karthika puranam tamil chapter 15
karthika puranam tamil chapter 15

கார்த்திகபுராணம் - பதினைந்தாவது அத்யாயம்

 ஸ்ரீகைலாசத்தில் பார்வதி சமேதராய் ஸ்ரீபரமேஸ்வரர் வீற்றிருக்க , வீரபத்திரரின் சேனைகள் வந்து தம் சைன்யங்கள் ஜலந்தரனால் அடிபட்டு பின்னடைவதைத் தெரியப்படுத்தினர் . அப்போது சங்கர மூர்த்தியானவர் மஹா ரொளத்ராகாரத்தை அடைந்தவராய் உடனே தன் சிவ சைன்யங்களுடன் கைலாசத்தைவிட்டு யுத்த பூமியை அடைந்தார் . அப்படி ரிஷபாரூடராக வரும் சங்கரனை எதிர்க்க , ஜலந்தரனின் கண்கள் ப்ரளயகால ருத்ராக்னிபோல் ஜொலிக்க , கட்கரோமன் , பலாஹனன் , காலநேமி முதலான திறமை வாய்ந்த சேனாபதிகளையும் , வலிமை வாய்ந்த வீரர்களையும் அழைத்துக்கொண்டு அவனும் யுத்தகளம் அடைந்தான் . 

அவ்வாறு வந்த ஜலந்தரனானவன் பரமேஸ்வரனை எதிர்த்து போர் புரியலானார் . அப்படி ஜலந்தனும் பரமேஸ்வரனும் போர் புரிகையில் , சங்கரனானவன் ஜலந்தரன் மேல் பாணப்ரயோகம் செய்ய , அதை சமாளித்துக்கொண்டு ஜலந்தரன் ஈஸ்வரன் மேல் மஹா விரித்திரமான அஸ்திரத்தைவிட , அந்த அஸ்திரமானது மஹா ஆக்ரோஷத்துடன் சிவனை தாக்க வருவதைக்கண்டுசம்புவானவர் ஓர் துரும்பை கையில் எடுத்து மந்திரித்திவிட. தாக்கவந்த பாணமானது தரையில் ஒடித்து விழுந்துவிட்டது . இப்படியாக இருவரும் சமமாகப் போர் புரிகையில் , ஜலந்தரனுக்குச் சகாயமாகப் பலாஹனனும் ,சட்கரோமனும் பரமயை எதிர்த்தார்கள்

Also read - ஸ்ரீ வைத்தியநாதர் பதிகம் & ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம் / Shri Vaithiyanathan pathigam & Vaithiyanatha Ashtakam in tamil pdf

  பரமசிவனூர் தன் அஸ்திரத்தால் கட்கரோமன் என்பவனுடைய சிரசையும் , கண்டர கோடாலியால் பலாஹனன் எனபவன் சிரசையும் அறுத்து , கஸ்மரன் என்ற அசுரனை பாசத்தால் கட்டி அடித்து நொறுக்கினார் , இவ்வாறு அடிபட்ட ராகச சேனைகள் , சிங்கத்தைக் கண்ட யானைகள் போல் நடுங்கினவர்களாய் பின்னடைத்து ஓடலானார்கள் . இவையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஜலந்தரன் , மனம் கொதித்தவனாய் பரமேஸ்வரர் எதிரில் வந்து அடே பிச்சைக்காரப் பண்டாரமே ! கேவலம் சிறு வீரர்களிடம் உள் திறமை காட்டலாமே தவிர , என்னிடம் உன் ஜம்பம் பலியாது . ' இதோ ஒரு நொடியில் உன்னை அடக்குகிறேன் என்று ஒரு பாணத்தை எடுத்து , மந்திர உச்சாடணம் செய்து ஏழு பாணமாக்கி , பரமேஸ்வரரையும் அவர் வாகனத்தையும் எதிர்த்தான்

அதைப்பார்த்த சம்புவானவர் , உடனே தன் சக்தி ஆயுதத்தால் வந்த பாணங்களைத் தடுத்து , ராக்ஷஸ சைன்யங்களையும் சிதறி அடித்து மனங்குழையும்படி செய்து , ஜலந்தரனுடைய கதையும் , கட்கத்தையும் ஒடித்து , ஜலந்தரனையும் கீழே விழச்செய்தார் . அப்படி விழுந்த அவசரமாக எழுந்து மகா கோபத்துடன் ஆயுதத்தை எடுத்து மந்திரித்துவிட , அந்த முசலாயுதமானது ஆகாயத்தில் போய் மறைந்து சுழன்று வருவதைக் கண்டு , ஈஸ்வரர் தன் வேலாயுதத்தால் தடுத்து ஜலந்தரனின் ஆயுதத்தை உடைத்துத் தள்ளினார் .

 அப்போது ஜலந்தரன் மனம் கலங்கினவனாய் மிக்க வியாகூலத்துடன் , மனதை திடப்படுத்திக் கொண்டு , ஆம் இவனை வெல்வது லேசான காரியமல்ல .இவனை மோஹனாஸ்திரத்தால் மயக்கித்தான் வெல்ல வேண்டும் என்று நினைத்து , ஓர் மோஹனாஸ்தரம் தொடுத்து பரமேஸ்வரர்மேல் ப்ரயோகித்தும் தன் ராக்ஷஸ மாயையால் நாட்டிய ஸ்திரீகளை  உண்டாக்கி அவர்களை நோக்கி , நீங்கள் பரமேஸ்வரர் மயங்கும் படியாக நாட்டியமாட வேண்டும் என்று கட்டளையிட அப்படியே திடீரென மேளதாள வாத்திய கோஷங்களுடன் நடனமாதர்கள் நாட்டியம் ஆடத்தொடங்கினார்கள் . 

அப்படி பரதநாட்டியமாடுவதைக் கண்டு சங்கரன் மதிமயங்கி யுத்தகளம் வந்திருப்பதையும் மறந்து , தன் கையிலிருந்து நழுவி கீழே விழுந்த அஸ்திர சஸ்திரங்களையும் கவனியாது , அறிவு கலங்கி மஹா மோஹாந்த ஹாரத்துடன் கூடினவராய் வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றுவிட்டார் . இங்கு இப்படியிருக்க , ஜலந்தரனானவன் யுத்தரங்கத்தில் காலநேமி , சும்ப நிசும்பன் முதலான ராக்ஷஸ வீரர்களைக் காவலாக வைத்துவிட்டு , பார்வதியைக் காணக் கைலாசம் சென்றான் . அப்போது ஜலந்தரனானவன் தன் மாயையால் பஞ்சமுகமும் , பத்து கையும் , மூன்று கண்களும் உடைவனாய் சாட்சாத் சாம்பமூர்த்தியைப் போல் விளங்கி ரிஷபாரூடராக  பார்வதியின் ஸ்தானத்தை அடைந்தான் 

இவர் வருவதைப்பார்த்த பார்வதி தேவியானவள் தன் நாயகரென நினைத்து , அவரை அழைத்துப்போக எதிர்வரவும் அவளைக் கண்ட ஜலந்தரனானவன் காமாந்தகாரம் தலைக்கேறினவனாய் அன்னவளின் ரூப லாவண்யத்தைக் கண்டு மயங்கி , ஆஹா ரத்தினங்களுக்கெல்லாம் சிறந்து அதிக ஜொலிப்புடன் கூடி விளங்கும் இப்பார்வதி ரத்னமானவள் , ஆயிரம் சூர்யன் ஏககாலத்தில் உதயமானால் பிரகாசிக்குமோ ! அப்படிப்பட்ட ப்ரகாசத்துடன்  அல்லவாப்ரதிபலிக்கிருள் . ஆஹா ! இவள் மட்டும் எனக்கு நாயகியாக இருந்தால் , என் ராஜ்யம் எவ்வளவு சுபிக்ஷமாக இருக்கும் . மேலும் , சிம்மாசனத்தில் நாமிருவரும் அமர்ந்து வீற்றிருந்தால் , நமது மாளிகையானது ஜகஜ்ஜோதியாய் பிரகாசிக்குமே ! ஆஹா ! என்ன காந்தி ! இவளை அடையாவிடில் , நான் இருந்தென்ன இறந்தென்ன என்று பலவாறு சிந்தித்துமன்மதன் கணையால் அடிபட்டவனாய் மெய்மறந்து தக்ஷணம் தன் வீரியத்தை விட்டுவிட்டான் .

பார்வதிதேவியானவள் அதைபார்த்து திடுக்குற்றவளாய் அசுரனே! என் நாயகரைப் போல் ரூபங்கொண்டு விரும்பி என்னை ஆட்கொள்ள வந்திருக்கிறான் இவனை லேசில் விடக்கூடாது . இவன் முகத்திலும் விழிக்கக்கூடாது என்று ஓடி மறைந்துவிட்டாள் .

 மயக்கத்திலிருந்த ஜலந்தரன் தெளிவடைந்து பார்க்கையில் , பார்வதியைக் காணாது , ஆஹா ! என்ன ஆச்சரியம் ! இமைக்குள் மின்னற்கொடிபோல் தோன்றி மறைந்து சென்றாளே ! இருக்கட்டும் , இன்னொரு சமயம் பார்த்துக் கொள்கிறேன் என்று தன் சுய ரூபத்துடன் யுத்தபூமியைச் சேர்ந்தான் .

 கைலாசகிரியை அடைந்த பார்வதியானவள் மஹா விசனத்துடன கூடியவளாய் மஹாவிஷ்ணுவை நினைக்க , உடனே விஷ்ணுவானவர் ப்ரசன்னமாகி பார்வதி தேவியை நோக்கி , பார்வதி ! என்னை வேண்டி நீ நினைத்துக் கொண்ட காரணம் என்னவென்று கேட்க , உமையானவள் ஓ சர்வலோக சரண்யா ! நான் என்ன சொல்லப்போகிறேன் . சற்று நேரத்திற்கு முன்பு , ஜலந்தரன் என்ற அசுரன் , தன் மாயையால் என் பதியைப்போல் ரூபங்கொண்டு என்னிடத்தில் வரவும் , என்னைக் கண்டவுடன் அவன் மெய்மறந்து மோகம் தலைக்கேறினவனாய் உடனே தன் வீரியத்தை விட்டுவிட்டான் . அதைக்கண்டு சகிக்காது மிகுந்த கவலைகொண்டு மனம் கலங்கி , தங்களிடம் நிரூபிக்க வேண்டித் தங்களை நினைத்தேன் ஆகையால் , தாங்கள்  எவ்விதத்திலாவது  . அவனை ஒழிக்கும் மார்க்கத்தைத் தேட வேண்டும் . இதுதான் என் கோரிக்கை ,

 ஸ்ரீபதியானவர் .பார்வதி  கலங்காதே , நானும் இவனைப்  பார்த்து பயந்து ,  ஸ்ரீவைகுண்டத்தை விட்டு லக்ஷக்ஷ்மியுடன் அவனுடைய பட்டணத்திலேயே வாசம் செய்கிறேன் . ஆகையால் இவனை ஒழிக்க என்னால் முடியாது . அதற்கு சாம்பவமூர்த்திதான் உகந்தவர் . அப்படியிருந்தாலும் , அவனை லேசில் வெல்ல முடியாது . ஏனெனில் , அவன் மனைவி ப்ருந்தையோ மஹா உத்தமி , மஹா பதிவிரதை , கற்பிற் சிறந்தவள் . ஆகையால் அவனை வெல்வது அரிது .

Also read - KARTHIKA PURANAM TAMIL pdf CHAPTER 1

 அப்படி அந்த ஜலந்தரனை யுத்தத்தில் ஜயிக்க வேண்டும்என்றால் அவள் மனைவி பிருந்தை யின் கற்பைப் பங்கப்  படுத்தினால்தான் அவள் கணவன் கொல்லப்படுவான் என்று சொல்ல , பார்வதியாளவள் யோசித்து , ரக்ஷகரே ! பிறர் மனைவிமேல் இச்சைக் கொண்டு , அவளைக் கெடுக்க வரும் அசுரனின் மனைவியின் கற்பைக் கெடுப்பதால் ஒரு தோஷமும் வராது . ஆகையால் , அந்தக் காரியம் தங்களால்தான் முடியும் என்று வேண்டிக் கொள்ள ... 

பகவானானவர் , ஆர்யே ! அவசரப்படாதே , அதற்கும் காலம் வரும் . அவன் அழியும் காலமும் சமீபத்தில் இருக்கிறது . நீ அதைரியப்படாதே என்று ஆறுதல் சொல்லிவிட்டு , தன் யதாஸ்தானம் அடைந்தார் . 

 இப்படியிருக்க , யுத்தகளத்தில் நாட்டியக் கலையைக் கண்டு ரசித்து நிற்கும் சாம்பவ மூர்த்தியானவர் , மனம் தெளிவடைந்து . ஆஹா ! என்ன நான் இந்த நாட்டியத்தைக் கண்டு மயங்கிவிட்டனே ! நம் சேனா சைன்யங்கள் யுத்தத்தில் எவ்வாறு போர் புரிகிறார்களோ என்று பிரமை பிடித்தவராய் , உடனே போர்க்களம் சென்று , ஜலந்தரனுடன் எதிர்த்து அஸ்த்ர சஸ்த்ரங்களை ஏந்தி கடும்போர் புரியலானார் என்று பகவான் பாமையிடம் எடுத்துரைத்தார் ,

. பதினைந்தாவது அத்யாயம் முற்றிற்று