KARTHIKA PURANAM TAMIL DAY 19  கார்த்திகபுராணம் பகுதி 19
KARTHIKA PURANAM TAMIL DAY 19 /கார்த்திகபுராணம் பகுதி 19

KARTHIKA PURANAM TAMIL DAY 19 | கார்த்திகபுராணம் பகுதி 19

 ஹே நாதா ! ப்ருது மஹாராஜாவானவருக்கு நாரதர் உரைத்த இந்த கார்த்தீக புராணத்தில் விஷேமான பகுதியாக உடைய துளசீ மஹாதமியத்தை தங்களது திருவாக்கால் நான் கேட்டறிந்து மிக்க சந்தோஷமுர்றேன். ஆனால் இந்த துளசினின் மஹிமையானது யாரால் உண்டு பண்ணப்பட்டது என்பதை எனக்கு தாங்கள் விளக்கி கூறவேண்டும் என பாமா கேட்க கண்ணப்பிரான் ஓ ப்ரிய நாயகியே அப்படியே சொல்கிறேன் கேள் ...என்று ஆவலுடன் கூறத் தயாரானார்.

    அதாவது, முக்காலத்தில் சஹ்யாத்ரி என்ற ஸஹ்யமலயின் பார்ஸ்வ பாகத்தில் இருக்கும் கரவீரம் என்ற ஓர் பட்டணத்தில், தர்மதத்தன் என்ற பெயர் கொண்ட ஒரு பிராமணன் வாசம் செய்து கொண்டிருந்தான். அவன் மிக்க தர்மசீலனாகவும், மென்மையான மனது உடையவன் ஆகவும், விஷ்ணு பக்தி மேலிட்டவனாகவும், வைஷ்ணவ விரதத்தை கைகொண்டு சதா விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்பவனாகவும், தீவாதா அக்ஷ்ர வித்யா உபாசகன் ஆகவும், சந்த்யாவந்தன ஜபதபம் முதலிய அனுஷ்டானங்களைத் தவறாமல் செய்து வருபவனாயும். அதிதி பூஜை செய்து வருபவனாயுமிருக்கின்ற அந்த பிராமணம் கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் பஞ்ச உஷத்காலத்தில் எழுத்து கங்கைக்குச் சென்று நீராடி, நித்ய கர்மானுஷ்டானங்களை முறையே முடித்துக் கொண்டு, ஹரி சேவையின் நிமித்தம் பூஜா திரவியங்களை எடுத்துக்கொண்டு விஷ்ணு ஆலயத்திற்கு விரைந்து செல்லலானார். அப்படிச் செல்லும்போது வழியில் கிழிந்த சேலையைத் தரித்துக்கொண்டு. பெரிய உதடுகளும், கோரைப் பற்களும் சிவந்த கண்களும் படைத்தவளாய், முதுகு வளைந்து கூனியைப் போல் நடந்துவரும் ஓர் ராக்ஷஸ ஸ்திரீயைக் கண்டார்.

Also read - 108 Ayyappa Sarana Gosham in tamil /108 ஐயப்ப சரண கோஷம் pdf

    அவளைக் கண்டதும் மனதில் அச்சமுற்று உடலெல்லாம் நடுங்கும் அவளைப் பார்த்து பரிதாபத்துடன், ஐயோ! என்ன பாவ கர்மாக்களைச் செய்து, அவள் இப்பேர்ப்பட்ட பிறவியை எடுத்தாளோ தெய்வமே! என்று பகவானை நினைத்துக்கொண்டு அவளருகில் போய், தனது கையிலுள்ள கமண்டல துளசி தீர்த்தத்தை எடுத்து அவள் மேல் தெளிக்க, அத்துளசி தீர்த்தமானது அவ்வரக்கியின் மேல் பட்ட மாத்திரத்தில், அத்தீர்த்த மகிமையால் அவளது விகார வடிவம் நீங்கி அதியற்புதமன தேஜசோடுகூட மிக்க அழகு வடிவம் பெற்றாள். அந்தங்கையானவள் அந்த பிராமணரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, ஓ பிராமண உத்தமரே! தேவதேவனுக்குச் சமமானவரே! தங்களால் நான் புனிதவதி ஆனேன். ஸ்வாமி! தங்களால் என்மீது சாபத்திலிருந்து விடுதலையடைந்தேன். இனியும் நான் மேலான பதவியை அடைய தாங்களே அனுக்ரஹிக்க வேண்டும் என்று அந்த பிராமணரிடம் வேண்டிக்கொள்ள...

 அந்த பிராமணர் மிக்க ஆச்சரியமடைந்தவராய், ஓ பெண்ணே! நீயார்? உனது ஊர் எது? உன் பெயர் யாது? உன் பதி யார் ? நீ எக்காரணத்தினால் அந்த கோரரூபம் அடைத்தால் உன்னைச் சபித்தவர்யார்? என்று கேட்டார். அந்த மங்கை, ஹோஸ்வாமி! என் கதை ஓர் பெரிய தொடர் கதையாகும். கேளுங்கள் என்று தனது சரித்ரத்தை சொல்லத் தொடங்கினாள்.

     ஓ அந்தண ஸ்ரேஷ்டரே! நான் பிறந்தது சௌராஷ்ட்ரா தேசம்.என் பெயர் கலகி, (கல்ஹக்காரி) என் பர்த்தாவில் பெயர்பிக்ஷூ நான்சிறு ப்ராயம் முதல் பெற்றோருக்கு அடங்கி நடக்காமலும், முாட்டுக்குணம் படைத்தாவளாயும் இருந்தேன். அப்படியிருக்க, எனக்கு விவாஹ வயது வந்ததும் என் பெற்ருேர்கள் எனக்குக் கல்யாணம் செய்துவைத்தனர். கல்யாணமாகியும் என் புருஷனுக்கு அடங்கி நடக்கவில்லை. மேலும் என் கணவருடன் நான் ஒரு நாளும் அன்போடு பேசியிருக்க மாட்டேன், அவருக்கும் எனக்கும் சதா வீண் வம்பும், சண்டையும் தான், தவிர, அண்டை வீடுகளில் சென்று ஏதாவது கலகத்தை விளைவித்தும். ஒற்றுமையோடு வாழும் குடும்பங்களை கோள் சொல்லிக் கெடுத்தும், வசிய மருந்துகளால் தம்பதிகளைப் பிரித்தும், நற்குணம் படைத்த சில பெண்களை என் வசிய மருந்தால் மனதைத் திருப்பி அன்னிய புருஷர்கள் மேல் ஆசை உண்டாகும்படி செய்தும், அன்னிய ஆடவர்களுடன் சேர்த்து வைத்தும், இன்னும் சொல்லவும் நாக்கு கூசும்படியான அநேக துர் காரியங்களெல்லாம் செய்திருக்கிறேன். அதனால் ஊரார் என்னை கலஹக்காரி (கலகி) என்று அழைக்கும்படியாக பெயர்பெற்றேன். இவை எல்லாம் சகிக்கமுடியாத என் கணவர், என்னை விலக்கிவிட்டு இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டார். அதனால் நாள் பொறாமை மேலிட்டு, அவர்களை எப்படியாவது பிரித்து வைத்துவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டேன்.

Also read - Margabandhu Stotram lyrics Tamil /  ஸ்ரீ மார்க்கபந்து ஸ்தோத்ரம்

     அப்படியிருக்க, ஒரு நாள் என் சக்களத்திக்கு தாப சுரம் ஏற்பட்டு படுக்கையில் இருக்கும் படியான நிலைமை வந்துவிட இதுதான் சமயம் என்று எண்ணி என் பர்த்தாவுக்கு நான் அமுது படைக்கும் சமயத்தில், அவருக்காக முன்பே தயாராக வைத்துக் கொண்டிருந்த விஷத்தை அந்த அன்னத்தில் கலந்து பறிமாறி, அவர் அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் ரத்தம் கக்கி வாந்தி எடுத்து, மிகுந்த வேதனைப்பட்டு உயிர் துறந்தார் . அதன் பிறகுதான் என் மனம் நிம்மதி அடைந்தது. பிறகு அப்படியே சில வருஷங்கள் கழித்து எனக்கும் வயது முதிர்ந்து அந்திய காலம் நெருங்கியது. வருத்தமடைந்தேன். இப்படி இருக்கையில், என் ஆயுள் முடியும் சமயம் மஹா பயங்கர ரூபத்துடன் எமதுாதர்கள் வந்து, என் ஆவியைக் கொண்டுபோய் எமபுரம் சேர்ந்தார்கள். அங்கே எமதர்மன் கொலு வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு. நான் செய்த கர்மங்களெல்லாம் மறந்து அதி ஆச்சரியம் அடைந்தவளானேன். பிராமண உத்தமரே! அந்த எமபுரியின் வைபவத்தைக்கூறுகிறேன் கேளும்.

    எமதர்மதராஜன் நீதி செலுத்தும் "வைவஸ்வதபுரி"யின் நீதி மன்றமானது, நூறு யோசனை விஸ்தீர்ணமும் ஆயிரம் யோசனை அகலமும் உள்ளன. நாற்புறங்களிலும், கோட்டைகளும் அரண்மனைகளும் கண்ணுக்குப் புலப்படாதபடி, வானளாவும் படியான உயரம் கொண்டுள்ளன. அப்பேர்ப்பட்ட பட்டணத்தில் எமதர்ம ராஜனது கொலுமண்டபத்தில் உள்ளவர்கள். சமதமாதி குணம் உள்ளவர்களாகவும் பசி. தாகம். மூப்பு, பிணி, சாக்காடு முதலியன இன்றி. எப்பொழுதும் மஹா சந்தோஷமுடையவர்களாகவும் எமதர்மனை உபாசித்துக்கொண்டு இருந்தார்கள். தவிர, அங்கு இருப்பவர்களைக் கவனித்தால், யாக யக்ஞம் செய்தவர்களும், தான சீலர்களும், தர்மம் செய்த தாதாக்களும், நீதிமான்களும், ஆபத்துக் காலத்தில் ரக்ஷித்தவர்களும், சத்திரம்,சாலை,சோலை, கோவில், குளம் முதலியவைகளை உண்டாக்கி தர்மத்தை ஸ்தாபித்த புண்ய ஆத்மாக்களும் ஒருங்கே அமர்ந்து எமதர்ம ராஜனை உபாசித்தும் புகழ்ந்தும், மேலும் யோக புருஷர்களும், பித்ரு கணங்களும், சோமகரும் அக்னியும் காலச் சக்கரமும் ஓர் புறமிருக்க, உத்தராயணமும் தக்ஷிணாயனமும் மற்றோர் புறமிருக்க, மிருத்யுதேவனுக்குக் கீழ்படிந்து காலசோதனை பண்ணும் கிங்கிரர்கள், ஸ்துதி செய்து வருகின்ற அந்த திருச்சபையானது பார்க்கப்பார்க்க மஹா விசித்ரமானதும், அங்குள்ளவர்களை எண்ணிக் கணக்கிட்டுச் சொல்லவும் நம்மால் முடியாது. அவ்வளவு கூட்டங்களுக்கும் வெகு விசாலமாக இடங்கொடுத்து விளங்கும் அச்சபையானது, நவரத்னங்கள் இழைத்த மரகதத் தூண்கள் நடப்பெற்றதாயும், வைர வைடூர்யங்கள் இழைத்த உத்திரங்களும் கொடுங்கைகளும் அமைக்கப்பெற்று, பூரணசந்திர கிரணங்களுக்கு ஒப்பான ஒளியோடு பிரகாசிக்கின்ற முத்துப் பந்தலின்கீழ் சிங்காதனம் அமைத்து, எமதர்மராஜன் வீற்றிருந்து அரசு புரிந்து, ஆடல் பாடல் முதலிய விநோதங்களால் சந்தோஷம் அடைந்த வராகவும், நான்கு காங்களிலும பாசம், கசூலம் கதை, கட்கம்முதலிய ஆயுதங்களை எந்தி பயங்கர ரூபத்துடன் தோன்றவும் ஆயுள் மடித்துஅழைத்துக்கொண்டு வந்த பாபாத்மாக்களையும் புண்யாத்மாக்களையும் அவர் முந்நிறுத்த, அவரவர்கள் செய்த பாப புண்ணியங்களை தீர விசாரித்து அறிந்து, பாபம் செய்தவர்களை நரகத்திற்கும், புண்ணியம் செய்தவர்களை சுவர்க்கத்திற்கும் அனுப்பி, தனது ஆணைச் சக்கரத்தை நீதியுடன் செலுத்தி வருகிறர்.

    ஓ பிராமண உத்தமரே! அந்த ஆசமனமானது எப்படி விளங்குகிறது எனில், அவ்வாசனத்தின் மேல் ஓர் பெரும் பர்வதமானது ரோமக்காலால் தொங்கவிடப்பட்டு, கீழ் பாகத்தில் நெருப்பாறும் ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்விரண்டிற்கும் நடுவில் இருக்கும் சிங்காசனத்தின் மேல் அமர்ந்து, மிக்க ஜாக்ரதையுடன் அரசு புரிந்து வருகிறார். அவர் சற்றே நீதி தவறினால், உடனே ஆசனத்தின் தலையில் தொங்கிக் கொண்டிருக்கும் பர்வதமானது அறுந்து, அவரது தலையில் விழுந்து கீழே ஓடும் அக்னியாற்றில் அமிழ்த்திவிடுமாம். இது சர்வேஸ்வரராகிய பரமனின் கட்டளையாம். இவ்வாறு பூலோகத்தில் இருந்து கொண்டு வந்த பாப புண்யாத்மாக்களை விசாரித்து, தக்கபடி தீர்ப்பளித்து கிங்கரர்களிடம் ஒப்படைக்கிறார். பிறகு மறலியானவர் சித்திரகுப்தனை நோக்கி, ஓ சித்ரகுப்தனே! இனிமேல் வரவேண்டியவர்கள் யார் என்று கேட்கவே, சித்ரகுப்தன், ஸ்வாமி! இன்று வரவேண்டியவர்கள் எல்லாம் வந்து விசாரிக்கப்பட்டு விட்டார்கள். இன்னும் உலக ஆசை மகாபாவி ஒருவளே. கடைசியில் வந்து சேர்ந்தாள். அவளோ மகா பாதகி, கொண்ட கணவனையே இரண்டகம் செய்து விஷத்தைக் கொடுத்தவள், மேலும், ஒற்றுமையுள்ள எந்தக் குடும்பத்தையும் பார்த்துச் சஹிக்காது, கலகம் செய்து குடும்பத்தைக் கெடுத்தவள். இவளை விசாரித்து தக்க தண்டை விதிக்கவேண்டும் என்று கூற, எமதர்மன், சித்ரகுப்தா ! இந் துஷ்டைக்கு இன்னும் உலக ஆசை விட்டபாடில்லை ஆகையால், அவள் நல்ல குடும்பங்களைக் கெடுத் தோஷத்தாலும் தான் சமைத்த பாத்திரத்தில் அன்ன புசித்தமையாலும், உத்தம ஸ்திரீகளின் மனதையும் வசி மருந்தால் கெடுத்து, தீயவழிக்கு ஏதுவான துர் போத புகட்டிய தோஷத்தாலும் முறையே பன்றி, பூனை, வல்லரி முதலிய பிறவியை எடுத்தும், தன்கணவனை விஷம் கொடுத்துக் கொன்ற தோஷத்தால், விகாரமான ப்ரேத சரீரம் பெற்று கோரமான வனத்தில சஞ்சரிக்கும்படி ஆக்ஞாபிக்க, அப்போது நான் மனம் பதறி, ஸ்வாமி! இதற்கு விமோசனம் உண்டா என்று கேட்க, எமதர்மன் உனக்கு விமோசனம் எப்போதெனில், எவன் ஒருவன் கார்த்திகை மாதத்தில் விரதமிருந்து கங்கையில் நீராடி, விஷ்ணு பூஜைக்காக கமண்டலத்தில் ஜலம் கொண்டுவரும் போது, அவரை நீ சந்திக்க நேரிடும் சமயத்தில், அவர் தான் கொண்டுவரும் தீர்த்தத்தை எடுத்து உன் மீது தெளிக்க அத் தீர்த்தமானது உன்மேல் பட்ட மாத்திரத்தில் நீ உன் கோர ரூபம் நீங்கி , சுந்தரவதியாக விளங்கி சுகம் பெறுவாய் என்று சொல்லி என்னை கிங்கரர்களிடம் ஒப்புவித்தார்.

     அத்தூதர்கள் என்னைப் பிடித்துக்கொண்டுபோய் என்னை கீழே தள்ளி விட்டார்கள். அவர்கள் தள்ளிவிடவும், எமனது உத்தரவின்படி நான் இந்த வடிவம் பெற்று இக்கதியடைய நேர்ந்தது. நான் இச்சரீரம் எடுத்ததிலிருந்து பசிதாகத்துடன் கூடினவளாக, வனம் வனாந்தரங்களில் எல்லாம் சுற்றியலைந்து மணிகர்ணிகை, கிருஷ்ணவேணி சங்கமமாகிற தக்ஷிண தேசத்தை நோக்கி வருகையில் விஷ்ணு தூதர்களாலும் சிவ தூதர்களாலும் பீடிக்கப்பட்டு, அவர்களால் துரத்தப்பட்டடு நான் ஓடிவந்து காவேரி நதிக்கரையை அடைந்தேன். தங்களையும் கண்டேன். தாங்கள் கொண்டுவந்த தீர்த்த மஹிமையால் சாபத்தினின்றும் விடுபட்டேன். இதுதான் என் கதை என்று சொல்ல, அப்பிராமணர் மிகவும் மனம் கலங்கினவராய் வருத்தப்படவே, கலகியும், ஸ்வாமி! தாங்கள் வியாகூலப்பட வேண்டாம். எல்லாம் கர்மவினைப்படி நடந்திருக்கிறது. ஆகையால், நான் இனிமேல் இந்தப் பிறவியை எவ்விதம் போக்கடிப்பேன்? எவ்வாறு முக்தி பெறுவேன்? தாங்களே எனக்கு மோக்ஷ ஹேதுவுக்கான மார்க்கத்தைச் சொல்லவேண்டும் என்று முறையிட, தர்ப தத்தனான அப்பிராமணர் மிக்க துக்க க்ராந்தராய், அவள் பேசுட திறமையைக் கண்டு அவள்மீது அன்பு கூர்ந்து, பெண்ணே! எதற்கும் கவலைப்படாதே. நான் செல்வதைக்கேட்டு அதன்ப நடந்தால் நற்கதி பெறுவாய் என்று கூறி, கார்த்தீக விரித மஹிமையை எடுத்துரைத்தார்.

19வது அத்யாயம் முற்றிற்று.