20 வது அத்யாயம்

karthikapuranam tamil chapter 20
karthikapuranam tamil chapter 20


    கேளாய் பெண்ணே! முதல் முதல் நான் உன் விகார ரூபத்தைக்கண்டு மிகவும் சஞ்ஜலமடைந்தேன். நானோ பிறந்து வளர்ந்து எனக்கு புத்தி தெரிந்தது முதல் ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு, ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதத்தை விடாமல் முறையுடன் அனுஷ்டித்து வருகிறேன். அதுபோல நீயும் இவ்விரத மஹிமையை அர்த்த பாவத்துடன் தெரிந்துகொண்டு அதன்படி நடந்தால், நீ சக்தியடைய ஏதுவாகும். மேலும் அக்கார்த்திகை விரதத்திற்கு மேலான வ்ரதம் ஒன்றும் கிடையாது யாகம், யக்ஞம், தானம், தவம், தருமம் அவைகளெல்லாம் இவ்விரதத்திற்கு ஈடாகாது. ஆகையால், இவ்விரத மஹிமையை உனக்கு உபதேசிக்கிறேன் என்று அவளை அருகில் அழைத்து, அவள் காதில் அவ்விரத மஹிமையை உபதேசித்தார். பிறகு அந்தணரானவர், அதுதான் நீ நற்கதி அடைவதற்கு ஏதுவான மூலமந்த்ரம் தெரிந்துகொள் என்று சொல்லிவிட்டு, கங்கைக்குச் சென்று கமண்டலத்தில தீர்த்தத்தைக் கொண்டு வந்து விஷ்ணுவை மனதினில் த்ருடமாக நினைத்துக்கொண்டு, த்வாதச நாமத்தை ஜபித்து அத் தீர்த்தத்தைக் கையில் எடுத்து கலகியைப் ப்ரோக்ஷித்தார்.

you may also read KAMAKSHI VIRUTHAM

 உடனே அந்த கலகியானவள் மஹாபரிசுத்தையாகி, அப்பிராமணரை நமஸ்கரித்து வெகு பக்தி சிரத்தையுடன், ஸ்வாமி! உம்முடைய அனுக்ரஹத்தாலும் பகவானின் கிருபா கடாக்ஷத்தாலும் இந்த பாப சமுத்திரத்தில் மூழ்கிக் கிடந்த என்னை கரையேற்றி வைத்தீர் என்று அவ்வந்தணரை புகழ்ந்துக் கொண்டாடினான். அப்படியிருக்கும்போது, ஆகாயத்திலிருந்து விஷ்ணுகணங்களுடன் கூடின விமானமானது பூமியில் இறங்கிவர, அந்த விஷ்ணு கணங்கள் கலகியை விமானத்தில் ஏற்றிக் கொண்டார்கள். இவைகளைக் கண்ணுற்ற தர்மதத்தன் எனும் பராஹ்மணன், அதிக ஆச்சரியத்தை அடைந்தவராய் அந்த விஷ்ணு கணங்களை நோக்கி சாஷ்டாங்கமாக தண்டனிட்டு வணங்கினார். அப்பாது அவ்விஷ்ணு அப்பிராமணனை ஆசீர்வதித்து, ப்ராஹ்மண உத்தமரே! நீயோ சதா விஷ்ணு பக்தியுடையவராகவும் தீனர்களிடம் அன்புடையவராயும் மகா தர்மக்ஞராயும் விளங்கி, பால்ய முதல் இது பரியந்தம் வரை விடாமுயற்சியுடன் விரதத்தை அனுஷ்டித்து வந்ததாலும், அப்படி நீர் அனுஷ்டித்து வந்த சகலவித விரத புண்ய விசேஷ பலத்தால், இக் கலகியானவன் உம்மால் பூர்வ ஜன்மாந்தரத்தில் அவள் செய்த பாபங்கள் நசிந்து புண்யங்களைக் கை கொண்டும், உம்முடைய துளசி பூஜையாலும் விரதங்களாலும் உபதேசத்தாலும், அவள் விஷ்ணு சாந்நித்யத்தை அடையக் காரணமாயிருக்கிறாள். மேலும் உம்மால் விஷ்ணுவானவர் எப்படி ஆராதிக்கப் படுகிறாரோ, அதுபோல் எவர்கள் பக்தி சிரத்தையுடன் விஷ்ணுவை சேவிக்கிஞர்களோ அவர்கள் என்றென்றும் நற்பதவி அடைவார்கள்.

you may also read sri-durgakashtotra-satha-namavali

 தவிர, நீர் பூர்வ ஜன்ம வாசனையாலும் இந்த ஜன்மத்தில் செய்த நற்பலத்தாலும், மறு ஜன்மத்தில் (பாரியையுடன் கூடினவராய்) தம்பதி சகிதமாய் விஷ்ணு சாந்நித்தியமான வைகுண்டத்தை அடைவீர். பிராமணரே! யானையானது எந்த பகவானுடைய நாமஸ்மரணத்தினால் விமோசனம் பெற்றதோ, அப்பேர்ப்பட்ட பகவானை நீர் ஆராதனை பண்ணுகிறீர். ஆகையால், நீர்.அடுத்த ஜன்மத்தில் பூலோகத்தில் அயோத்தி என்னும் நகரத்தில் சூர்ய குலத்தில் தசரத சக்ரவர்த்தியாக உதித்து, இரண்டு பாரியைகளுடன் கூட அரசாளுவீர். அந்த சமயத்தில் இந்த கலகியானவள் உம்மால் அடைந்த பாதி புண்ணிய வசத்தால் உமக்கு மூன்றவது பார்யையாக வந்தடைவாள். இவளால்தான் தேவர்கள் இடுக்கண் தீரவும், ராவண கும்பகர்ணாதி அசுரர்களை சம்ஹரிக்கவும், மஹாவிஷ்ணுவானவர் பூலோகத்தில் உமக்கு திருக்குமாரனாக அவதரித்தும், அவரால் நீர் சகல சாம்ராஜ்யத்தை அடையப் பெறுவீர். ஆகையால், நீர் செய்து வந்த யக்ஞ தான விரதங்களின் புண்யபல விசேஷத்தில் பாதி பலனை அக் கலகியானவள் அடைந்து விட்டபடியால், எங்களுடன் விஷ்ணு லோகத்தை அடையப் போகிறாள் என்று விஷ்ணு கணங்கள் அப் பிராமணரிடம் கூறினார்கள்.


 20வது அத்யாயம் முற்றிற்று.