Download Now
karthika puranam chapter 16 pdf / கார்த்திகா புராணம் 16 வது அத்யாயம்
கார்த்திகா புராணம் 16 வது அத்யாயம் 

கார்த்திகா புராணம் 16 வது அத்யாயம் 

பாமையனவள் கண்ணனைப் பார்த்து , நாதா ! ஜலந்தரனுக்கும் சங்கரனுக்கும் யுத்தம் நடந்ததில் ஜய அப ஜயம் யாருக்கு உண்டாயிற்று ? அதைத் தெரிவிக்க வேண்டும் என கேட்க ... 

ப்ரியே ! சொல்கிறேன் கேள் என்று கதையை சொல்லத் தொடங்கினார் .

 போர்களத்தில் ஜலந்தரனும் சங்ரனும் தங்கள் பலாபலத்தைக் காட்டி வெகு தீவிரமாக யுத்தம் செய்து கொண்டிருக்க , ஜலந்தரன் நகரத்தில் ஜலந்தரனுடைய மனைவி பிருந்தையானவள் மஞ்ஜத்தின் மீது சயனித்துக் கொண்டு  ஆஹாரம் , நித்திரையின்றி கவலையுடன் , ஜயோ தன் நாயகன் யுத்தத்திற்காகச் சென்றவர் இன்னும் வராத காரணம் யாதோ ? என்று மனதில் சஞ்சலமடைந்தவளாய்க் கவலை கொண்டிருக்கையில் , தன்னை மறந்து நித்திரை கொண்டாள் . மறுநாள் காலையில் விழித்தெழுந்ததும் , தான் செய்யவேண்டிய கடமையை முடித்துக் கொண்டு , தன் தோழியுடன்கூட மன நிம்மதி அடைவதற்காக நந்தவனம் சென்று , வட விருக்ஷத்தின் அடியில் அமர்ந்த தன் தோழியிடம் , சகீ நான் நேற்றிரவு ஆழ்ந்து சித்திரை செய்யும் சமயத்தில் அதி பயங்கரமான கனவு ஒன்று கண்டேன் . அது முதல் என் மனம் பதைக்கின்றது . நான் கண்ட கனவின் பலன் எவ்வாறு நடக்குமோ ?  யுத்தத்திற்குச் சென்ற என் கணவரும் இதுவரை வரவும் காணேன் அவர் விஷயமும் ஒன்றும் தெரியவில்லை . எனக்கோ பைத்தியம் பிடித்து விடும்போல் தோன்றுகிறது எனது மனம் நொந்துகொள்ள , சகியானவள் , அம்மா ... கவகைப்படதீர்கள் யுத்தத்திற்குச் சென்றவர் ஜயத்தோடு திரும்பி வந்துவிடுவார் . என்று ஆறுதல் கூற பிருந்தையானவள் மறுபடியும் அடி சகீ நான் கண்ட கனவின் பலன் என்ன என்பதை உன்னால் எடுத்துரைக்க முடியுமா என்று கேட்க ,ப்ருந்தையானவள் , நான் கண்ட கனவினை வெளியில் சொல்லவும் பயமாய் இருக்கிறது . ஆனால் சொல்கிறேன் 

Also read - karthika puranam in tamil day 12 pdf

அதாவது நான் கண்ட கனவு யாதெனின் , என் பர்த்தாவானவர் தைல அப்யங்க ஸ்னானம் செய்துகொண்டு . ஆடையின்றி கழுத்தில் அரளிப்பூ மாலையுடன் எருமைக் கடாவின் மேலேறிக் கொண்டு எமதூதனை ரட்சிக்கின்ற தென்திசைக்கு அதிபதியான எமதர்ம ராஜனைப்போல கன்னங்கரேலென்று கோர தந்தத்துடன் கூடினவராய் தென்திசையை நாடிச் செல்வதாகவும் , தவிர நம் பட்டணமே  கடலில் மூழ்குவதாகவும் கனவு கண்டேன் . இதனால் மணாளருக்கு ஏதாவது தீங்கு நேர்ந்திருக்குமோ என்று என் நெஞ்சம் வாட்டுகிறது என்று மிகுந்த திகிலடைத்தவனாய் தெரிவித்தாள் 

தோழியானவள் , அம்மா ! இந்த அற்பக் கனவைக் கண்டு பயப்படுகிறீர்களா ? மனதை சிதறவிடாதீர்கள் . பகலில் நம் என்ன என்ன நினைத்துக் கொள்கிறோமோ அவைகள்தான் சிலb சமயத்தில் கனவிலும் தோன்றக்கூடும் . இதனால் நமக்கு எவ்வித இடையூறும் நேராது வாருங்கள் . நாம் இந்த வனத்தைச் சுற்றி அதன் அழகைக் கண்டுகளிப்போம் என்று பருந்தையுடன் அவ்வனத்தைச் சுற்றிவந்து அங்குள்ள பலவித புஷ்பச் செடிகள் செழித்து வளர்ந்து இருப்பதை கண்டுகளித்துக் கொண்டிருக்கையில் , பகவானான மஹாவிஷ்ணுவானவர் பார்வதிக்கு ஆறுதல் கூறி , ஜலந்தரன் நகரடைந்து ப்ருந்தையின் கற்பை பங்கம் செய்வதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தார் 

இப்படி இருக்கையில் பிருந்தை யானவள் தன் தோழியுடன் பூஞ்சோலைக்கு சென்றிருப்பதை அறிந்த விஷ்ணுவானவர் இதுதான் ஏற்ற சமயம் என்று நந்தவனம் வர அங்கு ப்ருந்தையனாவள் தன் தோழியுடன் உலாவி வருவதைக்கண்டு . அவ்விருவர்களை பிரித்துவிட வேண்டும் என்று நினைத்து , தன் மாயையால் இரண்டு அசுரர்களை உண்டாக்கி ,அந்த அசுரர்களிடம் , அதோ ! அவ்விரு பெண்களையும் பயமுறுத்தி அவர்களை பிரித்து வைக்கவேண்டும் என்று ஆக்ஞாபித்து முனி வடிவுடன் அங்குள்ள ஓர் மரத்தடியில் தர்பாசனத்தைப் போட்டு அதன்மேல் உட்கார்ந்து இரு கண்களையும் மூடிக்கொண்டு யோக நிஷ்டையில் அமர்ந்தார் . அந்த இரண்டு ராக்ஷஸர்களும் அவ்விரு பெண்களை துரத்தும் பாவனையாக ஓட , அவர்கள் ஓடிவருவதைக் கண்ட பிருந்தையும் தோழியும் மனதில் அச்சம் கொண்டவர்களாக பீதியுடன் மூலைக்கொருவராக பிரிந்து போனார்கள் . பிருந்தையோ ஓட சக்தியற்றவளாய் தன்னால் முடிந்தவரை விரைவாக நடந்து அசோக மரத்தடியில் வர அங்கு ஒரு மஹான் யோக நிஷ்டையில் உட்கார்ந்திருப்பை கண்டு மனதில் தைரியம் தோன்றி அபயக்குரலுடன் அவர் காலடியில் அடைக்கலம் புகுந்தாள் . உடனே அம்மகான் கண்களைத் திறந்து துரத்திக்கொண்டு வந்ததை பார்த்து கோபத்துடன் அவ்விரு ராக்ஷஸர்களையும் பார்த்து கண்ஜாடைக் காட்ட , அவர்கள் திரும்பிபோயினர் . பிறகு அம் மஹானானவர் பிருந்தைக்கு தைரியம் கூறி பயத்தை நிவர்த்தி செய்தார் . 

Also read - Rajarajeshwari stotram tamil pdf / ராஜ ராஜேஸ்வரி அம்மன் மந்திரம் / ஸ்த்ரோத்திரம்

இப்படியிருக்கையில் , தன் சக்தியால் இரண்டு குரங்குகள் உண்டாக்க , அக்குரங்குகள் அம்முனிவரின் அடிபணிந்து மறைந்து போனது . இவைகளையெல்லாம் பார்த்து கொண்டிருந்த பிருந்தையானவள் , இவர் எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் சக்திவாய்ந்தவர் போலத் தெரிகிறது நானும் என் பர்த்தாவின் விஷயத்தைக் கேட்டுத் தெரிந்த கொள்ளலாம் என்று அம்முனிவரை வணங்கி , ஸ்வாமி ! என்னே அகோரமான ஆபத்தினின்று காப்பாற்றினீர்கள் . எனக்கு ப்ராணபிக்ஷை கொடுத்தும் ரக்ஷித்தீர்கள் .இதை நான் என்றும் மறவேன் . ஆனால் , நான் தங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் கேட்கலாம் என்று என் மனம் தூண்டுகிறது . அதைக் கேட்கலாமா ... என்று ஆலோசிக்கிறேன் எனக்கூற ...

 அதற்கு முனியானவர் பெண்களின் நாயகியே பயப்படாதே கேள் உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறேன் என்றார்.

 பிருந்தையானவள் மஹா சந்தோஷம் அடைந்தவளாய்... யோகிநாதா ! என் ப்ராணநாதர் கைலாசபதியுடன் யுத்தம் புரியச் சென்றிருக்கிறார். அவர் எப்போது திரும்பிவருவார் என்பது பற்றி எனக்குத் தாங்கள் உரைக்கவேண்டும் என்று கேட்க , பகவானான முனீஸ்வரர் இதுதான் சமயம் என்று மனதில் நினைத்தவராய் , பெண்ணே ! (ஞானத்ருஷ்டியால் பார்த்தவன்போல் பாவனை செய்து ) அறிந்தேன் , அதாவது , உள் கணவன் யுத்தத்தில் ஐயம்பெற்று ஜயசீலராய் வந்து கொண்டிருக்கிறார் . அதோ , பார் ! வடதிசையில் வந்து கொண்டிருக்கிறார். ஆம் , பார் . அதோ வந்து விட்டார் என்று சொல்லவும் , பிருந்தையானவள் அந்த திக்கையே நோக்கி கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கையில் , முனியான விஷ்ணுவானவர் உடனே மறைந்து ஜலந்தர ரூபத்துடன் அவள் எதிரில் வருவதைக்கண்ட பிருந்தையாளவள் , மனம் பூரிப்படைந்தவளாய் துள்ளிக் குதித்தோடி தன் நாயகனிடத்தில் விரைவில் சென்று , ஜலந்தரனைக்…கட்டியணைத்து ஆலிங்களம் செய்துகொண்டாள் . பிரிந்த காதலன் வந்து சேர்ந்த ஓர் சந்தோஷத்தால் தான் மெய்மறந்தவளாய் சற்று நேரம் அசைவற்றிருந்து , பிறகு இருவரும் ஒன்றுகூடி அரண்மனையை அடைத்து சந்தோஷ சாகரத்தில் ஆழ்ந்திருந்தார்கள் . 

இங்கு இவ்வாறு இருக்க , கைலாசகிரியில் பார்வதியின் மேல் மோஹங்கொண்டு சென்ற ஜலந்தரன் , தன் எண்ணம் பலிக்காது மறுபடியும் யுத்தகளம் வந்து சங்கரனுடன் கடும்போர் புரியலானான் . இருவரும் சளைக்காமல் தங்கள் முழுத்திறமையயக் காட்டி யுத்தம் செய்ய , சங்கரனானவன் மஹா கோபத்துடன் ருத்ராம்ஸத்துடன் கூடியனவராய் , என்று சக்ராயுதத்விைட்டு ஜலத்தராகரனின் சிரஸை சேதித்தான் . அவ்வாறு துண்டிக்கப்பட்ட சிரஸானது கீழே விழாமல் ஆகாயததில் கிளம்பச் சென்று , தன் பட்டணத்து அரண்மனையில் மாயா ஜலந்தரனும் ப்ருந்தையும் கூடிக்குலாவி ஆனந்தத்தை அனுபவித்து சந்தோஷமாக உட்கார்ந்து  இருக்கையில் , ப்ருந்தையின் மடிமேல் ஜலந்தரன் சிரம் வந்து விழவும் ப்ருந்தையானவள் திடுக்குற்றவளாய் பயந்து அந்த சிறஸை நன்றாக சோதித்துப் பார்க்க , தன் கணவரின் சின்னங்களெல்லாம் சரியாக இருக்கக்கண்டு மஹா விசனம் : அடைத்தவளாய் , இதில் ஏதோ சூது நடந்திருக்கிறது . இந்த சிரஸானது நிச்சயம் என் கணவருடையது . இதுவரை கணவனாக வந்து என்கற்பைக் கெடுத்தனன் அசுரணாயிரக்குமோ என்று எண்ணி , மஹாகோபத்தை அடைந்தவளாய் அம்மாயா ஜலந்தரனை நோக்கி , அடே பாவி என் கணவனைப்போல் ரூபம் தரித்து , என்னை மோசம் செய்து என் பாதி வ்ரத்யத்தை பங்கம் விளைவித்த நீ யார் ? உண்மையைச் சொல் . சொல்லாவிடில் உன் சீலமே உன்னைச் சுடும் என்று கேட்க , அதற்கு விஷ்ணுவான ஜலந்தரன் ஒன்றும் மறு மொழி கூறாது தன் ஸ்வயரூபம் அடையவும் , ப்ருந்தையானவள் பரர்த்து திடுக்கிட்டு யார் ? மஹாவிஷ்ணுவா ? பரந்தாமனா ? ஐயோ ! இவரா இப்பேர்ப்பட்ட அநீதி காரியம் செய்தார் என்று மஹா கோபத்துடன் விஷ்ணுவை நோக்கி , எல்லா உலகத்தையும் தன் குக்ஷியில் வைத்து ரக்ஷிக்கும் லோக ரக்ஷகரே ! நன்றாயிருக்கிறது உன் செய்கை . பாபகர்மத்திற்கு உடந்தையாய் இருக்கும் அதர்மத்தைக் கைபிடித்து என்னை மயங்கச் செய்து என் கற்பையும் கெடுத்தீர் . ஆகையால் , உம்மால் ஏவல் செய்யப் பட்டு , என்னை துரத்திவந்த ராக்ஷஸர்கள் அடுத்த யுகத்தில் உன் மனைவியை அபகரித்துக் கொண்டுபோவார்கள் . அப்போது மனைவியின் பாசத்தால் நீ காட்டில் அலையும்போது , நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்த சமயத்தில் அங்கு தோன்றிய வானரர்களே அப்போது உனக்கு சகாயமாயிருந்து , உன் மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து உன்னிட சேர்ப்பிப்பார்கள் . அப்போதுதான் உன் சாபமும் விலகும் என்று மஹாவிஷ்ணுவை சபித்து ப்ருந்தையானவள் தன் நாயகரின் சிரஸைக் கையிலேந்தி அக்னிப்ரவேசமானாள் . 

 அவ்வாறு பிருந்தையானவள் அக்னியில் குதித்தவுடன் விஷ்ணுவானவர் அதிக கவலையடைந்தவராய் , பிருந்தை நினைவுகளையே உருக்கொண்டு அச்சிதையில் எரிந்த சாம்பலை அள்ளி அள்ளி உடம்பெல்லாம் பூசிக் கொண்டு பைத்தியம் பிடித்தவராய் அலைந்து திரியலானார் என்று பகவான் பாமையிடம் சொல்லி முடித்தார் 

16 வது அத்யாயம் முற்றிற்று .