Download Now
karthika puranam in tamil day 13 pdf
karthika puranam in tamil day 13 pdf

கார்த்திகா புராணம் 13 வது அத்யாயம் 

ஹே பாமை ! கைலாசகிரிக்குச் சென்று திரும்பிவந்த ராகு ஜலந்தரன் நகரடைந்து , அரசனைக் கண்டு வணங்கி அங்கு நடந்த விருத்தாந்தத்தையும் , தனக்கு நேரக்கூடிய ஆபத்தையும் , பரமசிவனால் தான் காப்பாற்றப்பட்டதையும் விரிவாக எடுத்துரைத்தான் .

 குபேர மந்திரம் 108 போற்றி

 இதைக் கேட்ட ஜலந்தரனானவன் , முகம் சிவக்க மஹா ஆக்ரோஷம் அடைந்தவனாய் , படபடப்புடன் சுக்ராச்சார்யாரைப் பார்த்து , குருவே ! சுடலையைக் காக்கும் பரதேசிப் பரமசிவன் , தான் என்ற அகந்தையுடன் என்னையும் மதியாது , சென்ற தூதனையும்அவமானப்படுத்தி அனுப்பி இருக்கிறான் . இவனை இலகுவாக  விடக்கூடாது . எந்த விதத்திலாவது அவனை தோற்கடிக்கச் செய்து , அந்தப்பார்வதிரத்னமணி என்னும்  பெண்ணை யான் அடையவேண்டும் . ஆகையால் , நாம் யுத்தத்திற்குப் புறப்பட ஆயத்தம் செய்யுங்கள் என்று சொன்ன வார்த்தையைக் கேட்டு , அதன்படியே சுக்ராச்சாரியானவர் மந்திரியிடம் தெரிவித்தும் , மந்திரியானவர் சேனாபதியை வரவழைத்து யுத்தத்திற்கு வேண்டிய அஸ்த்ர சாஸ்த்ர , சேனைகளும் யாவும் தயார் செய்து வை என்றும் தெரிவித்தார் .

 உத்தரவின் ப்ரகாரம் யுத்த சைன்யங்களை சித்தப்படுத்தி அரசனுக்கு அறிவிக்க அரசனானவன் ஆச்சாரியாரை நோக்கி , பார்கவரே ! நாம் நாளைக் காலையில் யுத்தத்திற்காக பிரயாணம் செய்யவேண்டி இருக்கிறது . ஆகையால் நான் இப்போது என்  தர்மபத்னியிடம் விஷயம் தெரிவித்து விடைபெற்று வருகிறேன் . தாங்கள் நாளை உதயத்திற்கு முன் சைன்யங்களை எல்லாம் அணிவகுத்து தயார்செய்து வைக்கவேண்டும் என்று கட்டளையிட்டு , அந்தப்புரம் நோக்கிச் சென்றார் . அங்கு தன் மனைவி நந்தவனம் சென்றிருப்பதைக் கேள்வியுற்று , அப்பூஞ்சோலைக்குச் சென்று கண்மணி ! அந்தப்புரத்தில் உன்னைக்காணாது நீ சோலைக்குச் சென்றிருப்பதைத் தெரிந்து அதிவிரைவாக வந்தேன் . அதாவது , நான் நாளை உதயத்திற்கு முன் யுத்தத்திற்குப் புறப்பட வேண்டியிருப்பதால் உன்னிடம் விடை பெற்றுக்கொள்ள வந்தேன் . நீ சந்தோஷமாக விடை கொடுக்கவேண்டும் . என , ப்ருந்தையானவள் , நாதா ! இது என்ன ? திடீரென வந்து யுத்தத்திற்குப் புறப்படுவதாகத் தெரிவிக்கிறீர்களே ! என்ன காரணம் ? யாருடன் யுத்தத்திற்குப்  போகிறீர்கள் ? என்று கேட்க , அசுரனானவன் , ப்ரியே கயிலையங்கிரியில் வாசம் செய்கின்ற சங்கரனுடன் சமர் செய்யப்போகிறேன் . நீ மறுமொழியின்றி என்னைஅனுப்பவேண்டும் எனக்கூற .

அதற்கு ப்ருந்தை , நாதா ! என்ன , தங்களுக்கு என்ன பைத்தியமா ? உலகத்திற்கே ஹேது பூதராயும் , ஸ்ருஷ்டி , திதி , சம்ஹார கர்த்தாவாகிய பரமேஸ்வரருடன் தாங்கள் யுத்தத்திற்குப் புறப்படுதல் என்பது ஆபத்தில் அல்லவா கொண்டு போய்விடும் . ப்ராணபதி ! அவர் நினைத்தால் நம் ராஜ்யத்தையும் நம்மையும் பஸ்மீகரம் ஆக்கிவிடுவாரே . அவர்மேல் தங்களுக்கு அப்பேர்ப்பட்ட பகைமை ஏற்படக் காரணம் என்ன ? ருத்ர மூத்தியாகிய சிவபிரானோடு யுத்தம் தொடர்வது எனக்கு கிஞ்சித்தும் சம்மதம் இல்லை . ஸ்வாமி ! இதோ எனது வலக்கரம் துடிக்கிறது . பெண்களுக்கு வலது கண் துடித்தால் ஏதாவது விபரீதம் விளையும் என்று சொல்வார்கள் .ஆகையால் , தாங்கள் என் சொல்லை மீறி அந்த பரமன் மீது படையெடுப்பது சரியல்ல என்று பல நீதி வார்த்தைகள் சொல்லியும் ஐலந்தரன் கேளாது ஒரே பிடிவாதமாய் கண்மணி ! நீ என்மேல் இருக்கும் ஓர் பாசத்தால் அவ்விதம் உரைக்கிறாய் , அதுவும் நியாயமே . ஆனால் , நான் ஏக சக்ராதிபதியாய் இருந்தும் அந்த சங்கரனிடம் இருக்கும் ஸ்ரீ ரத்னத்தை நான் அடைய எண்ணி தூதனை அனுப்பியும்  அவன்,. மறுதளித்து விட்டான்.ஆகையால் நான் யுத்தம் செய்து அந்த.ஸ்ரீ ரத்னமாகிய பார்வதியை அழைத்து வரப்போகிறேன் என்று சொல்ல...

ப்ருந்தையானவன் , ஹா ...என்ன ? பார்வதி தேவியையா என் தாயையா ? நாதா ! வேண்டாம் . அவள் ஒரு சுடர்  அவளருகிலும் தங்களால் போகமுடியாது ! வேண்டாம் இதெல்லாம் வினாச காலத்தில் உண்டாகும் விபரீத புத்தியாகும் என்று பலவிதமாக நியாயங்கள் எடுத்துரைத்தாள்.

 .அதைக்கேளாத ஜலந்தரன் , துளசி ! நான் முன்வைத்த காலை பின்வைக்கமாட்டேன் . எவ்விதத்திலும் நான் அப்பார்வதியை அடையாமல் இருக்கமாட்டேன் என்று சொல்ல ...

 ப்ருந்தையானவள் ,  நாதா ! வேண்டாம் . இந்த அற்ப எண்ணத்தை  விட்டுவிடுங்கள் . தவிர , தாங்கள் சிவனைத்தவிர மற்ற எந்த தேவர்களுடன் யுத்தம் செய்வதாயிருந்தாலும் நான் சம்மதிப்பேன் . ஏனெனில் , இவரோ த்ரிநேத்ரதாரி . அவர் தன் நெற்றிக்கண் திறந்தாலே போதும் நீரும் உமது சைன்யமும் பஸ்மீகரமாய் போவது நிச்சயம் . ஆகையால் , வேண்டாம் பிடிவாதம் விட்டு விடுங்கள் என்றுரைக்க ...

ஜலந்தரன் வெகுண்டு , பெண்ணே பெண்ணின் புத்தி அற்ப புத்தி என்பது உன்னிடம்தான் ப்ரத்யக்ஷமாகக் கண்டேன்  நீ. அந்தப்புரம் சென்று சுகமாய் இரு . நான் சென்று யுத்தம் புரிந்து வெற்றி பெற்றுவருகிறேன் என்று புறப்பட , அவள் குறுக்காக விழுந்து அழுது ஆட்சேபிக்க , அவளை உதறித் தள்ளிவிட்டு தன் சைன்யங்களுடன் யுத்தத்திற்குப் புறப்பட்டான். 

இவையெல்லாம் தன் த்ருஷ்டியில் அறிந்துகொண்ட விஷ்ணு இந்த்ராதி தேவர்கள் ஆலோசித்து இங்கு நடந்த விஷயம் சாம்பமூர்த்திக்குத் தெரிவிக்க வேண்டி மஹாவிஷ்ணுவானவர் மாயா ரூபத்துடன் கைலையை அடைத்தார் . கயிலையை அடைந்தும் , மஹா விஷ்ணுவானவர் அக்கைலாச பர்வதத்தில் அஷ்ட திக்குகளையும் நோக்க , இந்த்ர திக்கில் கபாலீசன் , அசன் , புத்தன் , வச்சிரதேகன் , ப்ரமத்தனன் , விபூதி , இவ்வியன் , சாத்தாபினாகி , த்ரிசோதியன் முதலியவர்களும் அக்னி திக்கில் ருத்திரன் , உதாசனன் , பிங்கலன் , காதகன் , அயன் , சுவலன் , தகனன் வெப்புரு . பிரமாந்தகன் , க்ஷயாந்தகனும் , இமய திக்கில் யாமியன் , ம்ருத்யு , அரன் , தாதா , விதாதா கத்திரு , காரன் , தன்மன் , சங்யோத்தர் , வியோகிருதனும் , ந்ருதி திக்கில் நைருதி , மாரணன் , அரந்தர் , க்ரூர த்ருக்ஷக்ஷ்டி , பயாந்தகன் , உர்த்துவகாயன் , வ்ருபாக்ஷன் , தூமிரு , உலோகிதன் ,தெங்கிருஷ்ணரும் , வருண திக்கில் பலன் , அதிபலன் , பாசத்தன் , மஹாபலன் , ஸ்வேதா , ஜயபத்ரன் , துர்க்கபாஹு , சலாந்தகன் , படபாமுகன் , தீமானும் , வாயு திக்கில் சீக்கிரன் , லகு , வாயுவேகன் , தீக்ஷணன் , சூக்ஷமன் , க்ஷயாந்தகன் , பஞ்சாந்தகன் , பஞ்சசிகன் , கபத்தி , மேகவாகனனும் , குபேர திசையில் நீதீசன் , ரூபவான் , தன்னியன் , ஸௌம்யன் , ஸௌம்யதேகன் , ப்ரம்த்தனன் , சுப்ரகடன் , ப்ரகாஸன் ,  லக்ஷ்மிவான் , ஸோமேஸன் ஈசான்னிய திக்கில் , வியாத்தியாதீபன் , ஞானபுகன் , சருவன் , வேதபாரகன் , மாத்ருவிரத்தன் , பிங்கலாக்ஷன் , பூதபாலன் , பலிப்ரியன் , சர்வவித்தியாதிபன் , தாதா முதலான ருத்ரகணங்களும் , கீழே விஷ்ணு திக்கில் அன ந்தன் , பாலகன் , வீரன் , பாதாதி விரதிபதி , சிஷபத்துவஜன் , உக்கிரன் , சுப்ரன் , உலோகிதன் . சருவனும் , மேலே ப்ரஹ்ம திக்கில் சம்பு , விபு , கணத்தியக்ஷன் , த்ரியக்ஷன் , திருதேசகவாதகன் , சன்வாகன் , விவாகன் , நபன் , லீபசு , விலக்ஷணன் முதலிய தேவ கணங்களும் யக்ஷகின்னரார்  கிம்புருட , கந்தர்வ வித்தியாதரர்களும் நாரதர் , யாழ்வல்லோர் , தந்திரர் , வீணைவல்லோகும் சமஸ்த பூதகணங்களும் ரிஷி கணங்களும் , கயிலையைச்சுற்றிலும் புடை சூழ்த்து வீற்றிருக்க , அச்சிகரத்தில் தீயான நிஷ்டையுடன் இருக்கும் சிவவைக் கண்டு களித்து , அப்பரமனிடம் ஜலந்தரன் செய்துவரும் அக்கிரமச்  செயல்களையும் யுத்தத்திற்குப் புறப்பட்டு வரும் விஷயம்அனைத்தையும் சங்கரனிடம் மஹாவிஷ்ணுவானவர் தெரிவிக்க சம்புவானவர் கேட்டுப் புன்னகை புரிந்து ...

 ஸ்ரீபதி ! எல்லாம் அறிகிறேன் . ஆனால் , தீயே சிந்தித்துப்பார் என்றுரைக்க.....

ஆம் நீர் சொல்வதும் உண்மையே , ஆனால் இப்போது நாங்கள் இருக்கும் நிலைமை உமக்குத் தெரிந்திருக்கும் . நாங்கள் என்ன செய்வது ? அந்த ஜலந்தரன் உமது ருத்ராமசத்தில்  உண்டாளவன் . அவனுக்கு உம்மைத் தவிர எங்களால் ஒன்றும் செய்யமுடியாது . எவ்விதத்திலாவது அவனை ஜெயித்து தேவர்கள் இடரைப் போக்கவேண்டும் . முன் நடந்த யுத்ததிதில் ஜலந்தரனால் தோல்வியுற்று தேவர்களெல்லாம் அவனுடைய அடிமையாய் இருக்கிறார்கள் . ஏன் ? நானும் சதிபதி சமேத அடிமைதான் . ஆனால் , உம்மைத்தவிர மற்றவர்களால்அவனை  யாராலும் ஜெயிக்க முடியாது என்பது ப்ரம்மாவின் வாக்கு இருந்தாலும் , இந்தச் சமயம் தங்களுடைய யுத்தத்திற்கு வந்து கொண்டிருக்கும் ஜலந்தரனையும் , அவனது சைன்யங்களையும் வதம் செய்து , மற்ற தேவர்களையெல்லாம் காத்து ரக்ஷிக்க வேண்டும் என்று விஷ்ணுவானவர் கூற ... 

பரமனானனவர் ,நாராயணா ! அந்த ஜலந்தரனானவன் போரில் என்னிடம் யுத்தம் செய்தாலும் , நான் என்ன அஸ்திரங்கள் அவன் மீது ப்ரயோகித்தாலும் அதனால் அவனை ஒன்றும் பாதிக்காது . அப்படி அவனை சமாளிக்க வேண்டுமாயில் நீயேதான் காரணமாய் இருக்கவேண்டும் எனக்கூற , பகவானும் , அப்படியாயின் என்னால் என்ன ஆகவேண்டும் என்று கேட்க ... ஈஸ்வரரானவர் , ஜகத்பதீ ! உம்முடைய தேஜஸும் தேவர்களுடைய தேஜஸும் ஒன்றுபட சேர்த்துக் கொடுத்தால் , அத்தேஜசுகளின் மூலம் சுதர்ஸனம் என்ற சக்கரத்தையும் , பல அஸ்த சஸ்த்ரங்களையும் உண்டாக்கி அதனால் அவனை சம்ஹரிக்கலாம் என்றுரைக்க , அப்படியே ஜகத்பதியும் மற்ற தேவர்களும் தங்கள் தங்கள் தேஜசுகளை ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்தார்கள் . 

அப்படி அவர்கள் கொடுத்த தேஜசை பரமசிவன் பெற்றுக்கொண்டு பல அஸ்திரசஸ்த்ரங்களையும் உண்டு பண்ணி விஷ்ணுவைப் பார்த்து , லக்ஷ்மீநாதா ! இப்போது நான் அவனை ஒருகை பார்த்துக்கொள்கிறேன் . நீர் சென்றுவாரும் என்று ஆக்ஞாபிக்க விஷ்ணவானவர் மற்ற தேவர்களுடன் சேர்ந்து ஜோதிபுரியை அடைந்தார் .  

 இப்படியிருக்க , ஜலந்தரனுடைய சைன்யமானது கைலாச பர்வதத்தின் கீழ்த்திசையில் வந்து கொண்டிருந்தது . இது விஷயம் தெரிந்த பரமேஸ்வரர் , நந்திகேஸ்வரர் முதலான சிவகணங்களை திரட்டிக்கொண்டு கைலாசத்தைவிட்டு பூமியை அடைந்தார் . இவர்கள் வந்த சிறிது நேரத்திற்குள் , ஜலந்தர சைன்யங்கள் யுத்த பேரிகை முழக்கினார்கள் . அதைக்கேட்ட நந்திகேஸ்வரர் சும்ப நிசும்பன் முதலான சிவகணங்களும் சங்கநாதம் செய்தார்கள் . இருவர்களுடைய சைன்யங்களும் போர்க்களம் வந்து சேர்ந்து யுத்தம் ஆரம்பிக்கலானார்கள் . பேரி , ம்ருதங்கம் , சங்கம் , கீதவாத்தியம் முதலான த்வனியாலும் ரதகஜதுரகபதாதி இவைகளின் ப்ரதித்வனியாலும் பூமியானது அசைந்தாடின . இரு திறத்தாரும் தங்கள் தங்கள் ஆயுதங்களான சக்தி , தோமரம் , முசலம் , பிண்டி , குலம் , கட்கம் , பாலா , பாசம் , இவைகளைக் கொண்டு போர்புரிந்தார்கள் அப்படி யுத்தம் செய்வதில் , ஆகாயம் பூமி எல்லாம் புழுதி மயமாகத் தோன்றியது . இவ்வாறு இருதிறத்தாரும் யுத்தம் செய்வதில் , பல ராக்ஷஸப் படைகள் சிவகணங்களால் தாக்கப்பட்டு ஜலந்தரன் சேனைகளின் சேதம் கணக்கிட முடியாது . தலை வேறு . வர்க்கங்கள் மடியவே . படுகளத்தில் ரத்த வெள்ளமாக  ஓடலாயிற்று . இதுகண்ட ஜலந்தரன் தன் சைன்யங்கள் அதிகமாக சேதப்படுவதைப் பார்த்து வருத்தமுற்று சுக்ராச்சாரியாரிடம் உரைக்க , அவர் ஜலந்தரனுக்கு ஆறுதல் சொல்லி தன் மந்த்ர உச்சாடனத்தால் மரித்த ராக்ஷஸ சைன்யங்களை உயிர்ப்பித்து , மறுபடியும் யுத்தத்திற்கு அனுப்பிவைத்தார் . 

அப்படி இறந்த சைன்யங்கள் உயிர்பெற்று யுத்தத்திற்கு வருவதைக் கண்ட சிவகணங்கள் சங்கரரிடம் தெரிவிக்க , அப்படி ஈஸ்வரரானவர் மிகுந்த சினமடைந்தவராய் , தனது சக்தியால் பயங்கர ரூபத்துடனும் , உதரத்தில் சிரசு உடைத்தானவளும் , கண்டவர்களை நாசம் செய்யத் தகுந்த வளுமான கிரதி என்னும் ஒரு பெண் பூதத்தை தன் முகத்திலிருந்து உண்டாக்கி , எதிரிகளை நாசம் செய்துவரும்படி ஏவிவிட்டார் . பூதமானவள் மிகுந்த குதூகலம்  அடைந்தவளாய் , ஒரே ஓட்டத்தில் யுத்தகளம் அடைந்து ஆடிப்பாடிக் குதித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டு , அங்குள்ள ஒவ்வொரு அரக்கர்களையும் பிடித்துக் கையால் நசுக்கி இம்சை செய்து கொண்டே வந்தாள் . இது கேள்வியுற்ற சுக்ராச்சாரியர் தனது சைன்யங்களை அழைத்துவந்து அந்தக் பூதத்தைத் தாக்க , அக்கிரதியானவள் அந்தப் பொட்டைக் கண்ணனான சுக்ராச்சாரியரின் கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துத் தூக்கிக்கொண்டு மறைந்துப் போய்விட்டாள்.

 இதைக்கண்ட ஜலந்தரனுடைய சைன்யங்கள் மிகவும் பயந்தவர்களாயும் , மனதில் ஆருத்துயரம் அடைந்தவர்களாயும் முகவாட்டத்துடன் இருக்கையில் , காலநேமி என்பவன் வந்து விஷயங்களைத்தெரிந்து புஜபலபராக்கிரமம் பொருந்திய தனது சைன்யங்களைக் கொண்ட , சுக்ராச்சாரியரைத் தூக்கிச் சென்ற அந்தக் கிரதி என்பவளைத் தாக்கி , அவளைக்கொன்று சுக்ராச்சாரியரை விடுவித்து மறுபடியும் சிவகணங்களுடன் க்ரூரமாக யுத்தம் செய்ய , சிவ சைன்யங்கள் அடிபட்டு அலறி மூலைக் கொருவராய் ஓடத் தலைப்பட்டார்கள் . இதுகண்ட நந்தி , சுப்ரஹ்மண்யர் , விக்னேஸ்வரர் இவர்கள் தன் சேனைகளை ஓடவிடாது அமர்த்தினார்கள் . பொழுது புலர்ந்தது .

 பதிமூன்றாவது அத்யாயம் முற்றிற்று .

KARTHIKA PURANAM TAMIL - INTRODUCTION / கார்த்தீக புராணம் தமிழில்