22வது அத்யாயம்

karthikapuranam tamil day 22
karthikapuranam tamil day 22

 இப்படியாக விஷ்ணுதாசரானவர் கோவிலில் நியதி தவறாமல் முக்கால பூஜையும் முறையுடன் செய்து கொண்டிருக்கையில், ஒரு நாள் காலையில் நீராடி, நித்ய கர்மானுஷ்டானத்தை முடித்துக்கொண்டு கோவிலுக்கு வந்து பகவானுக்காக நைவேத்தியம் படைத்து, விலாரூபமாயுள்ள ஸ்ரீ விஷ்ணுவை அபிஷேக அர்ச்சனைகள் செய்து திருநாமம் சாற்றுவித்து. நைவேத்தியம் காட்டுவதற்காக இவர் கொண்டுவந்த குடான்னத்தை காணாது திகைத்து நின்றார். இது என்ன ஆச்சரியம்! குடான்னத்தை யாகம் செய்து பகவான் அர்ப்பணத்திற்கு கொண்டு வந்ததை காணமல்போனது ஆச்சர்யமாக இருக்கிறது. இது என்ன மாயமாய் இருக்கிறது? இது பகவானின் சோதனையோ அல்லது யாராவது வந்து திருடிக்கொண்டு போயிருப்பார்களோ என்று சந்தேகப்பட்டு, பகவான் மேல் பாரத்தை சுமத்தி துளசியால் அர்ச்சனை செய்து முடித்தார்.

 இப்படியே எழு நாட்கள் வரைக்கும் வைவேத்தியம் பாகம் செய்துகொண்டு வருவதும், கொண்டு வந்த வைவேத்தியம் காணாமற்போவதுமாக இருந்துவந்தது. இது விஷயம் அறியாது அந்த பிராமணராகிய அர்ச்சகன் மகா கவலை கொண்டவனாய்,எட்டாவது நாள் காலையில் நைவேத்தியதைக் கொண்டு வந்து மகா ஜாக்ரதையாக சன்னதி முன்பு வைத்துவிட்டு, கோயிற்கதவின் பின் மறைவாக நின்று கொண்டிருந்தார். அது சமயத்தில் ஒருவன் ஓடிவந்து, பூஜைக்காக வைத்திருக்கும் நைவேத்யத் தட்டை எடுத்துக் கொண்டு ஒடிச் சென்றான். பார்த்துக் கொண்டேயிருந்த விஷ்ணுதாசன் பின்னால் ஓடி அவனைத் துரத்த_அத்திருடன் கோயிலுக்கு வெளியே வந்ததும் ஒட சக்தியின்றி கீழே வழுந்ததில் மூர்ச்சையடைந்து விட்டான். அப்படி கீழே விழுந்தவனைப் பார்த்து அந்த பிராமணன், இரக்கமுற்று தண்ணீர் தெளித்து மூர்ச்சை தெளிவித்தான். அவ்வாறு செய்தபின் அத்திருடன் உடல் நடுக்கத்துடன் இருப்பதை அறிந்த அந்த விஷ்ணுதாசர். தன்மேல் இருந்த அங்க வஸ்திரத்தை எடுத்து அத்திருடன் மேல் நன்றாகப் போர்த்தினார். அப்படி செய்த-மாத்திரத்தில் திருடனாக இருந்தவன், சங்குசக்கர கதாபாணியாய் அந்த பிராமண தாசனுக்கு (காக்ஷியளிக்கவும்.) இந்த்ராதி தேவர்களும் யக்ஷகின்னரரும் கிம்புருஷகர்களும் கந்தர்வர்களுடன் ரதத்திலிருந்து இறங்கி வந்து, விஷ்ணு தாசரை புகழ்ந்து கொண்டாடினர்.

click here to read Bhu-stuti

 இவையெல்லாம்) (கண்ணுற்ற விஷ்ணுதாசராகிய பிராமணன், சங்கு சக்கர கதாபாணியான ஸ்ரீவிஷ்ணுவின் பாதத்தில் விழுந்து துதித்து, பகவானே! நான் உங்களை திருடனாகப் பாவித்து துரத்தி வந்த குற்றத்தை பொறுத்தருள (வேண்டும். தாங்கள் இக்கோலத்துடன் வந்து பூஜா நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டு, எனக்கு காக்ஷியளித்து புனிதன் ஆக்கினீர்கள். அடியேன் தன்யனானேன் என்று துதித்து, ஆனந்தக் கண்ணீர் அமுதம்போல் வடிந்து வருவதைப் பார்த்த ஸ்ரீவைகுண்டநாதன் பரம பரீதியடைந்து. அந்த விஷ்ணுதாசரை கட்டி ஆலிங்கனம் செய்துகொண்டு, அன்பனே! நீ கவலையை விடு. என்னை நம்பினோரை யான் ஒருபோதும் கைவிடேன். நான் உன் பக்தியைக் கண்டு உள்ளை சோதனை செய்வதற்காகவே, நான் திருடன்போல் வடிவம் கொண்டு கோயிலுக்குள் வந்து உமக்கும் தெரியாமல் பூஜைக்காக வைத்திருந்த நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்டேன். மேலும் உன் அன்புமிக்க மொழிகளும், 3 தவறாது நேமநிஷ்டைகளும், செய்யும் பூஜைகளும் கண்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். இதோ! இந்த்ராதி தேவர்கள் உன்னை அழைத்துச் செல்லவே, ரதத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர். ரதத்தில் ஏறு, நாமெல்லோரும் ஸ்ரீவைகுண்டம் செல்வோம் என்று சாக்ஷாத் ஸ்ரீவைகுண்ட வ நாதன் ஸ்ரீவிஷ்ணுதாசரை ஏற்றிக்கொண்டு, மற்ற தேவர்களுடன் பரமபதம் அடைந்தார்கள்.

click here to read bhagavat gita Question and answers

 இவ்விஷயங்களெல்லாம் அக்கோயிலில் உள்ள பிராமணர்களை கேட்டுத் தெரிந்துகொண்ட சோழராஜன் மனமுருகினவனாய், தன் குல குருவாகிய மௌத்கள் முனிவரிடம் கலந்தாலோசித்து, ஸ்வாமி! நான் தங்களாலே தாமஸ, ரஜஸ குணங்களை நீக்கி சாத்வீக சுபாவத்தை வகித்து,இருக் யக்ஞ யாகாதிகளும் அனேக தானதருமங்களும் செய்து விஷ்ணு சகலவித புனிதத்தை அடைந்து பரிசுத்தனானேன். ஆனால் எனக்கு சகல சம்பத்து இருந்தும், என் குடும்பத்தை பரிபாலிக்க புத்ர பாக்யத்தை அடையாமல் போய்விட்டேன். ஆகையால் நான் இனிமேல் யாகாதிகள் சம்ப்ரமமாகச் செய்து, நற்கதி அடைவதற்கு கானகம் சென்று தவம் செய்ய உத்தேசித்து இருக்கிறேன். தவிர, என் அரசையும் என் மருமகனுக்கு பட்டம் சூட்டுவிக்கப் போகிறேன். தாங்கள் யாகத்திற்கு வேண்டிய சாமக் கிரியைகளையும், சமித்துக்களையும், தனதான்ய பஞ்ச கவ்யக்ருதம் முதலியவைகளை சேகரித்துவைக்க வேண்டியது. நான் நாளைய தினமே என் முடியை மருமகனுக்கு சூட்டி யாகம் ஆரம்பம் செய்யப் போகிறேன் என்று, மறுநாள் மௌத்கல்ய முனிவராலே தன் மருமகனுக்கு முடிசூட்டி, அரசன் தன் தர்மபத்னி சமேதம் யாகசாலை அடைந்தார்.

 யாகசாலையை அடைந்த அரச தம்பதிகள் மௌத்கல்ய முனிவரிடம் யாகதீக்ஷை பெற்றுக்கொண்டு, அஷ்ட ருத்விக்களுடன் ஏகாக்ர சித்தராயிருந்து விஷ்ணு யாகத்தை சம்ப்ரமமாக நடத்தினார்கள். யாகம் பூர்த்தியாயும் மஹாவிஷ்ணு ப்ரசன்னமாகாததைக்கண்டு அரசன் அதிக கவலையுற்றவனாய், நாம் யாகம் செய்ததில் ஏதாவது தவறுதல் ஏற்பட்டிருக்குமோ என்று மனதில் சந்தேஹமுற்று மறுபடியும் மனம் தெளிந்து, ஆம், அப்படி ஒன்றும் தவறு நடந்திருக்காது. இது பகவான் சோதனையே! நான் இவ்வளவு சத்கர்மாக்களை செய்தும், பகவான் திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. ஆகையால், நான் இனிமேல் இவ்வுடல் வகித்து என்ன பிரயோஜனம் என்று நினைத்தவராய், மஹா விஷ்ணுவை நினைத்துக்கொண்டு யாக குண்டத்தில் விழுந்துவிட்டார். அவ்வாறு அரசன் அக்னி குண்டத்தில் விழவே, அக்னியானது சாந்தமடைய அதிலிருந்து பகவான் அரசரை ஆலிங்கனம் செய்துகொண்டு, அரசனே! உன் பக்தியை அறிந்தேன். வா. ஸ்ரீவைகுண்டம் செல்வோம் என்று ரதத்திலேற்றிக் கொண்டு பரமபதம் அடைந்தார். அப்போது சகல தே புஷ்பமாரி பொழிந்தார்கள்.

 அவ்வாறு வைகுண்டம் அடைந்து, சோழராஜரையும் விஷ்ணு பக்தனையும் முறையே ஜயன், விஜயன் என்று நாமம் சூட்டி, சதா வைகுண்டத்திலேயே த்வார பாலகர்களாக இருக்க அனுக்ரஹித்தார். அரசன் க்ஷத்ரியனாகயிருந்தும், விஷ்ணு பக்தன் வறியனாகயிருந்தும் அவரவர்கள் செய்யும் நற்செய்கையாலும் நற்பயனாலும் விஷ்ணுவின் சரணாவிந்தத்தை அடைந்தார்கள். ஆகையால், துளசியின் மஹிமையும் கார்த்திகை விரதமும் எல்லாவற்றிற்கும் மூலக்காரணம் என்று பகவான் எல்லா ஜீவன் முக்தர்களுக்கும் உபதேசித்து அருளியிருக்கிறார். ஆகையால், இவ்விரதங்களை அனுஷ்டிக்கும் ஒவ்வொருவரும் சாக்ஷாத்காரமடைய துவாகயிருக்கிறார்கள். மேலும் சகலவித ஸம்பத்தும் சத் புத்திரபாக்யமும் பெறுவதற்கு பகவான் அனுக்ரஹம் செய்கிறார் என்று விஷ்ணுகணங்கள் தருமதத்தனிடம் உரைத்ததாக, பகவான்சத்யபாமையிடம் சொல்லியிருக்கிறார்.

 22வது அத்யாயம் முற்றிற்று.