karthika puranam in tamil day 12 pdf
karthika puranam in tamil day 12 pdf

கார்த்திகா புராணம் 12 வது அத்யாயம் 

கார்த்திகா புராணம் பன்னிரண்டாம் அத்தியாயம் pdf கீழே காணலாம்

கேளாய் ஸத்யா ! அப்படியிருக்கையில் ஓர் நாள் நாரதரானவர் வைகுண்டத்திற்கும் , தேவலோகத்திற்கும் செல்ல , அங்கு லக்ஷக்ஷ்மீ நாராயணனையும் , இந்த்ராதி தேவர்களையும் காணாது வருத்தப்பட்டு ஞான திருஷ்டியால் அறிந்த , அவர்கள் எல்லாம் ஜலந்தரன் பட்டணத்தில் வாசம் செய்வதை தெரிந்து மனம் வெறுப்படைந்து இப்படி இவர்கள் அவ்விடம் வாசம் செய்துகொண்டிருந்தால் தேவபுரியையும் , வைகுண்டத்தையும் பரிபாலிப்பது யார் ? இது எல்லாம் ஸ்ரீமந் நாராயணின் லீலா வினோதமே . ஆகையால் நான் ஜலந்தரன் பட்டணத்தை அடைந்து , ஓர் வித சூழ்ச்சியால் ஒரு கலகத்தை செய்தால்தான் அத்தேவர்களும் , தாய் தந்தையரான லக்ஷ்மீதேவியும் , மஹா விஷ்ணுவும் விடுபட்டு வருவார்கள்.

maadi thottam in tamil pdf / மாடித்தோட்டம் எப்படி அமைக்க வேண்டும் மற்றும் அதன் பயன்கள் தமிழில்

மேலும் ஜலந்தரனோ , சிவனால் மடியக் கூடியவன் . இவனுக்கு  சிவனிடத்தில் குரோதம் ஏற்படச் செய்வதே தகுந்த யோசனை ஆகையால் நான் உடனே ஜோதிபுரியை அடைத்து , ஜலந்தரனைக் கண்டு ஏதாவது ஒரு கலகம் செய்தே தீரவேண்டும் . என்று நினைத்து ஜலந்தரன் பட்டணத்தை அடைந்தார் .
இவர் வருவதை கேள்வியுற்று ஐலந்தரனானவன் தன் பரிவாரங்களுடன் எதிர்சென்று தன் சபைக்கும் அழைத்து வந்து , ஆசனத்தில் அமரச்செய்து அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க , அவனை நாரதரானவர் அசீர்வதித்தார் . பிறகு ஜலந்தரனும் ஆசனத்தில் அமர்ந்த நாரதரைப் பார்த்து , முனிபுங்கவரே ! எல்லாம் வல்ல தங்கள் தர்சனமே எனது ஜன்ம சாபல்யம் எனக்கூற , நாரதர் , ஹே ராஜன் ! எல்லாம் ஸ்ரீமந்நாராயணன் செயல் . இருக்கட்டும் . ராஜ்ய பரிபாலனம் சீராக நடைபெற்று வருகின்றதா என்று கேட்க , எல்லாம் தங்கள் தயவால் சுகமே ! என்று ஜலந்தரன் பதில் கூறி , ஸ்வாமி தாங்கள் இவ்வளவு தூரம் என்னை நாடிவந்தது நான் செய்த பூஜையின் பலமே . ஸ்வாமி ! நீங்கள் வருவதென்றால் கையில் ஒரு விவஹாரத்தை வைத்துக் கொள்ளாமல் வரமாட்டீர்கள் என்று நான் அறிவேன் . ஏதாவது விசேஷமுண்டா ?. தாங்கள் வந்த விஷயத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டான் ஜலந்தரன் .
 நாரதரும் , ஜலந்தரா ! லக்ஷக்ஷ்மீ சமேதராய் மஹா விஷ்ணு வானவர் இந்த்ராதி தேவர்களுடன் உமது பட்டணத்திலேயே சதாவாசம் செய்வதென்றால் சாமான்யமா ? உன் பட்டணமானது , தேவ லோகத்திற்கும் நீ வைகுண்டத்திற்கும் மேலானதாக உடையதாய் சிறப்புற்று விளங்கி வருகிற தென்றால் உனக்கு என்ன குறை உண்டு ? மேலும் நீ அடைந்திருக்கும் நவரத்னாதிகளும் , சகல ஐஸ்வர்யங்களும் வேண்டியதை அளிக்கும் காமதேனுவும் , கற்பக விருக்ஷமும் சிந்தாமணியும் , ஐராவதமும் இவைகள் எல்லாம் நிரம்ப பிரகாசம் செய்கின்றன . ஹே , ஜலந்தரா ! மேலும் மஹ பதிவ்ரதா சிரோன்மணியாகிய பிருந்தையையும் நாயகியா அடைந்த உனக்கு ஈடு உண்டோ ? அஷ்டதிக்கிலும் உம்முடை பிரதாபமே விளங்கி நிற்கிறதென்றால் நீ செய்த ஓர் தவத்தின் பயனேயாகும் . ஆனால் ஒன்று .
 அதற்கு ஜலந்தரன் , என்ன ஸ்வாமி ! ஆனால் ஒன்று என்ற சொல்லானது மறைபொருளாக இருக்கிறதே விளங்கச் சொல்லுங்கள் எனக்கேட்க ...

நாரதரும் ஜலந்தரா ! நான் வீணாகானத்துடன் ஹரிஸ்மரணை ( ஹரி நாம சங்கீர்த்தனம் ) செய்து கொண்டு கைலாச சிகரத்தின் வழியாக வர நேர்ந்தது . அப்படியே நான் கைலாசத்திற்கும் சென்றேன் . கைலாசத்தை அடைந்ததும் , அவ்விடம் தேவகணங்களும் பூதகணங்களும் நந்தி விக்னேஸ்வரர் முதலானவர்கள் புடை சூழ்ந்திருக்க , மஹான்களெல்லாம் யோகா அப்பியாசத்திலிருக்க , சிகரத்தின் உச்சியில் நவரத்ன கசிதமாகிய பொற்பீடத்தில் அமர்ந்து இருக்கும் பார்வதி , பரமேஸ்வர்களைக்கண்ட மாத்திரத்தில் நான் மிகவும் மனம் பூரிப்பு அடைந்தவனாய் , ஆச்சரியமடைந்து , மூன்று ம்உலகங்களிலும் காணக்கூடாத ஐஸ்வர்யங்களையும் நவரத்னங்களையும் காண என் கண்கூசிற்று . உன்பட்டணமாகிய  ஜோதிபுரத்திலும் இதேமாதிரி ஜகஜ்ஜோதியாக ப்ரகாசம் மி பொருந்தியிருக்கும் என்ற சந்தோஷத்துடன் , உன்னிடத்தில் ஈப்த இருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் கண்டு மகிழ்ந்து யில் செல்லலாம் என்று வந்ததில் , அதற்கு மாறாக ஜோதிபுரி என்ற கச் பெயருக்கேற்ற அவ்வளவு ப்ரகாசம் பொருந்திய ப்ரதானமான பகள் ஜீவரத்னங்களைக் காணோம் . என்று சொல்ல .. 

 ஜலந்தரன் , ஸ்வாமி ! அவ்வளவு சிறப்பான ரத்னம் சிவனிடத்தில் இருப்பதாக பார்த்திருக்கிறீர்களா ? அது எப்படிப்பட்ட ரத்னம் என்பதை எடுத்துச்சொல்ல வேண்டும் .

 நாரதரானவர் , ஜலந்தரா ! உன்னிடத்தில் சொல்லி  ப்ரயோஜனம் யாது ? அவைகளை அடைய உன்னால் முடியுமா ? முடவன் கொம்புத் தேவனுக்கு ஆசைப்பட்டது போலல்லவா  இருக்கிறது என்று சொல்ல ... 

ஜலந்தரனானவன் , என்ன ஸ்வாமி ! அப்படி நினைத்து வீட்டீர்கள் . உங்கள் ஆசீர்வாத பலத்தால் நான் அதைக் கட்டாயமாக கிரஹித்துக் கொண்டுவர தைரியமிருக்கிறது  விஷயத்தைச்சொல்லுங்கள் என்றுரைக்க ...

 நாரதர் , ஹே கங்காசுனே ! உம்மிடத்தில் இருக்கும் ஐஸ்வர்யங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் அந்த பரமசிவனிடத்தில் இருக்கும் ஒரே ஒரு ரத்னத்திற்கு ஈடு ஆகவே , முடியாது. 

ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும் - Ekadasi Vratham procedure in Tamil

மேலும் அவ்விடம் ஸ்திரீ ரத்னங்களாக விளங்கும் அப்சரஸ் ஸ்திரீகள் என்ன , நாக கன்னிகைகள் என்ன இவர்களுக்கு எல்லாம் மேலாக விளங்குகின்ற ஜீவரத்னமாகிய பார்வதி  என்னும் பெண் ரத்னமானது ஒன்றே அக்கைலாகச கிரியை பிரகாசிக்கச் செய்கின்றது அதற்காகத்தான் இந்த ரத்னத்த அடைய உன்னால் முடியாதே என்று வருந்தினேன் . மேலும்  ஒரு கால் அந்த ருபவதியான பார்வதி என்னும் நாகபூஷணி ஸ்நானம் செய்து கொண்டிருக்கையில் , தற்செயலாக ப்ரம்ம தேவரானவர் அவ்வழி வர , அவளது ரூபா லாவண்யத்தை  கண்டு மயங்கி தன் வீரியைத்தை விட்டார் என்றால் அவள் எப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்தவள் என்று யோசித்துப் பார். மேலும் ஈஸ்வரனே அந்த பார்வதியினுடைய செளந்தர்யத்தில் ஈடுபட்டு , பலவித லீலாவினோத கேளிக்கையால் சந்தோஷம் அடைந்தவராய் அந்த பார்வதியின் மாயையால் கட்டுண்டும் . பெட்டிப் பாம்பு போல் அடங்கி இருக்கிறார் என்றால் மற்றதைச் சொல்லவும் வேண்டுமோ ? நீயே நன்றாக ஆலோசித்து செய்ய வேண்டியவைகளை நிதானித்து , யோசித்துச் செய் என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார் .

 அவ்வாறு சொல்லி நாரதப்ரஹ்மம் சென்றபின் ஜலந்தரனானவன் பித்தம் தலைக்கேறினவனாய் , உண்ணும் போதும் உறங்கும்போதும் பார்வதியின் பெயரையே உச்சரித்துக் கொண்டும் , ராஜ்ய பரிபாலனத்தை சரிவர கவனிக்காமல் , மஹா மோஹாந்தகாரத்தில் அழுந்தியவனாக இருந்து வரும்பொழுது கொஞ்சம் மனந்தெளிந்து மனதில் உறுதி நிலவச்செய்து , சரி நான் எவ்விதத்திலும் அப்பார்வதியை அடைந்தே தீருவேன் என்று தன் தூதனாகிய ராகுவை அழைத்து , அடேராகு ! நீகைலாசகிரிக்குச் சென்று பரமேஸ்வரனைக் கண்டு , உம் சமீபத்தில் வீற்றிருக்கும் பார்வதி என்ற ரத்னமணியை , உடனே அழைத்துவரச் சென்னதாகச் சொல்லி அழைத்து வா ! என்று கட்டளையிட்டு அனுப்பி வைத்தார் .

 அவ்வுத்தரவை மேற்கொண்ட ராகுவானவன் , மனோவேகம் வாயு வேகமாய் அக்கைலாசகிரியை அடைந்து , பூர்ண சந்த்ரன் போல் விளங்குகின்ற அக்கையிலையை தன் ஸ்வரூபத்தினால் க்ருஷ்ணபக்ஷத்து பஞ்சமிபோல் இருள் உண்டாக்கும்படி செய்து , நந்திகேஸ்வரரைக் கண்டு அவரிடத்தில் சம்மதம் பெற்று , உட்சென்று பரமேஸ்வரரைக் கண்டான் . அந்தப் பரமசிவனின் கண் ஜாடையினால் ஏவப்பட்டவனாய் சமீபத்தில சென்று , தண்டனிட , சிவமூர்த்தி இவனைக் கண்டு , நீயார் ? உன் பெயர் என்ன ? வந்த விஷயம் யாது ? என்று வினவ . அதற்குத் தூதனான ராகுவானவன் , ஸ்வாமி ! நான் ஜோதிபுரியை அரசாளும் அசுரேந்திரனாகிய ஜலந்தர அசுரனுடைய தூதன் . என் பெயர் ராகு . நான் வந்த விஷயம் யாதெனில் , திகம்பரராயும் , சமஸ்சானத்தில் சதா வாசம் செய்பவராயும் , அத்தியே ஆபரணமாகவும் உடைய உமக்கு , ரத்னங்களுக்கெல்லாம் ஜகஜ்ஜோதியாக ப்ரகாசிக்கின்ற பார்வதி என்னும் ஸ்திரீ ரத்னத்தை நீ அடைய உனக்கு யோக்யதை இருக்கிறதா ? மேலும் ஸ்வர்ணமயமான தேஜஸ்ஸோடு விளங்கும் இவளை , பரதேசியைப் போல் அலைந்து பிக்ஷை வாங்கி உண்டு திரியும் தி உனக்கு இவள் ஏற்றவளாக இல்லை . ஆகையால்  இப்பார்வதியானவள் , லக்ஷக்ஷ்மீயும் நாராயணனும் இந்த்ராதி தேவர்களும் இப்போது வாஸம் செய்து வருகிற நம்  ஜோதிபுரியின் அரசனான ஜலந்தரன் என்ற ப்ரஹ்மாவின் மானஸபுத்ரன் ஆண்டுவருகிற ராஜ்யத்தில் நவரத்ன மயமான த்து தேஜஸோடும் ப்ரகாசிக்கின்றதும் , நவமணிகளாகிய கோமேதகம் , நீலம் , பவழம் , புஷ்பராகம் , மரகதம் , மாணிக்கம் , முத்து , வைரம் , வைடூர்யம் முதலிய ஒளிகளால் ப்ராகாசிக்கும் நம் ஜலந்தராசுரனது சமீபத்தில் வீற்றிருக்க வேண்டியவள் என்று தங்களிடம் தெரிவித்து பார்வதியை அழைத்து வரும்படி ஜலந்தரனின் கட்டளை என்று தெரிவிக்க , உடனே பரமேஸ்வரருடைய புஜங்களில் இருந்து இடிக்குச் சமானமாக உடைய சப்தத்துடன் ஒரு ரௌத்ர புருஷன் உண்டானான் . 
அவனுடைய முகமானது சிங்க முகமும் , ஜொலிக்கின்ற நேத்திரமும் , மஹா பயங்கரமாக விளங்கி சிங்கம் போல் கர்ஜனை செய்து கொண்டு ராகுவின் அருகில் வர , ராகு அதைக்கண்டு பய ப்ராந்தியடைய ரௌத்ர புருஷனானவன் ராகுவை ஒருகையால் எட்டிப் பிடித்து புசிக்கத் தொடங்கினான் .
அதைக் கண்ணுற்ற பரமேஸ்வரன் ரௌத்ர புருஷனை நோக்கி , அப்பா சிங்கமுகா ! இவனைக் கொல்லாதே . இவன் தூதன் . தூதாக வந்தவனைக் கொல்லலாகாது . விட்டுவிடு . என்று சொல்ல ...

சிங்கமுகன் அந்த ராகுவை விட்டுவிட்டு , ஐயனே ! எனக்கு பசி பொறுக்க முடியவில்லை காதடைக்கிறது . என் பசியைத் தீர்க்க ஏதாவது அனுக்ரஹிக்க வேண்டும் என்று கேட்க , கபாலியானவர் ஹே சிங்கமுகா ! நீ உன் கை கால்களின் மாம்சத்தைப் பிடுங்கித்தின்று பசியாற்றிக் கொள் என்று சொல்ல , அன்னவரின் ஆக்ஞைப்படி அந்த ரௌத்ர புருஷன் தன் சரீரத்திலுள்ள மாமிசங்களை பிடுங்கித்தின்று பசியாற்றுக் கொண்டிருக்கையில் , தலை மாத்திரம் மீதி நின்றிருக்க , உடனே சங்கரன் , அப்பா / பொறு . தலையை மாத்திரம் ஒன்றும் செய்யாதே . அப்பா ! நீ சொன்ன சொல் தவறாதவன் . நீ இத் தலையுடன் கீர்த்தி முகன் என நாமம் அடைந்து விளங்கியிருக்கக் கடவாய் . நீ இது முதல் என் வாசலிலேயே காவலாய் இருக்க வேண்டும் . எவன் ஒருவன் உன்னை பூஜிக்காமலும் அர்ச்சிக்காமலும் என்னை மட்டும் வந்து பூஜார்ச்சனை முதலியன செய்தால் , அவர்களுக்கு நிஷ்பலனைக் கொடுக்கும் . ஆகையால் உன் பூஜையே முதவலாவதாக ஆகும் என்று கட்டளையிட்டார் . பிறகு ரௌத்ரனிடம் இருந்து விடுபட்ட ராகு என்பவன் , ஒரே ஓட்டமாக மாயமாய் மறைந்து ஒடி , செத்தேன் , பிழைத்தேன் என்று காடு , மலை , கடல் , வனம் , வனாந்தரங்க எல்லாம் கடந்து , அப்பா ! நான் இரண்டாவது தடவையாக பிறவி எடுத்தேன் என்று தன் பட்டணத்தை அடைந்தான் . என்று பகவான் யாமையிடம் சொல்லியருளினார் .

பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றிற்று .

Download Now