா !

என்கின்ற ஐந்து மந்த்ர ஸ்லோகங்களைச் சொல்லி ஸ்நானம் செய்து முடித்து சுத்த வஸ்திரங்களை அணிந்து கொண்டு , ஹே பகவான் ! இந்திராதி தேவர்களே ! நான் கார்த்தீக விரத தர்மத்தை விடாது அனுஷ்டிக்கவும் , சதா தங்கள் பாதசேவையை மறவாதிருக்கவும் அருள் புரிய வேண்டும் . வேதங்களின் மந்திர சித்தி பெற்ற ஒ முனீஸ்வரர்களே ! தாங்களும் , சகல தேவர்களும் என்னை ரட்சித்தருள வேண்டும்

கங்கை முதலிய மஹாநதிகளும் சப்த ஸாகரங்களும் , என்னை புனிதமாக்கி அருள்புரிய வேண்டும் . உத்தமமான பதிவிரதைகளும் , ஏகாதச ருத்திரர்களும் , த்வாதஸ ஆதித்யர்களும் , யக்ஷகின்னர கிம்புருஷ பன்னக சித்தர்களும் , கந்தர்வர்களும் , சகலவிதமான ஒளஷதிகளும் , மஹா பர்வதங்களும் என்னை ரட்சித்து அருள் புரிய வேண்டும் . 

ஹே . பரந்தாமனே ! உனது திவ்யபாத கமலத்தில் சேர்த்து என்னை ஆட்கொள்ள வேண்டும் . என்று பிரார்த்தித்து கையில் பவித்ரத்தை தரித்துக்கொண்டு , அக்ஷதைகளால் தேவ ரிஷிகளையும் , எள்ளால் பித்ருக்களையும் உத்தேசித்து தர்ப்பணம் செய்யவேண்டும் . எள்ளு அதிகமாய் உபயோகித்து தர்ப்பணம் செய்வதால் , பித்ரு தேவதைகள் மிகவும் திருப்தி யடைந்து , அனேக கோடி கற்பகாலம் வரை ஸ்வர்க்கத்தை அனுபவிப்பர் . பின்னர் பகவானுக்கும் , தீர்த்த தேவதைகளுக்கும் கந்தமூல கனிவர்க்கங்களுடனும் , சந்தன புஷ்ப தாம்பூலாதிகளுடனும் பூஜித்து பகவானைப் பிரார்த்தித்து , ஹே . பகவான் தாங்கள் லக்ஷ்மீ சமேதராய் பிரசன்னமாகி என்னால் கொடுக்கப்படும் அர்க்யத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறி அர்க்யப்ரதானம் கொடுக்கவேண்டும் . பின்பு வைதீக உத்தமர்களுக்குத் தம்மால் இயன்ற அளவு தான தருமங்கள் செய்யவேண்டும் .

 பூஜிக்கும் விதத்தை விவரமாகக் கேள் .முதலில் அவர்களை கிழக்கு முகமாக நிற்கச்செய்து பாத ப்ரக்ஷாடனம் செய்ய வேண்டும் . ஏனெனில் , வைதீக உத்தமர்களுடைய வலது பாதத்தில சகலவிதமான தீர்த்தங்களும் , இடது பாதத்தில் தீர்த்த அதிதேவதைகளும் , முகத்தில் வேத சாஸ்திரங்களும் , மற்ற அங்கங்களில் எல்லாத் தேவர்களும் நிறைந்திருப்பதாலும் அவர்களை சாக்ஷாத் ஸ்ரீமஹாவிஷ்ணுவாகவே நினைக்க வேண்டும் . எந்தவொரு காலத்திலும் அவ்வைதீக பிராமணர்களை நிந்திக்கக்கூடாது . அப்படி நிந்திப்பவர்கள் பிரம்ம ஹத்தி தோஷம் அடைந்தவர்களாய் ரௌரவாதி நரகத்தை அடைவார்கள் . கார்த்தீக விரதத்தை அனுஷ்டிப்பவன் , இவ்விதமாக வைதீக பிராஹ்மணர்களுக்கு பூஜை செய்து , தான தருமம் கொடுத்து விஷ்ணு புராணங்களை ஸ்ரவணம் செய்யவேண்டும் . மேலும் , விஷ்ணு புராணங்களைச் சொல்லுகிற பௌராணிகர்களையும் பூஜித்து , தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்று , ஷோடஸ உபசாரங்கள் செய்து அன்னமிடவேண்டும் . இவ்விதமாக முறை தவறாமல் விரதத்தை அனுஷ்டிப்பவன் விஷ்ணுவிற்குச் சமமான தேஜசையும் சக்தியையும் அடைவான் . இந்த விரதம்தான் விஷ்ணுவிற்கு மிகவும் ப்ரீதியானது . இதைக் காட்டிலும் உயர்ந்த விரதம் இப்பூவுலகத்தில் வேறு கிடையாது . மேலும் , இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் தாபஜ்வரம் , அதிசாரம் , குன்மம் , க்ராணி , மேகம் , மாந்தம் , வாதம் , கன்ன சூலம் , நாசி சூலம் , மூலக்ரந்தி , பாண்டு , க்ஷயம் , பித்தம் , பைத்தியம் , ச்லேஷ்மம் , குஷ்டம் , வெண்குஷ்டம் , ரத்த குஷ்டம் , கருங்குஷ்டம் , புளு குஷ்டம் , நேத்ர ரோகம் , கர்ணரோகம் முதலிய ஸகல விதமான வியாதிகளும் நிவர்த்தியாகும் . அபம்ருத்யு தோஷம் விலகி சகல சம்பத்தும் வந்தடையும் .

ஹே பாமா ! இன்றும் தேவர்களும் மூவர்களும் இவ் விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள் . இக்கலியுகத்தில் மானிடர் யாவரும் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் , புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு விசேஷமாக சந்தான வ்ருத்தியும் , சுமங்கலிகளுக்கு சகல தனதான்ய சம்பத்தும் , பதிபக்தியும் , தேவபக்தியும் உண்டாகும் . கன்னிகைகளுக்கு நல்ல புத்தியும் , கல்வியும் நல்ல வரனும் ஏற்படும் . அமங்கலிகளுக்கு ஞான வைராக்யம் சித்திக்கும் . கடைசியில் யாவருக்கும் பகவான் தனது சாம்ராஜ்ய பதவி தந்து அருள்புரிவார் என்று , பகவான் , நாரத முனிவர் ப்ருது மஹாராஜருக்குச் சொன்ன கங்கா தீர்த்த ஸ்நான மஹிமையை பாமைக்கு கீதாசார்யன் எடுத்துரைத்தார் .

ஆறாம் அத்தியாயம் முற்றிற்று