karthika puranam adhyayan 11 in tamil pdf
karthika puranam adhyayan 11 in tamil pdf

கார்த்திகா புராணம் அத்தியாயம் 11 தமிழில்

கேளாய் , பாமா ! அந்த ஜலந்தரனானவன் தன் சேனா சமூகங்களுடன் மேரு பர்வதத்தின் குகையை நாடி வருவதைத் தேவர்கள் மூலம் அறிந்த தேவேந்திரனானவன் , அதிக பயப்ராந்தியுடன் கூடினவராய் ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து ஸ்தோத்ரம் செய்தார் .

"சஸங்க சக்ரம் ச கிரீடகுண்டலம் , ஸபீதவஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம் ! ஸஹார வக்ஷஸ்தல சோபிகௌஸ்துபம் , நமாமி விஷ்ணும் சிரஸாசதுர்புஜம் !!" 

சங்கு , சக்ரம் , கதை , கத்தி , வில்லைத் தாங்கிக்கொண்டும் , மகர , கிரீட குண்டலங்களுடனும் , வைஜயந்தீ மாலையை தரித்துக்கொண்டும் , ஸ்ரீவாத்ஸம் என்னும் மருவில் தன் ப்ரிய பத்னீ லக்ஷக்ஷ்மீயை மார்பினில் தாங்கிக்கொண்டும் , தங்க வர்ணத்தில் மின்னும் பட்டு பீதாம்பரத்தை தரித்துக்கொண்டும் நான்கு கைகளுடன் விளங்கும் அகிலலோக தலைவனான ( நெற்றியை ) வைத்து வணங்கிப்போற்றுகின்றேன் .

karthika puranam adhyayan 11 in tamil pdf download link given at bottom

இங்கு இப்படியிருக்க , ஸ்ரீவைகுண்டத்தில் பகவான் லக்ஷ்மியுடன் கூட மிகுந்த களிப்புடன் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்கையில் , சட்டென எழுந்து தேவர்களின் அபயக்குரல் கேட்டு லச்சுமியை நோக்கி , சதி / இந்திராதி தேவர்கள் , ஜலந்தரனுக்குப் பயந்து மேரு பர்வதத்தின் குகையில் வாசம் செய்கிறார்கள் . தேவர்கள் மறைந்து மேருவின் குகையில் இருப்பதை அறிந்த ஜலந்தரன் தன் சேனைகளை திரட்டிக்கொண்டு வருவதையறிந்து தேவர்கள் மறுபடியும் அவர்களுடன் யுத்தம் செய்ய சக்தியற்றவர்களாய் தங்களை காப்பாற்றுமாறு என்னை துதிக்கிறார்கள் . மேலும் , அந்த ஜலந்தரனோ உனக்குத் தமையன் . நீயோ அவனுக்குத் தங்கை . இப்படியிருக்க நான் எப்படி அவனோடு யுத்தத்திற்குச் செல்வது ? என்று யோசிக்கிறேன் எனக்கூற , அதற்கு லக்ஷ்மியானவள் நாதா ! நானோ உமக்குப் பத்தினி . ஜலந்தரனோ உமக்கு மைத்துனன் . நீங்களோ பக்தர்களுக்கு அபயஹஸ்தம் கொடுப்பவர் . ஆகையால் தேவர்களுக்குச் சஹாயமாக யுத்தத்திற்குச் சென்றால் , என் தமையனான ஜலந்தரன் உமது கையால் கொல்லப்படுவது நிச்சயம் என்று சொல்ல . 

விதுர நீதி தமிழில் pdf download - யார் மூடர்?

அதற்குப் பகவான் , ப்ரியே ! ஆம் , அப்படியும் ஆகலாம் . இருந்தாலும் நீ அவன்மேல் இருக்கும் ஓர் பாசத்தாலும் ப்ரம்மாவின் வரப்ரசாதத்தாலும் , மேலும் அவன் சாம்பவ மூர்த்தயினுடைய கபாலக்னியின் சக்தியாலும் உண்டானவன் . ஆகையால் அந்த ஜலந்தரனானவன் சிவனைத் தவிர மற்றவர்களால் கொல்லப்பட மாட்டான் . இது நிச்சயம் . ஆகையால் நீ எதற்கும் பயப்பாடாதே என்று லக்ஷக்ஷ்மிக்கும் தைரியம் கூறி , அவளிடம் விடைபெற்று , கருடன்மேல் அமர்ந்து தேவர்கள் அடைக்கலம் புகுந்த குகையை அடைந்தார் .
தேவர்களும் மஹாவிஷ்ணுவைக் கண்ட மாத்திரத்தில் அபயம் அபயம் எனச் சரணாகதி அடைந்தார்கள் . அவர்களை விஷ்ணுவானவர் அபயஹஸ்தம் கொடுத்து , இந்த்ராதி தேவர்களே அஞ்சாதீர்கள் . எல்லாவற்றிற்கும் நான் இருக்கிறேன்.நிர்பயமாக இருங்கள் என்று தேறுதல் சொன்னார் . இப்படியிருக்க , ஜலந்தரன் குகைக்கு முன் யுத்தகளம் அமைத்து தம் கூடாரத்தை கட்டிக்கொண்டு இருந்தான் மறுநாள் யுத்தம் ஆரம்பித்தது . தேவர்களும் , அசுரர்களும் தங்கள் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு யுத்தம் செய்து கொண்டிருக்கும் சமயம் மஹா விஷ்ணுவானவர் கருடாரூடராய் யுத்தகளத்தை நாடிவரும் போது கருடனுடைய வேகக் காற்றினால் சூழ்ந்திருந்த மேகங்களெல்லாம் மூலைக்கு ஒன்க சிதறி சின்னாபின்னமாக மறைந்ததாம் . அங்கிருந்த இலந்னுடைய சைன்யமும் குராவளிக்காற்றினால் அடிபட்டு உருண்டு பறப்பதுபோல் நிற்கவொட்டாமற் பயப்ராந்தியுடன் மூலைக்கு ஒருவராய் ஓடலானார்கள் . இவ்வாறு தன் சேவைகள் ஓடுவதைக்கண்ட ஜலந்தரன் என்ற அசுரன் , அவர்களை ஓடிப்போகவிடாது அமர்த்தி , ஆகாசத்தை அண்ணாந்து பார்க்க , மஹாவிஷ்ணுவானவர் கருடன் மேலேறி யுத்த சன்னத்தராய் வருவதைக்கண்டு கண்களில் தீப்பொறி பறக்க , உடனேகையில் துடைய பாணத்தை எடுத்து அஸ்திரத்தைத் தொடுத்து அக்கருடன் மீது /  ப்ரபோஹித்தான் . மஹாவிஷ்ணுவானவர் , இவனுடைய பராக்ரமத்தை அறிந்து , கருடனை சற்று விலகிப் போகும்படிக்க நின்ற சைகை செய்ய , அப்படியே கருடன் திசைமாற யாதொரு  அபாயமும் இன்றியிருக்க அதைக்கண்ட ஜலந்தரன்  விஷ்ணுவை நோக்கி அம்பெய்ய அதற்கு விஷ்ணுவானவர் மஹா கோபத்தை உடையவராய் வில்லேந்தி ஜரந்தரனுடைய த்வஜத்தையும் , தனுசையும் தன் ஒரே பாணத்தால் சோதித்து ஜலந்தரன் மார்பில் ஓர் பாணத்தை விட அதற்கு ஜலந்தரன் சளைக்காது கதாபாணியாகி ஆகாயத்தில் கிளம்பி , தன் கதையால் கருடனுடைய சிரஸ்ஸில் தாக்கினார் . அடிபட்ட கருடன் மூர்ச்சையடைந்து கீழே விழுந்தது . இதனால் விஷ்ணுவிற்கு கோபம் பொங்கி , தன் கட்காணுயுதத்தால் ஜலந்தரனுடைய கதாயுதத்தை சோதித்தார் . பின் ஜலந்தரன் மஹா வீரத்துடன் தன் முஷ்டியினாலே விஷ்ணுவின் மார்பில் தாக்கினான் . இப்படியிருக்க , சில நேரம் மஹாவிஷ்ணுவிற்கும் , ஜலந்தரனுக்கும் மல்யுத்தம் , முஷ்டியுத்தம் நடந்தது . அப்போது பூமி எங்கும் அதிர்ச்சி உண்டாகியது .

கார்த்திகா புராணம் தமிழில் நான்காவது அத்யாயம்

இப்படியாக யுத்தம் நடக்கையில் பகவான் பேரிரைச்சல் கூடினவராய் தனது பாணத்தை ஜலந்தரன் மீது ப்ரயோகிக்க ,ஜலந்தரனானவன் தானும் ஒரு கணைவிடுத்து அப்பாணத்தையும் சேதிக்கவே , விஷ்ணுவானவர் மனதில் அதிக சந்தோஷம் அடைந்து ஜலந்தரனைப் பார்த்து , அப்பா ஜலந்தரா ! உன்னுடைய தீரவீர பராக்ரமத்தால் நீ கொஞ்சமும் சலிக்காமல் , யுத்தம் செய்வதைக்கண்டு மனமகிழ்ந்தேன் . ஆகையால் , உனக்கு வேண்டிய வரத்தைக்கேள் தருகிறேன் என , ஐயனே ! அப்படி தாங்கள் வரம் தருவது நிச்சயமாகில் , நான் கோரியதை தாங்கள் தரவேண்டும் என , அதற்கு மஹா விஷ்ணுவானவர் சம்மதித்து அப்படியே தருகிறேன் என்று வாக்களிக்க , ஜலந்தரனானவன் பிரபுவே ! அப்படியானால் இந்திரனிடம் இருக்கும் ஐஸ்வர்யங்களும் , தாங்களும் லக்ஷக்ஷ்மீ சமேதராய் தேவாதி தேவர்களுடன் என் பட்டணத்தில் வந்து சதா வாசம் செய்யவேண்டும் என்று கேட்க , மஹா விஷ்ணுவானவர் அப்படியே பெற்றுக் கொள் என்று வரத்தைத் தந்து லக்ஷக்ஷ்மீயை நினைக்க , உடனே லக்ஷக்ஷ்மீதேவியும் வந்துசேர மஹாவிஷ்ணுவானவர் லக்ஷ்மீ சமேதராயும் இந்திராதி தேவர் களுடனும் ஜலந்தரனுடைய பட்டணமாகிய ஜோதிபுரியை அடைந்து வாசம் செய்யலானார் . ஜலந்தரனானவன் , தேவர்களை எல்லாம் தன் வசமாக்கிக்கொண்டு , தேவேந்திரன் பட்டண போல் ஜொலிக்க நின்ற தன் பட்டணத்தில் யாதொ குறையுமின்றி அரசு செலுத்தி வரலானான் என்று பகவா பாமையிடம் சொன்னார் .

பதினோறாவது அத்தியாயம் முற்றிற்று

Download Now