Download Now
Karthika Puranam in tamil pdf - chapter 10
Karthika Puranam in tamil pdf - chapter 10

கார்த்திகபுராணம் - பத்தாவது அத்யாயம்

கேளாய் , பாமா ! இப்பேர்ப்பட்ட வைபவங்களுடன் ப்ருந்தையை மணந்து கொண்ட ஜலந்தரனானவன் மிகவும் ப்ரீதியுடன் பிருந்தையோடு கூடிக்குலாவி ஆனந்த பரிதனாகி மிக்க திறமையுடனும் நீதியுடனும் தனது நாட்டை ஆட்சி  செய்து வரலானான்

இவ்வாறு ஜலந்தரனானவன் அரசாட்சி புரிந்து வருகையில் , பூர்வத்தில் தேவர்களால் தோற்கடிக்கப்பட்டு , பாதாள லோகத்தில் மறைந்து வசித்து வருகிற ராட்சஸர்கள் யாவரும் ஜலந்தரனுடைய அரசாட்சியைப்பற்றி கேள்வியுற்று , மிக்க சந்தோஷத்துடன் கூடியவர்களாய் ஜலந்தரன் ஆட்சி புரிந்து வருகிற ஜோதிபுரிக்கு வந்து சேர்ந்து , ஜலந்தர மஹராஜனைக் கண்டு தங்களுக்கு தேவர்களால் ஏற்பட்ட தோல்விகளையும் ,இன்னல்களையும் எடுத்துக்கூற , ஜலந்தரனும் அந்த ராட்சஸர்களை அன்புடன் உபசரித்து ஒருவித பயமுமின்றி தனது ராஜ்யத்திலேயே வசித்து வர உத்திரவு கொடுக்கவே அந்த ராக்ஷசர்களும் அவ்வாறே வாழ்ந்து வரலானார்கள் . ஜலந்தரனும் நீதி தவறாது ஆட்சி புரிந்து வந்தான் .

LALITHA TRISHATI LYRICS IN TAMIL PDF & VIDEO / ஸ்ரீ லலிதா த்ரிசதீ ஸ்தோத்ரம்

அப்படியிருக்கையில் , ஒரு நாள் நாரத மஹருஷியானவர் பஞ்ச உஷக்காலத்தில் எழுந்து கங்கைக்குச் சென்று நீராடி சந்த்யாவந்தன ஜபதப அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வைகுண்டத்திற்கேகி லக்ஷ்மீ சமேதராக விளங்கும் ஸ்ரீமந் நாராயணனை நமஸ்கரித்து அன்னவரின் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் சத்யலோகம் சென்று தன் மாதாபிதாவாகிய சரஸ்வதி தேவியையும் பிரம்மாவையும் அடிபணிந்து வணங்கி அன்னவர்கள் ஆசியையும் பெற்று , அங்கிருந்து கைலாசத்தை அடைந்து உமா மஹேஸ்வரர்களைக் கண்டு தாழ்பணிந்து வணங்கி ஆசி பெற்று அங்கிருந்து புறப்பட்டு அமராவதி பட்டணத்தின் வழியாக வந்து ஆங்காங்குள்ள அற்புதங்களைக் கண்டுகளித்து , தனது காரியமாகிய கலகத்திற்கு இதுவரையில் ஒருவிதமான நிகழ்ச்சியும் ஏற்படவில்லையே என மனம் கலங்கி சற்று யோசித்து , இன்று ஒரு கலகத்தை விளைவிக்காத பட்சத்தில் எனது தந்தையின் சாபம் பலித்துவிடுமோ , எனது வயிறு உப்பி , என் சிரஸ் ஆயிரம் சுக்கலாக வெடித்துவிடுமோ என பயந்து , பிரம்மாவை த்யானித்து ஞான திருஷ்டியால் அறிந்தவனாய் , அசுரராஜனான ஜலந்தரன் ராஜ்ய பரிபாலனம் பண்ணுகின்ற ஜோதிபுரி என்ற நகரத்திற்குச் சென்று ஏதாவது ஒரு சூழ்ச்சியால் தமது கைவரிசையைக் காண்பிக்கலாம் என நினைத்து , நாராயணனை ஸ்மரித்து தனது வீணாகானத்தோடு நாமாவை இணைத்து பத்தியுடன் பாடிக்கொண்டே ஜோதிபுரிக்கு வந்து சேர்ந்து ஜலந்தரனுடைய கொலு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார் . 

இவ்வாறு நாரதபகவான் வருவதைப்பார்தத ஜலந்தரனும் எதிர்கொண்டு சென்று அழைத்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ஷோடஸ உபசாரங்களால் உபசரித்து , கொலு மண்டபத்தில் திவ்யமங்கள பொற்பீடத்தில் அமரச்செய்து , ஹே , ஸ்வாமின் ! தங்கள் வருகையால் நான் கிருதார்த்தன் ஆனேன் என வணங்கிய ஜலந்தரனை நாரதர் ஆசீர்வதித்து அரசபீடத்தில் அமரச்செய்த பின் , ஹே ஜலந்தரனே ! உனது ராஜ்யபரிபாலன சாமார்த்யத்யுைம் , நீதிவழுவாத முறையையும் கேள்வியுற்று நான் மிகவும் சந்தோஷமடைந்தேன் . மேலும் , நீ ருத்ராம்சம் பெற்ற அரசனல்லவா ! ஆகையினால் நீ தர்மர்தை ஒரு காலமும் மீறி நடக்காதே . அதனால் உனக்கு புகழும் கீர்த்தியும் மிகவும் விருத்தியாகும் என்று கூற , அதைக்கேட்ட ஜலந்தரனும் அடிபணிந்து வணங்கி , இவை எல்லாம் தங்கள் ஆசீர்வாத பலமேயாகும் என்று கூறி , ஹே முனிபுங்கவரே ! தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ? வரும் வழியில் என்னென்ன அற்புதங்களைக் கண்டீர்கள் ? ஏதேனும் சொல்லத்தக்கது எனில் கேட்க ஆசைப்படுகிறேன் தெரிவியுங்கள் ஸ்வாமி ! என்று கூறவும் , நாரதர் ஹே , ஜலந்தரனே ! உன்னிடம் சொல்லத்தகாத விஷயம் என்னிடம் யாதொன்றுமல்லை . ஒளிவு மறைவு இன்றி கூறுகிறேன் . 

நான் வைகுண்ட நாதனையும் , சத்யலோக நாதனையும் தரிசித்து வரும் வழியில் அமராவதி பட்டணத்தை அடைந்தேன் . ஆஹா ! அப்பட்டணத்தின் அழகைக் கண்டு வர்ணிக்க ஆயிரம் நாவைக் கொண்ட ஆதிசேஷனாலும் முடியாத காரியம் . அப்பேர்ப்பட்ட அழகைக் கொண்டுள்ளது அமராவதிப் பட்டணம் என அறிவாயாக . மேலும் , அங்கு குவிந்து கிடக்கின்ற நவரத்னக்கற்கள் ஒருபுறம் ,ஜீவரத்னங்கள் ஒருபுறம் . அதன் ஒளியும் சொல்ல வார்த்தைகள் இல்லை . ஒவ்வொரு ரத்னங்களும் பலவித வர்ண ஜாலங்களை அள்ளிவீசி நகரெங்கும் ஒரே ஜோதிமயமாக விளங்குகிறது . அப்பேர்ப்பட்ட ப்ரகாசம் பொருந்திய ஜீவரத்னம் ஒன்றுகூட உனது ராஜ்யத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே . உனது கொலுமண்டபத்தில் அப்பேர்ப்பட்ட ரத்தினம் ஒன்று இருக்குமானால் போதும் உனது அரண்மனை பூராவும் ஜாஜ்வல்யமாகப் ப்ரகாசிக்கும் என்று நாரதர் கூறக்கேட்ட ஜலந்தரன் , ஹே ஸ்வாமி ! அப்பேர்ப்பட்ட ரத்னங்களை அடையும்படியான மார்க்கம் ஏதேனுமிருந்தால் எனக்குத் தாங்கள் கூறவேண்டும் என்று ப்ரார்த்திக்க , நாரதர் சிரித்துக் கொண்டு , ஜலந்தரனே நன்றாகச் சொன்னாய் . உனக்கு விஷயம் தெரியாது போலிருக்கிறது . உனது பொருளை நீ அடைவதற்கு என்னிடமா மார்க்கம் கேட்கிறாய் . அந்த அமராவதி பட்டணத்தில் இருக்கும் சகல ரத்னங்களும் மற்றுமுள்ள சகல ஐஸ்வர்யங்களும் உனக்குச் சொந்தமானவையே ,
நீ அறிய மாட்டாய் ஜலந்தரா | இதோ ராகுவைப் பார் , இந்த ராகுவிற்கு சர்ப்பத்தின் உடல் அமைந்ததன் காரணம் என்னவென்று நீ அறியாய் , சொல்கிறேன் கேள் . 

முன் காலத்தில் தேவர்களும் , அசுரர்களும் தங்கள் பல விருத்திக்காக இரு திரத்தாரும் ஒன்று சேர்ந்து திருப்பாற்கடல் கடைந்து அதிலிருந்து உண்டாகும் அமிர்தத்தை இரு வகுப்பாரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதென்று ஒப்பந்தம் செய்து கொண்டு மந்தரகிரியை மத்தாவாகவும் , வாசுகியை கயிறாகவும் ஏற்படுத்தி வாசுகியின் தலைப்பக்கத்தில் மதனம் செய்தார்கள் . அசுரர்களும் , வால் பக்கத்தில் அமரர்களுமாக இருந்து சமுத்ரமதனம் செய்தார்கள். 
அப்போது அந்த சமுத்ரத்திலிருந்து பற்பல நவரத்னங்களும் , நவமணிகளும் , லச்சுமீ , சந்த்ரன் , காமதேனு , கற்பகவிருக்ஷம் முதலியவைகளும் கிடைக்கப் பெற்றன . கடைசியில் அமிர்தத்தை கடைந்தெடுக்கப்பட்து . அவ்வாறு கிடைக்கப் பெற்ற அமிர்தத்தை தேவர்களுக்கும் , அசுரர்களுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுப்பது யார் என்ற ப்ரச்சனை தோன்றி , இருதரத்தாரும் ஒருவருக்கொருவர் சச்சரவு செய்து கொண்டு இருக்கும் தருணத்தில் , இதை அறிந்த நாராயணன் மோஹினி அசுரர்கள் மெய் மறந்தவர் வடிவங்கொண்டு அங்கு தோன்ற , அம் மோஹினியைக் கண்ட அசுரர்கள் மெய் மறந்தவர்களாய் மயங்கியிக்கையில் மோஹினி அவதாரமெடுத்து வந்துள்ள பகவான் அமிர்த கலசத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு தேவ அசுரர்களின் நடுவில் நின்று இருதரப்பாரையும் நோக்கி , தேவர்களை ஒரு கமாகவும் , அசுரர்களை மற்றொரு பக்கமாகவும் இருக்கச்சொல்லி , நான் இந்த அமிர்தத்தை உங்களுக்குச் சமமாக பங்கிட்டுத் தருகிறேன் என்று கூறி சமாதானப் படுத்தி . பகவான் தனது மாயையால் அசுரர்களை மயக்கி , தேவர்களுக்கு மாத்திரம் அமிர்தத்தை பரிமாறிக் கொண்டிருக்க , இந்த சுதை அறிந்த ஓர் அசுரன் மஹா தந்திரசாலியானதால் தேவ வடிவம் கொண்டு தேவ பந்தியில் போய் உடகார்ந்து தனக்குக் கிடைத்த ஒரு பங்கு அமிர்தத்தை புசித்துவிட்டான் . இதை அறிந்த மோஹினி வடிவம் கொண்ட பகவான் தன் கையிலிருந்த அகப்பையால் அவ்வசுரனின் தலையில் அடிக்க , சிரம் அறுபட்டு கீழே விழுந்தது . அவ்வாறு விழுந்துவிட்ட சிரசை , ஒரு பாம்பின் தலையை வெட்டி , அப்பாம்பின் உடலை அசுரனின் சிரசிற்கும் . அசுரனின் தலையை பாம்பின் தலைக்குமாகப் பொருத்தி ராகுவே அமிர்தபானம் அருந்திய அவ்வசுரன் என்று அறிவாய் . இவனது தலையானது அறுபட்ட காரணத்தினால் அவனுக்கு ராகு என்று பெயர் வந்தது . ஆகையினால் ரத்னங்களை அடைவதற்காக எவ்வித முயற்சி செய்ய வேண்டுமோ அதன்படி செய்வாயாக என்று கூறி ஜலந்தரனுக்கு ஆசி கூறி விடை பெற்றுச் சென்றார் . 

அப்பால் ஜலந்தரன் சற்றுநேரம் ஆலோசித்து , ஆம் , நாரதர் சொன்னவையெல்லாம் உண்மையே . தேவர்கள் மோசக் கருத்துடன் நம் இனத்தாரை மயங்கச்செய்து , ரத்னங்களை யெல்லாம் கொள்ளை கொண்டுவிட்டனர் . இது தகாத செய்கைதான் என்று மிக்க ஆக்ரோஷத்துடன் பல்லை சுறதறவெனக் கடித்துக்கொண்டு , அடத்துரோகி , தேவேந்திரா ! தேவர்களுக்கு அரசன் என்ற பதவி உனக்குத் தகுமா ? எப்போது இரு தரப்பாரும் சேர்ந்து சமுத்திரத்தை மதனம் செய்தீர்களோ அதன்படி சமுத்ரத்தில் கிடைக்கப்பெற்ற சகல வஸ்துக்களும் சமமாக இரு தரப்பாரும் அடைந்து கொள்ளவேண்டும் அதுவே நியமாமாகும் . அதன்றி நீயும் தேவர்களுமே சகல  ரத்னங்களையும் . ஐஸ்வர்யங்கயும் கொள்ளை கொண்டு அனுபவிப்பது முறையல்ல. இவைகளெல்லாம் கபடத்துடன் செய்த சூழ்ச்சியேயன்றி வேறல்ல. இருக்கட்டும் அடே இந்திரா உன்னிடமிருக்கும் ரத்னங்களை நான் அடையாமல் இருக்கப் போவதில்லை . அப்படி அடையாவிடில் நாடி ஜலந்தரனல்ல என்று உடனே தூதர்களை நோக்கவே , கஸ்மரன என்ற ஓர் தூதன் அடிபணிந்து அரசன் முன் வந்து நிற் ஜலந்தரன் , அடே கஸ்மரா , நீ இந்த க்ஷணமே தேவலோக சென்று தேவசபா மண்டபத்தில் வீற்றிருக்கும் தேவேந்திரனிடம் , நமது மஹாராஜாவான ஜலந்தராசுரன் , முன் சமுத்ர மதனம் செய்த காலத்தில் உண்டான ஐஸ்வர்யங்களை எல்லாம் நமக்கு பாகம் கொடுக்காமல் , நீ அபகரித்துக்கொண்டு வந்திருக்கிறீர் . ஆகவே நமக்குச் சேர வேண்டிய ரத்னங்களை உடனே வாங்கிக் கொண்டு வரும்படியாக கட்டளையிட்டிருக்கிறார் . அவ்விதம் கொடுக்காத பக்ஷத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்து வரச் சொல்லி இருக்கிறார் என்று சொல்லி , உடனே பதில் தெரிந்துவா என்று அனுப்பவே , தூதன்ான கஸ்மரன் , ஜலந்தர ராஜனது உத்தரவின் பிரகாரம் ஓடிச் சென்று அமராவதியை அடைந்து , சுதர்மா எனும் தேவசபையில் வீற்றிருக்கும் மகபதியான இந்திரனை வணங்கி நின்றான் .

தேவேந்திரனானவன் தன்னை வணங்கி நிற்கும் தூதனைப் பார்த்து , அப்பா ! நீயார் ? வந்த விஷயம் என்ன ? என்று கேட்க , தூதனானவன் தேவபதி ! நான் ஜயபுரியை ஜயங்கொண்டு ஆளுபவரும் , காலநேமியின் மருமகனும் , ருத்ராம்சத்துடன் விளங்குகின்ற ஜலந்தராசுரன் என்பவரின் தூதன் . என் பெயர் கஸ்மரன் . மேலும் , நமது அரசனோ சமுத்ர ராஜாவின் புத்திரன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் . தவிர , அசுரர்களுக்கு அரசரான புஜபலபராக்ரம வீரராயும் , ஓர் குடை நிழலில் நீதி அரசன் , தன் தகப்பனாருக்கு உரிமையான சமுத்ரத்தை தம் தவறாமல் அரசாக்ஷி செய்துவரும் ஜலந்தராசுரன் என்னும் இனத்தவரும் , உம் இனத்தவரும் ஒன்று சேர்ந்து சமுத்ரத்தில் மதனம் செய்யுங்கால் , அச் சமுத்ரத்தில் தோன்றிய காமதேனு , கற்பகவிருக்ஷம் , நவரத்னங்கள் முதலிய ஐஸ்வர்யங்கள் எல்லாம் நமக்குச் சேரவேண்டிய பாகம் கொடுக்காமல் , மோச எண்ணத்துடன் அவைகளை அபகரித்துக்கொண்டு கேட்டு வாங்கி வரச்சொல்லி எனக்கு கட்டளை இட்டிருக்கிறார் . வந்திருக்கிறீர்களாம் . ஆகையால் அவை எல்லாம் தங்களிடம் அவ்வாறு தாங்கள் கொடுக்க மறுத்து ஒதுக்குவீராயின் , ற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று நமதாசன். ஆணையிட்டு என்னை அனுப்பி வைத்திருக்கிறார் என்று உரைத்தான்.

சசிமணாளன் கோபம் வெளிக்கொண்டவனாய் இத் தூதன் மனதில் கொஞ்சமும் பயமின்றி அஞ்சாநெஞ்சுடன் என்னெதிர் நின்று தயை தாக்ஷண்யமின்றி பேசுகிறானே சண்டாளன் . இவனை சும்மா விடக்கூடாது என்று தன் தூதர்களை அழைத்து , தூதாக வந்த கஸ்மரனைக் கொண்டுபோய் சிரச்சேதம் செய்யுங்கள் என்று கட்டளையிட , அப்போது சபையில் வீற்றிருந்த ப்ரதான மந்திரியான சுமதி என்பவர் எழுந்து இந்த்ரனைப் பார்த்து தேவா ! அவசரப்படாதீர்கள் . எக்காரியமும் தீர்க்காலோசனை செய்தே செய்யவேண்டும் . மேலும் தூது வந்தவனை கொல்லலாகாது என்ற தரும சாஸ்த்ரம் சொல்லியிருக்க , நாம் தெரிந்தும் அதை மீறலாமா ? நம் கோபத்தை இத்தூதன்மேல் காட்டுவது ஊர்க்குருவியின் மேல் ப்ரம்மாஸ்திரம் விடுவது போலல்லவா இருக்கும் . ஆகையால் , நம்மை நாடிவந்த தூதனை , ஹிதம் சொல்லி அனுப்புவதே உசிதம் என்றுரைத்த மந்திரியின் மொழிகளைக் கேட்டு இந்திரனானவன் , ஆம் அதுவும் உண்மையே என்று கஸ்மரன் என்ற தூதனை நோக்கி , ஓ கஸ்மரனே ! நீ உனதரசனிடம் சென்று சொல்ல வேண்டிய விஷயம் யாதெனில் , சமுத்ரமானது எங்களாலும் உங்களாலும் கடையப்பட்டது . வாஸ்தவமே , என்றாலும் எனது வஜ்ராயுதத்தின் பயத்தினால் சில பர்வதங்கள் சமுத்திரத்தில் ஒளிந்து மறைந்திருக்கின்றன . தவிர எனக்குச் சத்ருக்களான சில ராக்ஷஸர்கள் என்னால் ரக்ஷிக்கப்பட்ட காரணத்தால் அந்த ராக்ஷஸர்கள் தங்களுக்கு கிடைத்த ரத்னங்களையும் , ஐஸ்வர்யங்களையும் எனக்கே கொடுத்து விட்டார்கள் . ஆகவே , நான் வேறுவிதமான மோசக் கருத்துடன் அபகரித்துக் கொள்ளவில்லை . ஆகையால் நியாயப்படி சமுத்ர மதன காலத்தில் கிடைக்கப்பெற்ற ரத்னங்களும் மற்றுமுள்ள சகல ஐஸ்வர்யங்களும் எனக்கே உரியது . அவைகளில் கிஞ்சித் பாகமும் கொடுக்க முடியாது என்றும் , உன் அரசனால் ஆனதைப் பார்த்துக் கொள்ளட்டும் என்றும் சொல்லிவிடு என்று கூறியதைக் கேட்ட தூதனான கஸ்மரன் , இந்த்ரனிடம் விடைபெற்று தன் நகரத்திற்குப் புறப்பட்டான் . இப்படியிருக்க , ஜலந்தரன் தூதுசென்ற கஸ்மரன் இன்னும் வரவில்லையே என்று மகா கோபத்துடன் வீற்றிருக்க ,
அச்சமயத்தில் தூதனான கஸ்மரனும் வந்து சேர்ந்து , இந்திரன் கூறியபடி ஜலந்தரனிடம் தெரிவிக்க , அதைக்கேட்ட ஜலந்தர கோபம் மேலிட்டு கண்களில் தீப்பொறி பறக்க , ஓ இந்திரனே என்ன கர்வம் உனக்கு ? தேவர்களுக்கு எல்லாம் தலைவனாக இருக்கின்ற மமதையா . எனக்கு நீ ஒரு அற்பப் பதருக்கு தேவர்கள் யாவரையும் ஜெயித்து , ஜயபேரிகை கொட்டி ஜயக் ஏவலாளர்களாக சமுத்ரராஜனின் கொடியை நிலைநாட்டி உங்களை எனது ஏவலாளர்களாக வைத்துக் கொள்ளாவிடில் , நான் சமுத்ரராஜனின் புதல்வனல்ல , ருத்ராம்ஸம் பொருந்தியவனும் அல்ல , எனது பெயரும் ஜலந்தரனல்ல . 

ஓ இந்த்ரனே ! என்னை அற்பமாகவா மதித்துவிட்டாய் என்று உடனே தனது மந்திரியை நோக்கி , அமராவதி மீது படையெடுக்க வேண்டிய ரத கஜ துரகபதாதிகள் முதலிய சகல சேனைகளையும் சித்தம் செய் . இன்றே புறப்பட்டு அமராவதி எல்லையை அடையவேண்டுமென கூறினான் . மந்திரியும் அவ்வாறே சித்தம் செய்து அசுர ராஜனாகிய ஜலந்தரனுக்கு அறிவிக்க , ஜலந்தரன் தனது படைகளுடன் புறப்பட்டு தேவேந்திர பட்டணமாகிய அமராவதியின் எல்லையை அடைந்து , அங்கு நல்ல கூடாரங்களை அமைத்து அங்கேயே ஓரிரவைக் கழித்தான் . மறுநாள் காலையில் எழுந்ததும் ஜலந்தரன் தன் சேனாதிபதியை அழைத்து , யுத்தத்திற்குச் சேனைகளைத் தயார் செய்து யுத்த பேரிகை முழங்கட்டும் என்று கட்டளையிட , அவ்வாறே ஜலந்தரனுடைய பரிவாரங்கள் யுத்த பேரிகை முழங்கினார்கள். 

ஸ்வர்க்கபதியான இந்திரன் யுத்த பேரிகையைக் கேட்டும் சத்ருக்கள் நமது எல்லையை நாடிவிட்டார்கள் என்ற செய்தியை ஒற்றர்கள் மூலம் தெரிந்ததும் , உடனே தானும் தன் தேவ சைனியங்களைத் திரட்டிக் கொண்டு யுத்தத்திற்குத் தயாராகி புறப்பட்டு யுத்தகளத்தை அடைந்தான் .

 அவ்வாறு , அடைந்து இருதரப்பாரும் வில் , அம்பு , வேல் , தடி , சூலம் , முசலம் , தண்டம் முதலிய தங்கள் தங்கள் யுதங்களை பிரயோகித்து மிக உக்ரமாக யுத்தம் செய்யும் பாது போர்க்களத்தில் இரத்த வெள்ளம் ஓடலாயிற்று . இரு சர்பிலும் பலர் மாண்டனர் என்றாலும் தேவர்களைக் ட்டிலும் அசுரர்களே அதிகமாக மாண்டனர் . இதையறிந்த -அசுர குருவாகிய சுக்ராச்சாரியார் மாண்ட அசுரர்களை தனது மந்த்ர சக்தியால் உயிர்ப்பித்தார் . எழுந்த அவ்வசுரர்களும் யுத்தம் புரியலானார்கள் . மீண்டும் கோரமான யுத்தம் நடக்கலாயிற்று . அசுரர்கள் மிக்க ஆக்ரோஷத்துடன் போர் புரியவே தேவர்கள் ஆயிரக்கணக்கில் மாண்டுபோயினர்... அப்பொழுது இந்திரன் தனது சைன்யங்கள் அதிகமாக மாண்டு போவதைப் பார்த்து , தேவகுருவான ப்ரஹஸ்பதியை நினைக்க , உடனே ப்ருஹஸ்பதியானவர் தோன்றி தன் ஜீவ மந்த்ரத்தை ஜபித்து , த்ரோண பர்வதத்தில் இருக்கும் ஜீவதான மூலிகையை ப்ரயோகித்து , மாண்ட தேவர்களுக்கு உயிர்பிச்சை தந்தார் . உடனே உயிர்த்தெழுந்த தேவர்களும் யுத்தம் புரிந்து தேவ சத்ருக்களான அசுரர்களை அநேக அஸ்த்ர சஸ்த்ரங்களால் அடித்து விரட்டித் துரத்தி முன்னிற்கவொட்டாது பின்னடையச் செய்தார்கள் . அவ்வாறு பின்னடைந்து ஓடிய அசுரர்கள் சுக்ராச்சார்யாரிடம் சென்று , ஸ்வாமி ! யுத்தத்தில் மாண்ட தேவர்கள் யாவரும் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து மிகக் கடுமையாக யுத்தம் செய்து எங்களைச் சின்னாபின்னப் படுத்திச் சிதற அடித்து பின்னடையச் செய்துவிட்டார்கள் . நாங்கள் பொறுக்கமாட்டா ஓடிவந்தோம் என்று தெரிவிக்க , சுக்ர பகவான் ஞானதிருஷ்டியால் ப்ரஹஸ்பதியானவர் த்ரோண பர்வதத்திலுள்ள ஒளஷதிகளைக் கொண்டு தேவர்களுக்கு ப்ராணனை அளித்திருக்கிறார் என்பதையறிந்து , அசுரர்களை நோக்கி நீங்கள் யாவரும் காணாதபடி த்ரோண பர்வதத்தை அடியோடு பெயர்த்து எடுத்து சமுத்ரத்தில் போட்டுவிடுங்கள் . அப்படிச் செய்துவிட்டால் மாண்ட தேவர்கள் உயிர்த்தெழ மாட்டார்கள் . நமது சேனைகள் யாவரும் திடமாக வீரத்துடன் போர் புரியலாம் என்று கூற , அதைக்கேட்ட அசுரர்கள் உடனே புறப்பட்டு அம் மலையைக் கண்டுபிடித்து அடியோடு பெயர்த்து எடுத்து நட்டநடு சமுத்ரத்தில் எறிந்து விட்டார்கள் .

பின்னர் மீண்டும் கோரமான யுத்தம் ஏற்பட்டு தேவ சைன்யமானது அடிபட்டுப் பின்னடைந்து ஓடி இந்திரனை சரணமாக அடைந்தது . இதைக்கண்ட இந்த்ரன் , ஆஹா ! என்ன ஆச்சரியம் . தேவ சைன்யமே தோற்று ஓடத் தலைப்பட்டதே ! ஒருநாளுமில்லாத சம்பவமல்லவா இது என்று நினைத்தவனாக , ஜலந்தரன் உண்மையில் ருத்ராம்ஸம் பொருந்தியவன்தான் . அவனது சைன்யமும் மிகவும் மூர்க்கமாகச் சமர்புரிகிறது . இனிமேல் நம்மால் தாங்கமுடியாது . ஸ்வர்க்கத்தில் இனி இடம் கிடையாது . ஆகையால் நாம் இப்படியே திரும்பிப்
போய் மேரு பர்வதத்தில் இருக்கும் குகையில் எல்லாத் தேவர்களும் வாசம் செய்வோம் என்று நினைத்து , தேவர்களிடம் சொல்லி எல்லாத் தேவர்களையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு மேரு பர்வதமடைந்து குகையில் வாசம் செய்யலானார் .

Sevvai bhagavan 108 potri in tamil pdf / செவ்வாய் பகவானின் 108 போற்றி தமிழில்

 தேவர்கள் யாவரும் ஓடி மறைந்து விட்டதையறிந்த அசுரர்கள் ஜலந்தரனிடம் இவ்விஷயத்தைத் தெரிவிக்கவே ஜலந்தரன் நேரில் யுத்தகளம் வந்து பார்த்து நமது வீரர்கள் சொன்னது உண்மைதான் என சந்தேகமறத் தெளிந்து யோசிக்கலானான் .

அச்சமயத்தில் சக்ராச்சாரியார் ஜலந்தரனை நோக்கி , ஜலந்தரா ! என்ன யோசிக்கிறாய் ? தேவர்கள் நம்முடன் யுத்தம் செய்ய சக்தியற்று பின்னடைந்து ஓடி இந்த்ரனிடம் முறையிட்டு , யாவரும் கூடி ஆலோசித்து மேரு பர்வதத்தில் இருக்கும் ஓர் குகையில் வாசம் செய்யப் போய்விட்டார்கள் என்று சொல்லக்கேட்ட ஜலந்தரன் மஹா கோபத்துடன் , அடே இந்திரா ! என்னை மதிக்காத உன்னை உன் கொட்டத்தை அடக்குகிறேன் என்று மிக்க ஆத்திரங்கொண்டு , தனது சைன்யங்களைத் திரட்டிக்கொண்டு மேரு பர்வதத்தை நாடிப் புறப்பட்டான் என்று பகவான் கூறியதைக் கேட்ட பாமை , தேவர்களின் கதியைக் கூறும்படி நாயகனை வேண்ட , கண்ணன் கூறலானார் .

 பத்தாவது அத்யாயம் முற்றிற்று