KARTHIKA PURANAM TAMIL DAY 9
KARTHIKA PURANAM TAMIL DAY 9

ஒன்பதாவது அத்தியாயம்

ஒரு காலத்தில் தேவபூபதியான இந்த்ரன் ஈஸ்வரனைக் கண்டு தர்சனம் செய்வதற்காக கைலாச பர்வதத்தை நாடிச் சென்றார் . அப்படிச் செல்கையில் , கைலாச பர்வதத்தின் எல்லையானது எவ்வளவு தூரம் இருப்பதென்பதை அறியாது நடந்து , நடந்து ஓய்ந்து எல்லையைக் காணாமல் பிரமித்து மன சஞ்சலம் உடையவனாய் ஆலோசித்து மஹேஸ்வரனை மனதில் திருஸ்டமாக நினைத்துக் கொண்டிருக்கையில் , திடீரென்று அங்கு ஓர் ஜோதியானது தோன்றி மறையவே , அங்கு காவலாக இருக்கும் கோர தந்தங்களுடனும் , சிவந்த கண்களுடனும் , விகாரமான உருவங்களுடனும் கூடின சிவகணங்களைக் காணவும் மிக்க மகிழ்ச்சி அடைந்து அவர்களை நோக்கி , ஓ , சிவகணங்களே ! நான் பரமசிவனைத் தரிசிப்பதற்காக வந்திருக்கிறேன் , எனக்கு வழிவிடவேண்டும் என்று கேட்க , அச்சிவகணங்கள் யாதொரு பதிலும் கூறாமல் வழிவிடாதும் பேசாமல் இருக்க , வெகு நேரம் வரைகார்த்திருந்தும் சரியான உத்திரம் ( பதில் ) கிடைக்காததால் மிகுந்த கோபமடைந்து , கண்களில் தீப்பொறி பறக்கத் தனது வஜ்ராயுதத்தைக் கரத்திலேத்தி அச்சிவகணங்களின் சிரலை தாக்கினார் . அவ்வாறு தாக்கப்பட்ட சிவகணங்களாகப் காவலர்களின் சிரசானது வெடித்து நித்தியத்தை அடைந்தார்கள் . இதையறிந்த சாம்பமூர்த்தியானவர் மிகவும் சினங்கொண்டு , மஹா ரௌத்ராகரமாய் தனது நெற்றி கண்ணைத் திறக்கவே , அதனின்று ஓர் ஜ்வாலையானது வெளிக்கிளம்பி இந்திரனது கையில் உள்ள வஜ்ராயுதத்தை பஸ்மீகரம் செய்துவிட்டது . இதையறிந்த ப்ரஹஸ்பதியானவர் ( குரு ) மிக்க , பயப்பிராந்தி அடைந்து , மனம் பதைத்து இந்திரனிடம் ஓடி வந்து , ஓ இந்திரனே ! என்ன காரியம் செய்து விட்டாய் ! நீ அஜாக்ரதையாக இப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்யலாமா ? இதோ பரமசிவனுடைய நேத்ர ஜ்வாலை யானது உனது வஜ்ராயுதத்தை சாம்பலாக்கி விட்டது . இன்னும் சிறிது நேரத்தில் மூன்று உலகங்களையும் எறித்துச் சாம்பாலாக்கி பரமேஸ்வரனை அடிபணிந்து அறியாமல் செய்த குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்வோம் என்று கூறி , பரமசிவனை நோக்கி ஸ்தோத்ரம் செய்தார்கள் .ஹே . சத்யா ! முன்னம் நாரத மஹருஷியானவர் பிருது மஹாராஜரிடம் உரைத்த துளசி உத்பத்திக்குக் காரணமான மஹா உத்தமியான துளஸி பிருந்தையின் விருத்தாந்தத்தை உனக்குக் கூறப் போகிறேன் கேட்பாயாக.

" கரசரணம் க்ருதம்வா வாக்கர்ம காயஜம்வா
ஸ்ரவணநயநாம் ஜம்வா மானஸம்வா அபராதம் !
விஹிதம் அவிஹிதம்வா ஸர்வம் ஏதத்க்ஷமஸ்வ ,
சிவசிவ கருணாப்தே ! ஸ்ரீமஹாதேவாணாம்போ !!"

ஹே மஹா தேவனே , சம்புவே , மங்களத்தின் உறைவிடமே , மங்களத்தையே பக்தர்களுக்கு அளித்து திருவருள் புரியும் கருணா சமுத்ரனே ! 

நான் கைகளினாலும் , பாதங்களினாலும் , என் செயல்களினாலும் , வார்த்தைகளினாலும் , சரீரத்தினாலும் , கெட்டவைகளை கேட்ட பாபங்களிலிருந்தும் , பார்த்த தோஷங்களிலிருந்தும் , பார்க்கக்கூடாதவைகளினாலும் , மனதளவில் செய்த பாபங்களிலிருந்தும் , பெரியோர்கள் ஏற்றுக் கொண்டவைகளையும் , அவர்களினால் ஒதுக்கப்பட்ட செயல்களிலிருந்தும் , அன்றும் , இன்றும் என் அனைத்து பாபங்களையும் போக்கி நீதான் என்னை மன்னித்து திருவருள் புரிய வேண்டும் . 

YOU MAY ALSO REFER TO VIDURA NEETI

அந்த க்ஷணத்தில் பரமன் தோன்றி , ஓ தேவ குருவே உம்முடைய ஸ்தோத்ரத்தில் நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன் யாது காரணம்? என்று கேட்க ப்ருஹஸ்பதியானவர் , ஹே . சாம்பவமூர்த்தி இந்திர கோப காரணமாக ஏற்பட்ட தங்கள் கபாலாக்னியாவது அடக்கிக் கொள்ளவேண்டும் . மேலும் இந்திரனோ தாம் செய்த குற்றத்தை மன்னித்துக் கொள்ளும்படி இதோ தங்களைச் சரணாகதி அடைந்திருக்கிறான் , அவனைக் காப்பாற்ற வேண்டுமென சங்கரமூர்த்தியானவர் , தேவ குருவே ! மூவுலகங்களையும் தகிக்கக்கூடிய என் கபாலாக்னியானது மறுபடியும் கிரகித்துக்கொள்ள எனக்கு சக்தி இல்லை அதன் நெருப்பானது பரவாமலிருக்க செய்கிறேன் உமது சொல்லுக்காக  இந்திரனையும் மன்னித்தேன் மேலும் இந்த கபாலனியானது எதையும் கஷ்டப் படுத்தாமலிருக்க சமுத்திரத்தில் கொண்டுபோய் விடுகிறேன் . இனிமேல் இந்த இந்திரனானவன் முன்பின் யோசியாது எக்காரியத்தையும் அவசரப்பட்டு செய்யலாகாது என்று இந்தரனுக்கும் புத்திமதி  கூறி , ப்ருஹஸ்பதிக்கும் இந்திரனுக்கும் விடை கொடுத்து அனுப்பிவிட்டு , ருத்ரமூர்த்தியானவர் கபால அக்னியை கையில் ஏந்தி கங்கா சங்கமம் ஆகிற சமுத்திரத்தில் கொண்டு போய்விட்டுவிட்டு அந்தர்த்யானமானார் .

 சமுத்ரத்தில் கொண்டுபோய் விடப்பட்ட அக்னியானது , தத்க்ஷணம் குழந்தை வடிவமாகி ரோதனம் செய்தது . ( அழுதது ) இக்குழந்தையின் அழுகைக் குரலானது அண்டரண்ட புவன சராசரங்களும் நடுங்கும்படியான இரைச்சலுடனும் , அதிர்ச்சியுடனும் கூடியதாக இருந்தது . இதைக் கேட்ட தேவலோக வாசிகளும் , பூலோகவாசிகளும் இதனால் நமக்கு என்ன அனர்த்தம் விளையுமோ என்று மிகவும் பயந்துபோய் இருந்தார்கள் .

CLICK HERE TO SEE CHAPTER 8

இப்படியிருக்க , சமுத்ர ராஜாவான வருணபகவானும் அக்குரலைக் கேட்டு ஓடிவந்து , அக்குழந்தையைக் கையிலேந்தி கொண்டிருக்கும்போது , நான்முகன் ப்ரம்மாவும் அங்கு வந்து செய்தி அறிந்து குழந்தையைப் பார்த்து சந்தோஷிக்க  வருணபகவான் ப்ரம்மனிடம் தண்டனிட்டு , ஹே பரம பிதாவே இக்குழந்தை மிகுந்த தேஜசோடு கூடியவனாயிருக்கிறான் . மேலும் , கங்கா சங்கமமாகிற வே இடத்திலே பிறந்திருக்கிறான் . ஆகையால் இக்குழந்தையை நான் என் புத்திரனைப் போல் பாவித்தேன் . ஆகையால் இக்குழந்தைக்குச் செய்யவேண்டிய ஜாதகர்ம , நாமகரணம் முதலானவைகளை விதிபூர்வமாகச் செய்து வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ள , ப்ரம்மனும் அதற்கு இசைந்து அந்த சிசுவைக் கையிலேந்தி தன் மடிமேல் வைத்துக்கொள்ள , அக்குழந்தையானது அடிக்கடி பிரண்டு பிரண்டு விழுந்து ப்ரம்மனின் ப்ரம்ம சம்பந்தமான கூர்ச்சத்தை கிரஹித்து கொண்டது . 

அப்பேர்ப்பட்ட வேதரசமான கூர்ச்சத்தை கிரஹித்த மாத்திரத்தில் அந்த சிசுவின் கண்களினின்று நீர் வடிந்து அந்த கூர்ச்சத்தை நனையச் செய்தது . இதையெல்லம் பார்த்துக் கொண்டிருந்த வேதமூர்த்தியானவர் வருணா ! பார்த்தாய் இக்குழந்தையானது என் பிரம்ம கூர்ச்சத்தை கிரஹித்து என்னை முக்த கூர்ச்சராக்கினார் . ஆகையால் , இந்த சிசு என் கூர்ச்சத்தை  கிரஹித்ததினாலும் , அந்த கூர்ச்சமானது தன் கண்ணீரால்  நனையப்பட்டதாலும் இன்று முதல் இக்குழந்தைக்கு  ஜலந்தரன் என நாமம் சூட்டியிருக்கிறேன் . இவன் திரிபுவனங்களையும் அடக்கி ஆளும் சக்தி வாய்ந்தவனாக இருப்பான் . 

மேலும் , இவன் சகல சாஸ்த்ர விற்பன்னனாகவும் , சிவனைத்  தவிர மற்றவர்களுக்கும் மேலான வெற்றியை உடையவனாயும் சமஸ்த லோகங்களிலும் இவனது பெயரும் புகழும் பெற்று  விளங்குவான் . ஆனால் இவன் யாரால் படைக்கப் பட்டானோ , அவறாலேயே இவனுக்கு மரணம் ஏற்படும் என்றுரைத்து , பிரம்மாவானவர் தன் இருப்பிடம் அடைந்தார் .

 வருணனும் அக்குழந்ைையக் கொண்டுபோய் வளர்த்து வந்தார் . இவ்விதமாக சிலநாள் அக்குழந்தையானது வளர்ந்து வர , குழந்தைக்கு வித்யாப்பியாசம் செய்விக்க வேண்டி , தன் குல குருவாகிய சுக்ராச்சார்யாரிடம் அனுப்ப , அன்னவரிடம் சகலவிதமான வித்தைகளையும் , மந்திர , தந்திர , யந்திர உபாய வழிகளையும் நன்றாகத் தெரிந்து கொண்டான் .

ஒரு நாள் வருணனானவன் சுக்ராச்சாரியாரை அழைத்து , தன் குழந்தை சந்திரனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்து வைக்க வேண்டும் என்று தெரிவிக்க சுக்ராச்சாரியாரும் அதற்கு இசைந்து ஓர் நல்ல தினத்தை நிச்சயத்து யுவராஜ பட்டாபிஷேகம் செய்து வைத்தார். இவ்வைபவத்தை வருண பகவான் கண்டுகளித்து மிகவும் சந்துஷ்டி அடைந்தவரானர்.

 மேலும் , சுக்ராச்சாரியாரைப் பார்த்து , குருவே ! நம் குழந்தை ஜலந்தரனுக்கு விவாகத்திற்குத் தக்க பருவமும் வந்து விட்டது . ஆகையால் , கூடிய சீக்கிரம் நற்குலத்தில் உதித்த ஓர் ராஜ குமாரியைப் பார்த்து வதுவை நிச்சயம் செய்துவைக்க வேண்டும் என்று தோன்றுகிறது தங்கள் அபிப்ராயம் எப்படியோ என்று கேட்க ... அதற்கு சுக்ராச்சாரியார் வருணா ! யோசிக்காதே , நாம் நினைத்தால் நடக்காதது உண்டோ ? ஆனால் நாம் எங்கும் பெண்ணைத் தேடிப்போக வேண்டியது இல்லை . ரூபத்தில் இந்திராணிக்குச் சமானமாயுள்ள பெண் இதோ இங்கு வீற்றிருக்கும் நம் காலநேமியின் மகள் பிருந்தையே . அவள் அழகிலும் லக்ஷணத்திலும் மேன்மை வாய்ந்தவள் . ஆகையால் நாம் உடனே காலதேமியின் சம்மதத்தை தெரிந்து , முகூர்த்தம் நிச்சயித்துவிடலாம் என்று காலநேமியிடம் இது விஷயம் தெரிவிக்க , அதற்கு அவர் அதிக சந்தோஷம் அடைந்தவராய் , சுக்ராச்சார்யாரைப் பார்த்து , ஸ்வாமி ! தாங்கள் பார்த்து என் மகளை கேட்கும் விஷயத்தில் யாதொரு ஆட்சேபணையும் கிடையாது என்று சொல்லி வாக்குத்தத்தம் கொடுக்க , வருணனும் சந்தோஷடைந்து முஹூர்த்த நாளை மனதில் சந்தோஷத்துடன் நிச்சயித்தார்கள் .

முஹுர்த்தநாள் நெருங்கியதும் வருணனுடைய சபா மண்டபத்தை அலங்கரிக்க , சிற்பிகளை வரவழைத்து விசித்ரமான பந்தல்களை போட்டும் , சபா மண்படம் ஒரே  ஜோதிமயமாக விளங்கும்படியும் அலங்கரித்து முடித்தனர் . மறுநாள் சகல தேச அரசர்களுக்கும் , தேவர்களுக்கும் மண ஒலையை அனுப்ப , அவ்வாறே சகலதேச மன்னர்களும், தேவர்களும் வந்து சேர , வருணனானவன் சுக்ராச்சார்யாரை புரோகிதராக நியமித்து பிரம்மன் முதலான தேவர்கள் சூழ ஜலந்தரனுக்கும் பிருந்தைக்கும் அதிவிமர்சையாக கல்யான மஹோத்சவம் நடைபெற்றது . மங்கள வாத்யமும் ஒலித்தன .சகலதேவர்களும் , அரசர்களும் வதூவரர்களை புஷ்பமாரி பொழிந்து ஆசீர்வதித்தார்கள் பிறகு எல்லோரும் சந்தனம், புஷ்பம் , தாம்பூலம் கொடுத்தனர் . அவைகளைப் பெற்றுக் கொண்டு தேவர்களும் மன்னர்களும் விடைபெற்று கொண்டு தத்தம் இருப்பிடத்தை அடைந்தனர் . பிறகு ஜலந்திரன் என்னும் இளவரசன் தன் குருவாகிய சுக்ராச்சாரியாரை துணையாக வைத்துக்கொண்டு தன் ராஜ்யத்தை யாதொரு குறைவின்றி நடத்தி வருகிறான் என்று கிருஷ்ண பகவான் பாமையிடம் உரைத்தருளினார்.

ஒன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.