karthika purananm in tamil - day 14
karthika purananm in tamil - day 14

 பதிநான்காவது அத்யாயம்

 க்ருஷ்ண பரமாத்மா மேலும் , கேளாய் பாமா ! இப்படியாக நந்தி , சுப்ரமண்யர் , விக்னேஸ்வரர் தமது சிவ சைன்யங்களை ஓடவிடாது அமர்த்த , மறுபடியும் யுத்தம் ஆரம்பித்தனர் . இரு திறத்தாரும் தத்தம் படைகளை அணிவகுத்து வரிசையாக நின்று ந்திகேஸ்வரர் காலநேமி என்னும் சேனாதிபதியுடனும் , விக்னேஸ்வரர் சும்பனுடனும் , சுப்ரமண்யர் , நிசும்பனுடனும் மற்றும் ராக்ஷசப்படைகளும் சிவகணங்களும் போர் புரிந்தனர் . 

karthika puranam in tamil day 13 pdf - take a look at it.

அப்படி யுத்தம் செய்வதில் நிசும்பனானவன் சுப்ரமண்யர் மேல் பல பாணங்களைப் பிரயோகித்தார் . சுப்ரமண்யரும் வந்த பாணங்களை எல்லாம் பஸ்மீகரம் செய்ய , நிசும்பனானவன் கோபமடைந்து தான் ஒரே காலத்தில் ஐந்து பாணங்களை தொடுத்து , சுப்ரமண்யரின் வாகனமாகிய மயில்மேல் ப்ரயோகித்தார் . உடனே மயிலானது அடிபட்டு கீழே விழுந்தது . தக்ஷணம் சுப்ரஹ்மண்யரானவர் சினமூண்டு , சக்தி என்னும் பாணத்தால் நிசும்பனைத் தாக்கி மூர்ச்சையடையச் செய்தான் . பிறகு , சேனாதிபதியான காலநேமி என்பவன் அதிரோஷம் கொண்டவனாய் , நந்திகேஸ்வரர் மீது பாணப் பிரயோகம் செய்து , நந்திகேஸ்வரனின் தனுசை ஒரே பாணத்தால் ஒடித்து எறிந்தார் . உடனே நந்திகேஸ்வரர் படபடத்துடன் காலநேமியை கூர் அம்பெய்து , காலநேமியின் மார்பைக் கிழித்து தன் ரதத்திலிருந்தும் கீழே விழுக்காட்டி . மற்றொரு கணையால் குதிரையையும் சாரதியையும் அடித்துக் கீழே விழுக்காட்டினார் . மற்றொபுரம் சும்பனுக்கும் விக்னேஸ்வரருக்கும் அகார யுத்தம் நடத்துக்கொண்டிருந்தது . அந்த கணபதியானவர் , சும்பன் என்கிற அகரனை மார்பில் குறிவைத்து ஒரே பாணத்தால் அவள் மார்பைப் பிளக்க சும்பனானவன் அதிக உக்ரத்துடனும் பூமி அதிருப்படியான சப்தத்துடனும் தன் அறுபது பாணங்களை ஏக காலத்தில் கணபதியின் மேல் ஏவ , அவ்வாறு பாணங்கள் வருவதைக் கண்ட கணபதியானவர் தன் சக்தியால் தடுக்க , சும்பன் மற்றொரு கணையால் கணபதியின் வாகனமாகிய பெருச்சாளியின் மேல் ப்ரயோகம் செய்ய , பெருச்சாலியானது அடிபட்டு மூர்ச்சையாகி கீழே சாய்ந்தது.உடனே கணபதியானவர் தன் வாகணத்தைவிட்டு பாதசாரியாய் நின்று யுத்தம் செய்து தன் கண்ட கோடாலியால் சும்பனுடைய மார்பில் தாக்கவும் , 

சும்பளுானவன் அடிபட்டு கீழே வீழ்த்தான் , மூர்ச்சயைடைந்த பெருச்சாளியானது தெளித்து வந்து கணபதியின் முன்வந்து நின்றது . மறுபடியும் விக்னேஸ்வரரானவர் யுத்தத்திற்குச் செல்ல , அப்போது சும்பன் , நிசும்பன் இருவரும் சேர்ந்து கணபதியைத் தாக்கி மூர்ச்சையடையச் செய்தனர் . உடனே சுப்ரமண்யரும் மஹா பராக்ரமசாலியான வீரபத்திரரும் மற்றும் கூஷ்மாண்டாள், யோகினி கணங்கள் முதலிய சிவகணங்கள் ஒன்றாகத் திரண்டுவந்து கணபதிக்குச் சகாயமாயிருந்து யுத்தம் புரிந்தனர் . சுப்ரமண்யரும் , வீரபத்திரரும் தத்தம் கணைகளால் காலநேமி , சும்ப நிசும்பர்களை அடித்துத்துவம்சம் செய்தனர் .

அடிபட்ட சும்ப நிசும்பன் முதலான அகரப்படைகள் , தாங்க மட்டாது ஓடிப்போய் ஜலந்தரனுக்கறிவிக்க , உடனே ஜலந்தரனானவன் கண்கள் சிவக்க , ஆலகால விஷத்தைக் நாக சர்ப்பம் போல் சீறிக்கொண்டு , படபடத்துடன் தன் ரதத்தின்மீது ஏறிக்கொண்டு யுத்த களம் வந்தடைந்தான் . அங்கு வீரபத்திரன் , சுப்ரமண்யர் , கணபதி , தந்தி முதலான சிவசைன்யங்கள் அஞ்ஜாதெஞ்சத்துடன் நிற்பதைக் கண்டு , கையிலேந்தி , மந்திரத்தை ஜபித்து அஸ்திரத்தை எடுத்து

ஸ்ரீ வைத்தியநாதர் பதிகம் & ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம் / Shri Vaithiyanathan pathigam & Vaithiyanatha Ashtakam in tamil pdf

 வீரபத்திரன் , சுப்ரமண்யர் , கணபதி முதலியவர்களை தாக்க , அவர்களும் ப்ரதி பாணத்தை ப்ரயோகித்துத் தடுத்து அகோர யுத்தம் புரிந்தார்கள் . இரு சேனைகளுக்கும் அன்று கடும்போர் நடந்தது . சுப்ரமண்யரானவர் க்ரூரமான ஒரு அம்பை ஜலந்தரன் மேல் எய்தார் . ஜலந்தரன் அந்தக் கணையால் அடிபட்டு சமாளித்துக் கொண்டு , சுப்ரமண்யரையும் , கூட சகாயமாய் இருந்த நந்தியையும் , வீரபத்ரரையும் , ஜலந்தரன் தன் கதாயுதத்தால் தாக்கி சுப்ரமண்யரும் நந்தியும் அடிபட்டு , மூர்ச்சையாகி கீழே விழுந்தனர் .

 அப்படி அவ்விருவரும் மூர்ச்சையாகி விழுந்தவுடன் மகா பலசாலியான வீரபத்ரனானவன் , ஜலந்தரன் மீது பாய்ந்து ஒருவருக்கொருவர் மல்யுத்தம் புரிந்தார்கள் . ஜலந்தரனானவன் மல்யுத்தத்தில வீரபத்திரனைக் கீழே விழுக்காட்டி , வீரபத்ரனின் தேர் குதிரையையும் தனது பாணத்தால் அடித்து கீழே விழச் செய்தார் . மறுபடியும் மூர்ச்சைத் தெளிந்து வீரபத்ரனானவன் மஹா ரௌத்திராகாரத்துடன் ஜலந்தரனை தாக்க , மறுபடியும் ஜலந்தரனனாவன் மஹா வீரத்தோடு தனது பாணத்தால் வீரப்பத்ரரின் மார்பில் குறிவைத்து ப்ரயோகம் செய்ய , வீரபத்ரனானவன் அடிபட்டு , தாங்காது ரத்தத்தைக் கக்கிக்கொண்டு போர்கள புழுதியில் மரண மூர்ச்சையுடன் விழுந்தான் . இதைப்பார்த்து வீரபத்ரனின் மற்ற சேனைகளும் , சுப்ரமண்யர் , வினாயகர் முதலான பரிவாரங்களும் பயந்து கைலாசகிரியை நோக்கி ஓடினார்கள் .

 பதினான்காவது அத்தியாயம் முற்றிற்று