எட்டாவது அத்தியாயம்

கார்த்திகை புராணம்
கார்த்திகை புராணம்
கேளாய் , சத்யபாமா ! இனி துளஸீ விருக்ஷ மகிமையை சொல்கிறேன் . ஹே , ப்ரியே ! துளசிச் செடியானது ஸ்ரீமன் நாராயணனுக்கு அத்யந்த ப்ரீதியைத் தரவல்லது . ஆகையினால் துளசீ வ்ருக்ஷத்தை சாக்ஷாத் நாராயணனாகவே பாவித்து போற்றி வளர்க்கவேண்டும் .

வளர்க்க வேண்டிய முறையைத் தெளிவாகச் சொல்லுகிறேன் . துளசிச் செடியை நடும் இடத்தில் நாற்புறமும் சம சதுரமாக மணலினால் ஓர் மேடை செய்து , சுத்தப் படுத்தி துளசி விதைகள் நட்டு , மேடையின் நான்கு புறங்களிலும் ஒவ்வொரு துவாரம் செய்து , நான்கு வாசல் அமைத்து வைக்க வேண்டும் . துளி மேடையை கந்த புஷ்ப குங்கும அடிதைகளால் அலங்கரித்து நான்கு திக்குகளிலும் புண்யசீலன் , கலேன் , ஜயன் , விஜயன் என்ற நான்கு துவார பாலர்களை மண்ணினால் உருவமைத்து வைத்து , பூஜை முதலியன செய்துகொண்டு , துள பீடத்தின் நாற்புறங்களிலும் நால்வகை ரத்னங்களை  வைத்து அலங்கரித்து பட்டு பீதாம்பரங்களால் ஆடை முதலியன சாத்தி ஐந்து கலசங்கள் வைத்து விஷ்ணுவை ஆவாஹனம் செய்து ப்ராண ப்ரதிஷ்டை முதலியன செய்து, பீதாம்பரதாரியான ஸ்ரீமந்நாராயணனை கிரமப்படி பூஜித்து இந்திரன் முதலிய அஷ்டதிக் பாலகர்களையும் மத்திர கிரமமாக ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும் .

இவ்விதமாக துளசி மாடம் ஏற்படுத்தி பூஜிப்பவர்கள் இஹலோகத்தில் சகல சுகபோகங்களையும் அனுபவித்து பரலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யம் பெறுவார்கள் என்று பகவான் சத்யபாமைக்கு துளசிவிருக்ஷ மகிமையைக் கூறிவிட்டு , மேலும் கூறலானார் .

Click here to see Tulasi Gayathri Manthra with Me/துளசி காயத்ரி மந்திரம் MP3

 ஹ ப்ரியோ கார்த்தீக விரதனானவன் சதுர்த்தசி திதியன்றும்  உபவாசம் இருக்கவேண்டும் . ஏனெனில் , தேவர்கள் துவாதசி திதியன்று அதிகாலை எழுந்து திரயோதசி திதியன்று சுவாமியைத் தரிசித்து சதுர்த்தசி திதியன்று பகவானைப் பூஜித்தார்கள் . ஆகையினால் அப்பேர்ப்பட்ட சதுர்த்தசி திதியன்று உபவாசமிருந்து களங்கமில்லாத மனதோடு அகில உலகங்ககாயும் உஜ்ஜீவிக்கச் செய்கின்ற விஷ்ணுபகவானை ஷோடஸ உபசாரங்களால் ஆராதிக்க வேண்டும் . அன்று இரவில் கீத வாத்திய கோஷங்களாலும் , வேத பாராயணங்களாலும் , ஸ்தோத்திரங்களாலும் பகவானை சந்தோஷப் படுத்தி நித்திரை செய்யாமல் இரவு முழுவதும் ஜாகரணம் பண்ண வேண்டும் .

எவன் ஒருவன் ஏகாதசி அன்று இரவில் நித்திரையின்றி வேதாத்யயன கீதகான நாம சங்கீர்த்தனங்களால் சங்குசக்ர கதாதா ரியான மகாவிஷ்ணுவை பூஜிக்கிறானோ அவனுக்கு

ஆயிரம் கோ தானம் செய்த பலன் உண்டாகும் நடனமாடியும் வாணவேடிக்கைகளைச் செய்தும் பகவானுடைய சரி தங்களை வாசிக்கும் வைஷ்ணவர்களையும் , பாகவத உத்தமர்களையும் சந்தோஷிக்கச் செய்து , பகவானுடைய திவ்ய கதைகளை பாராயணம் செய்து வருபவர்கள் , ஸ்ரீமந்நாராயணனின் அருளுக்குப் பாத்திரமாகி , சர்வலோக சரண்யயான பவர் சரணாவிந்தத்தை அடைவார்கள் . மேலும் விரதனானவன் பௌர்ணமி அன்று தன்னுடைய தர்மபத்தினியுடன் முப்பது வைதிகர்களுக்குக் குறையாமல் தன் சக்தியை அனுசரித்து பாயசம் , எள்ளுருண்டை , அன்னம் முதலியவைகளை பகவானுக்கு நிவேதித்து , பின்னர் அவ்வைதீகர்களுக்குப் வழங்க வேண்டும் . அவர்கள் சாப்பிட்ட பின்பு அவர்களுக்கு தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்த பின்னர் அவர்களை வழியனுப்பவேண்டும் . 

பின்பு விஷ்ணுவிற்கும் , இந்த்ராதி தேவர்களுக்கும் , துளிசி விருக்ஷத்திற்கும் , கபில நிறமுள்ள பசுவிற்கும் முறையே பூஜித்து தம்பதி பூஜை செய்து முடித்துவிட்டு , அத் தம்பதிகளின்  ஆசீர்வாதம் பெற்ற பின்னர் , விரதனானவன் சாப்பிட வேண்டும் . சாப்பிட்ட பின்பு முகத்யுைம் , கை கால்களையும் சுத்தம் செய்துகொண்டு பகவானை நோக்கி , ஹே . பகவானே நான் செய்த அன்ன சாந்தி , தம்பதி பூஜை முதலானவைகளைத் தாங்கள் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டு , எங்கள் முன் தோன்றி எங்களது பாபங்களைப் போக்கி , எம்மை கிருதார்த்தனாக்கி எமது மனோரதத்தை நிறைவேற்ற , அதிதுர் பலமாயிருக்கின்ற எமது தேகத்தை விஷ்ணு ஸ்தானமாகிய வைகுண்டத்தை அடையச் செய்யும்படியாய் அருள்புரிய வேண்டும் . என்று ப்ரார்த்தித்து , தான் பூஜித்த கபில நிறமுள்ள பசுவிற்கு புனர்பூஜை செய்து தன் குருவிற்குக் காணிக்கை செலுத்தி அவரது ஆசீர்வாதம் பெறவேண்டும் . இந்தப் பிரகாரம் சாயுஜ்யத்தையும் அடைவார்கள் .

மேலும் தானம் , தபசு , யக்ஞம் , தீர்த்த ஸ்நானம் முதலிய வைகளைக் காட்டிலும் கார்த்தீக விரதமானது ஆயிரம் மடங்கு உயர்ந்த பலனுள்ளது . இவ்விரதத்தை அறுஷ்டிப்பதின் நிமித்தமாக தன்யர்களும் , வவிஷ்ணு பக்தர்களும் பூஜிக்கப் படுகின்றனர் . அதனால் அந்த விரதனுடைய அத்திம (கடைசி) காலத்தில்  அவனால் முன்னம் செய்யப்பட்ட பாவங்கள் யாவும் நீக்குகின்றன. இக் கார்த்தீக விரதம் மகாத்மியத்தையும் நியமங்களையும் பக்தியுடன் விஷ்ணு சந்தியில் பாராயணம் பண்ணுகிறவனுக்கு இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலனை காட்டிலும் அதிகமான பலன் கிடைத்து எல்லா பாவங்களிலும் விடுபட்டு மோக்ஷ சாம்ராஜ்ய பதவியும் உண்டாகும் என்று பகவான்  பாமையிடம் சொல்ல அதற்கு சத்தியபாமானவள் ஹே ஸ்வாமி தாங்கள் இதுவரையில் சொல்லியதை கேட்டு மனம் பூரித்தேன் பரம உத்கிருஷ்டமான துளசி மஹாத்மியத்தையும் அதன் உத்பத்தியையும் அறிய மிக ஆவலோடு இருக்கும் எனக்கு தாங்கள் அதை விஸ்தாரமாகச் சொல்லி அருள வேண்டும் என்று பிரார்த்திக்க பகவான் அப்படியே ஆகட்டும் என்று பாமைய நோக்கி துளசி மகாத்மியத்தையும் புன்சிரிப்புடன் உரைக்கலானார்.

 எட்டாவது அத்தியாயம் முற்றிற்று