23 வது அத்யாயம்

karthikapuranam tamil chapter 23
karthikapuranam tamil chapter 23


 ஸ்வாமி! விஷ்ணு கணங்கள் தருமதத்தனிடம் உரைத்த பிரகாரம், அந்தணராகிய விஷ்ணுதாசரும் சோழ மகாராஜரும் விஷ்ணு பதத்தை அடைந்து, மஹாவிஷ்ணுவின் துவார பாலகர்களாக இருக்க முன் என்ன புண்ணியம் கர்மாக்கள் செய்துள்ளார்கள் என்பது பற்றி எனக்கு தெளிவாக உரைக்கவேண்டும் என்று கேட்க, கிருஷ்ண பகவான், பாமா! சொல்கிறேன் கேள் என்று தொடர்ந்தார்.

    அதாவது. பூர்வம் கர்தமன் என்னும் பிராமணன், பிந்து புத்திரியான தேவஹுதி என்பவளை மணந்து நல்லறம் நடத்தி வந்தான். இவ்வாறு அத்தம்பதிகள் மிகவும் அன்யோன்ய பாவத்துடன் இல்லறம் நடத்தி வாழ்ந்து வருகையில், கடவுள் அனுக்ரஹத்தால் இரண்டு ஆண் குழந்தைகள் உண்டானார்கள். கர்தமன் என்ற பிராமணன் குழந்தைகள் பிறந்த சந்தோஷத் தால், அக்குழந்தைகளுக்கு செய்வேண்டிய ஜாதகர்ம நாம கரணாதிகளை முறையே செய்துமுடித்து, மூத்த குழந்தைக்கு ஐயன் என்றும் இளையவனுக்கு விஜயன் என்றும் நாமம் சூட்டி. சகல கலாப்பியாஸங்களையும் கற்பித்து வந்தான். அக்குழந்தை க்கு ஐந்து வயது நிரம்பியவுடன், உபநயநாதிகள் முடித்து வைத்தார். மேலும் அக்குழந்தைகள் சகல கலிப்யாசங்களையும் நன்றாக கற்றுக்கொண்டும், சதா பகவானையே மனதினில் எண்ணி நித்யார்ச்சன பாராயணம் செய்து வந்தனர்.

      இப்படியிருக்கையில், மஹாவிஷ்ணுவானவர் அந்தக் குழந்கைளின் அந்தரங்க பக்தியைக்கண்டு பரம சந்தோஷத்தை அடைந்தாவராய், ஸ்ரீவைகுண்டநாதன் அக்குழந்தைகளின் முன்பு ப்ரத்யக்ஷமாகி, அக்குழந்தைகளாகிய ஜய, விஜயனுக்கு தனது சாக்ஷாத்காரத்தை உபதேசித்துச் சென்றார். சில நாட்கள் சென்றபின், பூலோகத்தில் மருத்து மகாராஜாவானவர் யாகம் செய்ய வேண்டி, எல்லா தேவர்களையும் முனீஸ்வரர்களையும் வரவழைத்து யாகத்தை சம்ப்ரமமாக நடத்த, தம் குலகுருவைக் கொண்டு யாகத்திற்குரிய சமித்துகளும் சேகரித்து வைத்தார். இப்படியிருக்கையில், தேவலோகத்தில் சகல தேவர்களும் மருத்து அரசன் செய்யும் யாகத்க்ை கண்டுகளிக்க புறப்பட்டுப் போக, பகவானான மஹாவிஷ்ணுவும் புறப்பட்டுப்போய், கர்தமன் என்னும் ப்ராஹ்மணன் குழந்தைகளாகிய ஜய, விஜயன் இருவரையும் உடன் அழைத்துக்கொண்டு யாகசாலையை அடைந்தார்.

 அவ்வாறு யாகசாலையை அடைந்த தேவர்களையும், மஹா விஷ்ணுவையும்,முனீஸ்வரர்களையும் அரசரானவர் ஷோடச (உபசாரங்கள் செய்து. ஜய, விஜயனையும் உபசரித்து இருக்கச் உட்காரச் செய்தார். மறுநாள் ஆரம்பம் செய்யவேண்டிய சுதீனத்தில் யாகம் ஆரம்பிக்க பகவானிடம் வேண்டிக்கொள்ள, பகவான்ஜய, விஜயர்களை நோக்கி, ஐயா, இங்கு மருந்து ராஜர செய்யும் யாகத்தில் நீ ஆசாரியராகவும், விஜயன் ஸாதகாசார்யராகவும் இருந்து யாகத்தை நடத்துங்கள் என்று ஆக்ஞாபிக்க, அவ்விருவரும் பகவான் கட்டளையை சிரமேற் கொண்டு யாகத்தை ஆரம்பித்து, யாதொரு இடையூறின்றி சம்பூர்ணமாக நடத்திவைத்தார்கள். யாகம் முடிவு பெற்று பூர்ணாஹுதிக்குப்பின் அரசருக்கு கும்பாபிஷேக ஸ்னானம் செய்வித்து, நூதன வஸ்திரம் தரித்து அனேக தானதருமங்கள் செய்தபின், ஆசார்யருக்கும், சாதகாச்சார்யருக்கும் வேண்டிய பூஷணாதிகளும் திரவியங்களும் ஈந்தார். அவ்வாறு திரவிய பூஷணங்களும் பெற்றுக்கொண்ட ஜய விஜயர்கள், அரசனை ஆசீர்வதித்தும் மஹாவிஷ்ணுவிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டும் தமது ஆசிரமத்தை அடைந்தார்.

    ஆஸ்ரமத்தை அடைந்த ஜய, விஜயன் தமக்கு கிடைத்திருக்கும் த்ரவிய பூஷணங்களை பாகம் செய்து கொள்ள வேண்டும என்று ஐயன் கூற, விஜயனானவன், அண்ணா இந்த யாகத்தில் கிடைத்த சகல பூஷண தளங்களும் எனக்கே உரியது. இதில் உனக்கு பங்கு கிடையாது என்று சொல்ல. ஜயனானவன், தம்பி! நாம் இருபேரும் இருந்துதானே யாகத்தை நடத்தினோம், ஆகையால் , அதில் எனக்குப்பாகம் உண்டு. இது நீ மறுக்கக்கூடாது என்று கேட்க, விஜயனானவன். அண்ணா! இந்தப் பொருளில் உனக்கு ஒரு தூசியளவும் கொடுக்கவே மாட்டேன் என்று சொல்லவும். ஜயனுக்குக் கோபம் வந்து, அடே பணப்பிசாசே! எனக்குச் சேரவேண்டிய பாதி திரவியத்தை எனக்குக் கொடுக்க மறுத்ததினால், நீ முதலையாக போகக்கடவாய் என்று சபித்தாள். பார்த்தான் விஜயன், உடனே, அண்ணா! அப்படியாயின், நீயும் ஒரு மதயானையாக மாறி காட்டில் அலைந்து திரியக்கடவாய் என்று பதில் சாபம் கொடுக்கவும், அங்கு மஹாவிஷ்ணுவானவர் ப்ரசன்னமாகி, அடே மந்த புத்தி உள்ளவர்களே! உங்களிருவருக்குள் பொறுமை என்பது இல்லாமல் சபித்துக் கொண்டீர்களே! என்ன புத்திசாலித்தனம் இது என்று வருத்தமுற ஜயவிஜயர்கள் மஹாவிஷ்ணுவை நோக்கி, ஸ்வாமி! நாங்கள் அறியாத்தனத்தாலும், அற்ப புத்தியானும் இவ்வாறு சபித்துக் கொண்டோம். நாங்கள் கொடுத்துக் கொண்ட சாபத்திற்கு எவ்விதம் விமோசனம் ஏற்படும் என்பது எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, மஹாவிஷ்ணுவான பகவான், அப்பா! சிறுவர்களாகிய நீங்கள் அடைந்த பொறாமை என்னும் குணமாகிய மதமே, சாபத்திற்கு அடிமையாய் இருக்கிறது நீங்கள் சில காலம் வரை இச்சாபத்தை பெற்றுக் கொண்டு என்னை ஆராதித்துவந்தால், நான் தங்களது சாபத்திற்கு விமோசனம் கொடுத்து அருள்புரிகிறேன் என்று சொல்லி அந்தர்த்யானமானார்.

Also read kadan nivarana sthothiram click here 

  சாபமடைந்த விஜயனானவன் கண்டகி நதிக்கரையடைந்து சாபத்தின்படி முதலையானனான். ஜயனானவன் யானையுருக் கொண்டு காட்டில் அலைந்து திரியலானான். இப்படியே சில நாட்கள், மாதங்கள், வருடங்கள் கழிந்தன. இப்படியிருக்க, கார்த்திகை மாதம் பிறந்ததும், கார்த்திகை மாஹாத்தியத்தை ஸ்ரவணம் செய்வதற்கு ஒரு ப்ராஹ்மணன் அக்கண்டகி நதிக்கரையடைந்து, விதிப்படி ஸ்னான சந்தியாவந்தன ஜபதப அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, கார்த்திகை புராணத்தை வாசிக்க ஆரம்பித்து வாசித்துக் கொண்டு இருக்கையில், தற்செயலாக ஒரு பெரிய யானையானது நீராடுவதற்காக அக்கண்டகி நதிக்கரை அடைந்து ஜலத்தில் இறங்கியதும், அந்நதிக்குள் வாசம் செய்து கொண்டிருக்கும் பெரிய முதலையானது நீந்தி ஒடிவந்து அந்த யானையின் காலைக் கவ்விக்கொண்டு இழுக்க, யானையானது வலி தாங்காது அபயக்குரலில் பகவானை நோக்கி, ஹே அநாதரக்ஷகா! ஆபத்பாந்தவா! அடியேனை இதுசமயம் வந்து ரக்ஷித்து அருளவேண்டும். நானோ பேராபத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறேன் என்று கண்ணீர் வடித்து சஹஸ்ர நாமத்தால் ஸ்தோத்ரம் செய்யவும், பகவான் கருணைகூர்ந்து கருடா ரூடராய் வந்து, முதலைப் பிடியும் பரியின் ஒலமும் பார்த்து சஹியாது தன் சக்கரத்தால் முதலையை சம்ஹாரம் செய்தார். அவ்வாறு சக்கரத்தால் அடிபட்ட முதலையும் யானையும் சாபம் நீங்கி நிஜரூபமடைந்து மஹாவிஷ்ணுவை அடிபணிய, பகவானானவர் அவ்விருவர்களையும் அழைத்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டம் சேர்ந்தார்.

Also Read Swami Ayyappan saranam Ghosam click here

    கேளாய் தர்மதத்தா ! அதனால்தான் இந்த கண்டகி நதிக்கு ஹரிக்ஷேத்ரம் என்று பெயர். தவிர, முதலைக்கு சக்கரத்தை விட்டு சம்ஹாரம் செய்ததில், சக்கரமானது உராய்ந்து போனதால். அக்காலம் தொட்டு முதலைகளுக்கு சக்கர வடிவமான அடையாளம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவும் கார்த்திகை புராணத்தின் மஹிமையாலும், விஷ்ணு பாராயணத்தின் படனத்தாலும் இவர்களுக்கு விஷ்ணுவின் பாதாரவிந்தம் கிட்டியிருக்கிறது. ஆகையால், நான் என்ற அகங்காரத்தை போக்கி பகவானை த்யானம் செய்து கொண்டிருக்க வேண்டும். தவிர, ஐப்பசி, தை, சித்திரை அந்த மூன்று மாதத்தில் பிராத ஸ்நானம் செய்தும், ஏகாதசி விரதத்தை நடத்தியும், துளசி வனத்தைப் பரிபாலித்தும், துஷ்டாளை நிக்ரஹித்தும், சிஷ்டாளை ஆதரித்தும் வந்தால், அந்த சாயுஜ்ய பதவியை நீ அடைவாய். ஆகையால், பகவானுக்கு ப்ரீதி உண்டாகும்படி உன் ஜன்மாவை கார்த்திகை விரதத்திலேயே சமர்பித்து, நீயும் விஷ்ணு லோகத்தை அடைவீர் என்று உரைத்து, விஷ்ணு கணங்கள் கலகியுடன் தேவலோகத்தை அடைந்தார்கள். தர்மதத்தனானவன் விஷ்ணு கணங்களின் வாசாப்ரகாரம் (சொற்படி) கடவுள் ஆராதனை வந்தனை வழிபாடுகள் தவறாது செய்துவந்து, தேகாந்தியத்தில் தன் குடும்ப சஹிதம் விஷ்ணு பதவி அடைந்தார்கள் என்று ப்ருது மஹாராஜாரிடம் நாரத முனிவரானவர் சொன்ன இச்சரிதையை பகவானானவர் பாமையிடம் சொல்லி அருளினார். 

23வது அத்யாயம் முற்றிற்று.