karthika puranam story day 7
karthika puranam story day 7

கார்த்தீக புராணம் ஏழாம் அத்யாயம்

சத்யபாமையானவள் ஸ்ரீக்ருஷ்ண பகவானைப் பார்த்து . ஹே . நாதா ! தாங்கள் எடுத்துரைத்த தீர்த்த மஹிமையையும் , ஏகாதசி விரத விவரங்களையும் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் . இன்னும் அந்த கார்த்தீக விரதம் பண்ணுகிறவன் அனுஷ்டிக்க வேண்டிய நியமங்களை எனக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டுமென்று ப்ரார்த்திக்க , பகவானாகிய கண்ணபிரான் புன்சிரிப்புடன் பாமையை நோக்கி , ஹே . சத்யபாமினி ! உனது விருப்பப்படியே சொல்லுகிறேன் கவனமாகக் கேள் . 

பகவானை ஆராதனை செய்யும்போது கிருத யுகம் , த்ரேதாயுகம் , த்வாபர யுகங்களில் மாமிசம் , மது , தட்டாம்பயறு இவைகளை முறையாக பாகம் செய்த பகவானுக்கு நைவேத்யம் பண்ணப்பட்டது . இக்கலியுகத்தில் மாமிசத்திற்குப் பதிலாக உளுந்தும் , மது என்கிற சாராயம் , கள் முதலியவற்றிற்குப், பதிலாக தேனும் , தட்டாம்பயறுக்குப் பதிலாக கொழுக்கட்டையும் நிவேதனம் செய்யவேண்டும் . மேலும் கார்த்தீக விரதத்தை அனுஷ்டிக்கிறவன் , ( பரான்னம் , பரத்ரோகம் , கடல் யாத்திரை , நல்லெண்ணை , பழையசாதம் , மாமிசம் , சூர்ணம் , வண்டு விழுந்த தானியங்கள் , துஷ்ட மிருகங்களின் பால் முதலியவைகளை அறவே நீக்கி விடவேண்டும் ) பகற்காலத்தில் நித்திரையும் பாத்திரமின்றி கைகளில் வைத்து போஜனம் செய்தலும் , நான்கு வேளைகளில் அன்னம் புசித்தலும் கூடாது . துலா ( ஐப்பசி ) மாதத்தில் நரகசதுர்த்தசியன்று எண்ணெய் ஸ்நானம் செய்து நூதன வஸ்திரங்களையும் , ஆபரண வகைகளையும் மஹாலக்ஷ்மியின் சந்நிதானத்தில் வைத்து , தூபதீபம் காட்டி , நைவேத்தியம் படைத்து பூஜை செய்தபின்பு , நூதன க்தியும் , வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் அணிந்து கொள்ள வேண்டும் . தீபாவளி கழிந்த பின்பு எண்ணெய் ஸ்நானம் செய்வது கூடாது . காய்கறி வகைகளில் வெங்காயம் , வெள்ளைப்பூண்டு , கண்டங்கத்திரி , முள்ளங்கி , நாளிக்கிழங்கு , பகவான் , முருங்கைக்காய் , சுரைக்காய் , பிண்ணாக்கு , வெண்மையான கத்திரிக்காய் , பெரும் பூசணி , முள்ளிக்காய் , விளாங்காய் முதலியவைகளை உபயோகிக்கக் கூடாது . மாதா , பிதா , குரு , தெய்வம் வைதிகர்கள் , அரசன் , ஸ்திரீகள் முதலியவர்களை நிந்திப்பது அறவே கூடாது . தூரமான ஸ்திரீகளுடன் பேசுவதும் பழகுவதும் கூடாது....

மிலேச்சர்கள் ,துர்க்குணமுள்ளவர்கள் , வேதத்தையும் , தெய்வத்தையும் நிந்திப்பவர்கள் முதலிய மனித உருவில் தோன்றும் மிருகங்களுடன் பேசலாகாது . காசநோய்( நுரையீரலைப் பாதிக்கும் கடுமையான தொற்றுநோய் ) உள்ளவர்கள் சமைத்த உணவுப் பதார்த்தங்களும் , பிறப்பு , இறப்புத்திட்டு உள்ளவர்கள் வீட்டில் சமைத்த அன்னமும் , இரண்டாவது தடவை சமைத்த உணவுப் பதார்த்தங்களும் கருகிய உணவு பொருட்களையும் உண்ணல் கூடாது.

 விரத தினங்களில் பெரும் பூசணி , முள்ளங்கி , முள்ளிக்காய் மாதுளை , நெல்லிக்காய் , தேங்காய் , சுரைக்காய் , கருணைக் கிழங்கு , வெள்ளரிக்காய் , பிரண்டை கீரைத்தண்டு அரைக்கீரை, சிறுகீரை முதலியவைகளை உபயோகிக்கக் கூடாது . மஹா விஷ்ணுவிற்கு ப்ரீதியான நெல்லிக்காய் மாத்திரம் வைதீக உத்தமர்களுக்குப் படைத்த பின் மீதியை உபயோகிக்கலாம் . இப்பேர்ப்பட்ட நியமங்கள் தவறாமல் மனதை எங்கும் ஓடவிடாமல் சதா பகவானையே ஸ்மரித்துக் கொண்டு பகவானை ஆராதித்து சந்தோஷிக்கச் செய்ய வேண்டும் . இரவில் சிறிது நேரம் ஜாகரணம் இருந்து , ஹரிநாம ஸ்மரணம் பண்ணிய பின்பு சயனித்தல் வேண்டும் . இந்தப் பிரகாரம் எவன் ஒருவன் கார்த்தீக விரதத்தை அனுஷ்டிக்கிறானோ அவன் விஜயா அந்திய காலத்தில் எமதர்மனுடைய பாதை நீங்கினவாய் உருவன ஸ்ரீவைகுண்ட பதவி அடைவான் . 

Click here to see  about ஏகாதசி விரதம்

யாகம் , யக்ஞம் முதலிய கர்மாக்களை அனுஷ்டித்தவர்களுக்கு சுவர்க்க போகமும் ஸ்ரீவைகுண்ட பதவியும் கிடைக்கும் . ஆகையால் யாக , யக்ஞங்களைக் காட்டிலும் , கார்த்தீக விரதமே உத்தமமானது . உலகத்தில் உள்ள சகலமான புக்தி முக்தி ப்ரத க்ஷேத்ரங்களில் யாத்திரை செய்த பலன்கள் யாவும் , இக்கார்த்தீக வ்ரதத்தை அனுஷ்டிப்பவனுக்கு தானாக சித்திக்கிறது . இந்திராதி தேவர்கள் விஷ்ணுவால் ஏவப்பட்டு கார்த்திக விரதத்தினை ரக்ஷணம் செய்வார்கள் . இக் கார்த்தீக விரதமிருக்கும் இடத்தில் பூதம் , பைசாஸம் முதலிய துஷ்ட தேவதைகளும் அணுகாது . சாஸ்திரோக்தமாகச் சொல்லப் பட்ட விரதங்களிலே இக் கார்த்ததீக விரதத்தின் பலனை எடுத்துரைக்க நான்முகம் படைத்த பிரஹ்ம தேவரும் நிகராகார் . இக் கார்த்திக விரதமானது சகல பாவங்களையும் போக்கடிக்க வல்லது . மஹா விஷ்ணுவிற்கும் மிக்க பிரியம் உள்ளது . தவிர , புத்ர பௌத்ராதி சகல சௌபாக்கியங்களையும் தேவாலயங்களை சேவித்த பலனையும் தரவல்லது . சத்யபாமைக்குக் கண்ணன் விளக்கிக் கூறினார் . 

ஏழாவது அத்தியாயம் முற்றிற்று ,