karthika puranam tamil chapter 17 pdf
karthika puranam tamil chapter 17

கார்த்திகா புராணம் 17 வது அத்யாயம் 

    இவையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பாமையானவள் கண்ணணைப் பார்த்து , ஸ்லாமி ! எல்லா விஷயமும் நன்றாப் புரியும்படி தெளிவாக எடுத்துரைத்தீர்கள் . ஆனால் , அந்த ஜலந்தரன் யுத்தத்தில்  எவ்வாறு தோல்வி அடைந்தான் ? அவனுடை சிரசானது எப்படி கொய்யப்பட்டு ப்ருத்தையின் மடிமேல் வத்துவிழுந்தது என்பதை முதலில் இருந்து எனக்கு ஸவிஸ்தாரமாக எடுத்துச்சொல்ல வேண்டும் எனக்கேட்க , அதற்கு பகவான் , சத்யா சொல்கிறேன் . யுத்தகளத்தில் ஜலந்தரனுக்கும் ஈஸ்வரருக்கும் மிகக் கடுமையாக யுத்தம் நடந்தது . அப்படி யுத்தம் புரிவதில் ஜலந்தரனானவன் ஈஸ்வரருடைய வீரவல்லமையைக் கண்டு மனதில் ஆக்ரோஷம் கொண்டு ,சும்ப நிசும்பனை அழைத்து அவர்களிடம் ஏதோ ரகசியமாய் சொல்ல , அதைக்கேட்ட இருவரும் உடனே மறைந்து போய் மாயா பார்வதியை உண்டுபண்ணி ரதத்தின் தூணில் கட்டிக்கொண்டு யுத்த களத்தில் வர , அம் மாயா பார்வதியானவள் நிஜ பார்வதியைப்போல் ரோதனம் செய்து கொண்டு வருவதைக் பரமேஸ்வரரானவர் பார்த்து , மனங்கலங்கினவளுய் ஆச்சரியமடைந்து சக்தியே வடிவாக இருக்கும் பார்வதியை கையால் தொட்டு இழுத்து தேரில் கட்டிக்கொண்டு வர எவராலும் முடியாதே . இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று எண்ணினவராய் , மனம் சோர்ந்து தன் நிலைமை இழந்திருக்கும் சமயம் , ஜலரந்தரனாவன் இதுதான் தருணம் என்று தன் வில்லைக் கையிலேந்தி அக்னி ஜ்வாலையுடன் கூடின ஓர் அஸ்திரத்தை ஈஸ்வரன்மேல் ப்ரயோகிக்க , ஈஸ்வரனானவர் மனம் தெளிவடைந்து அந்த பாணத்தை சேதித்து மறுபடியும் பார்வதியைப் பார்க்க , அவளது முகார விந்தத்தினால் இவள் பார்வதியல்ல . மாயையால் நிர்மாணிக்கப்பட்டவள் என்று நிச்சயித்து உடனே ஜலத்தனுக்கு எதிராக நின்று தன் கையில் தனுஷ் தாங்கி அண்டபிண்ட சராசரங்கள் நடுதடுங்கும் படியாக , மஹா பயங்கர உருத்துடன் விஸ்வரூபம் எடுத்தார் . 

    அப்படி ரௌத்ரங்காரத்துடன் தோன்றிய விஸ்வரூபமாகிய சாம்பவமூர்த்தியைப் பார்த்து , அசுரப்படைகள் பயந்து கதிகலங்கின வர்களாய் கதறிக்கொண்டு மூலைக்கு ஒருவராய் ஓடினார்கள் . தன்சைன்பம் பயந்து ஓடுவதைப்  பார்த்த ஜலந்தரன் என்பவன் , அவர்களைப் போகவிடாது அமர்த்தி மிக க்ரூரமான ஒரு பாணத்தை மேல்நோக்கித் தொடுத்தான் ஜலந்தரன் , ஆகாயமானது மறைந்து அந்தகாரமாக்கியது தீடீர் என இருள் சூழ்ந்ததைக் கண்ட பசுபதி தன் ஒரே பாணத்தால் அதை விலக்கி ப்ரகாஸத்தை உணாக்கினார் .இதுகண்ட ஜலந்தரன் மறுபடியும் ஒரு பாணத்தால் ஈஸ்வரனின் வாகனத்தை தாக்க , அவ்விடபமானது அடிபட்டு பயந்து ரணகளத்தினின்று ஓடலாயிற்று . தன் வாகனம்  ஓடிச் செல்வதைக் கண்ணுற்ற கபாலீசன் தடுத்தும் அது பயத்தால் மிரண்டு கீழே விழுந்துவிட்டது . இடபமானது கீழே விழுந்ததைப் பார்த்த சர்வேஸன் , மனதில் மஹா உக்கிரத்துடன் ஈரேழு பதினான்கு லோகங்களும் நடுநடுங்க , மஹா ரௌத்ராகார ரூபத்துடன் தேவர்களால் கொடுக்கப்பட்ட ஜோதியின் அருளால் கோடி சூர்ய பிரகாசத்துடன் ஆகாயத்தில் கிளம்பி , மூவுலங்களையும் சுற்றி கிறுகிறு என்று சுழன்று வரும்போது , நடுவில் தோன்றிய பெரும் பர்வதங்களெல்லாம் தவிடு பொடியாகவும் , ஏழு கடல்களும் கொந்தளித்தும் , அண்டபிண்ட சராசரங்கள் எல்லாம் ஊஞ்சல் போல் அசைந்தாடவும் மஹா க்ரூரமாக அந்த சுதர்ஸன சக்கரமானது சுழன்று வந்து ஜலந்தரனுடைய சிரசை கொய்து , அந்த சக்கரமானது மீண்டும் சாம்பவமூர்த்தியை வந்தடைந்தது .

    அப்போது தேவர்களும் முனிவர்களும் பூமாரி பொழிந்து தேவ துந்துபிகள் வாத்ய கோஷம் செய்தார்கள் . அப்பால் தேவர்களும் முனிவர்களும் , எங்கள் இடரைத் தீர்த்த ஜயனே ! இவையெல்லாம் தங்கள் திவ்ய திருவிளையாடலே என்று ஸ்ரீசாம்பவமூர்த்தியைக் கொண்டாடினார்கள் . பிறகு ஜலந்தரன் சிரஸானது அறுந்த ஆகாயத்தை அடைநது சுழன்று வந்து பத்தினியான ப்ருந்தையின் மடிமேல் விழவும் , இதையறிந்த ப்ருந்தையானவன் மாயா ஜலந்தரனாக நடித்த விஷ்ணுவை சாபம் கொடுத்தும் , பின் இவள் அக்னிப்ரவேசம் ஆனது . ப்ருந்தையின் ஆவியானதுஜோதியாகத் தோன்றி பார்வதியிடம் லயமானதும் முதலிய விஷயங்களைச் சொல்ல , பாமையானவள் , நாதா , சரிதான் . சுடலையைச் சுற்றிக்கொண்டு ப்ருந்தையின் மேல் பைத்தியம் பிடித்த அவ்விஷ்ணுவின் கதியென்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என கேட்க , கண்ணனானவன் , கேளாய் , பாமா ! அந்த விஷ்ணுவானவர் அப்ருந்தையின்மேல் கொண்ட மோஹத்தால் உடல்  மெலிந்து துரும்புபோல் ஆகியும் , அச் சிதை அண்டத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்கையில் தேவர்கள் மனம் சஹியாதவர்களாய் கைலாசம் சென்று ஈஸ்வரனைப் பார்த்து ஸ்வாமி ! அகில லோக சரண்பஜான ஸ்ரீஹரியின் இடரைத், தாங்களே தீர்க்கவேண்டும் என்று சாம்பவமுசத்தியும் முறையிட , சங்கரனானவர் , தேவர்களே ! அவருக்கு நேர்த்த காமப் பைத்தியத்தை நீக்க என்னால் ஆகாது . ஆனால் , ஒன்று சொல்கிறேன் . அதாவது , நீங்கள் எல்லோரும் சரயூ நதிக்கரை அடைந்து மூல ப்ரக்குதையான ஆதிசக்தியைக் குறித்து ஸ்தோத்திரம் செய்வீர்களாகில் , அவளிடம் ப்ரசன்னமாகி உங்கள் மனோபீஷ்டத்தை நிறைவேற்றி வைப்பாள் என்று சொல்ல . அப்படியே , தேவர்கள் எல்லாம் ஒன்று கூடி சரபூ ததிக்கரை அடைந்து , தூய மனதுடன் அச்சக்தியைக் குறித்து தீயானம் செய்தார்கள் . ( அதாவது ) சமஸ்தமான உலகங்களில் 23 பேதங்களாக இருக்கப் பட்டவர்களாயும் , யாதொரு பாவத்தினாலே ஜகத்ரயங்களையும் போக்கடிக்கின்ற மூல ப்ரக்குதியான ஸ்ரீ சக்திதேவியை இவ்விதமாக ஸ்தோத்ரம் செய்தார்கள் 

யாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருதூபேண ஸம்ஸ்தி'தார் நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம !!

    இப்படி தேவர்கள் ஸ்துதி செய்யவே , ஆதி சக்தியானவள் சூரிய மண்டலத்திலிருந்து மஹா தேஜசுடன் மின்னல போல் ப்ரசன்னமாகி தேவர்களை நோக்கி , இந்த்ராதி தேவர்களே ! உங்கள் ஸ்தோத்திரத்தால் நான் அதி சந்தோஷம் அடைத்தவளானேன் . நீங்கள் எண்ணிவந்த காரியத்தை நான் அறிவேன் . ஆனால் , அக்காரியத்தை நிறைவேற்ற என்னால் ஆகாது . நானோ முக்குணங்களில் முறையே பார்வதி , லக்க்ஷ்மி , ஸரஸ்வதி இவர்களிடம் மூன்று அம்சத்துடன் முன்று பேதமாக இருக்கிறேன் . அம்மூன்று தேவிகளின் சக்தியானது ஏகோபித்து நாள் ஆதிசக்தியாக விளங்குகிறேன் . ஆகையால் இவ்விஷயம் என்னிடம் முறையிடுவதைப் பார்க்கிலும் , முக்குணங்களோடு ஜகன்மோஹினிகளான பார்வதி , லக்க்ஷ்மீ , சரஸ்வதீ மூவர்களிடம் போய் வேண்டிக்கொண்டால் , உங்கள் எண்ணத்தை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று சொல்லி சக்தியானவள்அந்தர்த்யானமானாள் . 

Also read :-Sevai bhagavan Potri

    இவ்விதம் சக்தி கூறியதைக்கேட்ட தேவர்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தவர்களாய் மிகக் குதூகலத்துடன் விரைந்து சென்று லக்க்ஷ்மீ , பார்வதி , சரஸ்வதீ இவர்களிடம் மஹா விஷ்ணுவிற்கு தேர்ந்த துன்பத்தைத் தெரிவிக்க , அம்மூன்று தேவியர்களும் யோசித்து , தேவர்களே ! அஞ்ஜாதீர்கள் , இதோ (வித்துக்களை ) தருகிமுேம் . இதை எடுத்துக்கொண்டு போய் நாங்கள் மூவரும் முக்குணங்களுடைய மூன்று பிஜங்கை நிலையற்றிருக்கும் விஷ்ணுவானவர் இருக்கும் இடமாகிய பிருந்தையின் சிதையில் கொண்டுபோய் நட்டு விடுவீர்களாக . நாங்கள் பின்னால் வந்து சேர்கிறோம் என்று , மூன்று பீஜங்களைக் கொண்டுவந்து தேவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள் . அவ்வாறே தேவர்களும் அப்பீஜங்களைக் கொண்டு சிதையில் மூன்று குழியைத் தோண்டி , ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொரு விதையாக வைத்து மண்ணை மூடி நீர்த்தெளித்தார்கள் .

17 வது அத்யாயம் முற்றிற்று .

Also read : EKKATHASI VIRATHAM