கார்த்திகா புராணம்
18 வது அத்யாயம்
அவ்வாறு தேவர்கள் அப்பீஜங்களை நட்டு தண்ணீர் தெளித்து மிக மிக ஜாக்ரதையாக பாதுகாத்துக் கொண்டிருக்க , க்ஷண நேரத்தில் மூன்று பீஜங்கள் வைத்த இடத்தில் மூன்று செடிகள் உற்பத்தியாகின . அவை , முறையே , சரஸ்வதி தேவியர் கொடுத்த பீஜமனது நெல்லிச் செடியாகவும் , லக்க்ஷ்மீ தேவியர் கொடுத்த பீஜமானது வாடாமல்லிகையாகவும் , பார்வதி தேவியர் கொடுத்த பீஜமனது துளசி செடியாகவும் தோன்றிற்று .
அம்மூன்று மரங்களும் ராஜஸம்,தாமஸம்,சாத்வீகம் என்ற முக்குணங்களுடன்கூடியதாக இருந்ததாம் . அப்படி அம்மூன்று செடிகளும் வளர்ந்து நிற்கையில் , ப்ருந்தையின் மோகத்தில் லயப்பட்டு மூழ்கிக்கிடந்த ஜகத்பதியான ஸ்ரீவிஷ்ணுவானவர் மூர்ச்சைத் தெளிந்து எழுந்து மோக ஆவேசத்தின் மாயையைத் தகர்த்துவிட்டு , ராஜஸ சாத்வீக குணமே நெல்லிச் செடியாக இருப்பதைக் கண்டு அதிக சந்தோஷமுள்ளவராய் அச் செடிகளையே நோக்கிக் கொண்டிருக்க , அப்போது லக்க்ஷ்மீ , ஸரஸ்வதீ , பார்வதீ , நாரதர் மற்றும் இந்திராதி தேவர்களும் வந்து சேர்ந்து மஹாவிஷ்ணுவையும் மரங்களையும் பார்த்து நமஸ்கரிக்க , ஸ்ரீ : பதியான விஷ்ணுவானவர் லக்க்ஷ்மீதேவியை நீங்கலாக மற்றெல்லோரையும் ஆசீர்வதிக்க , நாரதரானவர் விஷ்ணுவை நோக்கி , ஹரிவல்லபா ! அன்னையாகிய லக்க்ஷ்மீ தேவி வந்துருப்பதைத் தாங்கள் கவனிக்கவில்லை போல் தோன்றுகிறது அன்னையும் கூடவே இருக்கிறார் என்று தெரிவிக்க.
You May Also Know Lord Iyappa Saarana Khosham Click Here
ஜகத்பதியானவர், நாரதரே! அறிவேன். அவளை நோக்காத காரணம் யாதெனில், இதோ பார் சரஸ்வதியும், பார்வதியும் ராஜஸ ஸாத்மீகம் வஹித்துக்கொடுத்த இரண்டு பிஜங்களும், என்மனத்திற்கு சந்தோஷத்தை தரும்படியான நெல்லி துளசி மரமாக உண்டாகியிருக்கிறது. லக்க்ஷ்மீயோவெனில், மனதில் பொறாமைக் கொண்டு தாமஸ குணத்துடன் கொடுத்த பீஜமானது, வெறுப்பை உண்டாக்கும் படியான வாடா மல்லிகையாக உண்டாகியிருக்கிறது. ஆக்வேதான் அவள்மேல் எனக்கு வெறுப்பு தோன்றியது. பொறாமைக் குணம் என்பது எந்தக் காலத்திலும், எப்பொழுதும் தன் பதியிடத்திலோ, புத்திரர்களிடத்திலோ, பந்துக்களிடத்திலோ ஏற்படக் கூடாது. அந்த ஒரு குணம் மாத்திரம் பெண்களிடத்தில் இல்லை என்றால், அப்பெண்கள் கார்த்திகை மாதத்தில் செய்யும் விரதத்தைக் காட்டிலும் 100 மடங்கு அதிகமான விரதத்தை அனுஷ்டித்தவர்கள் ஆவார்கள். ஆகையால், நாரதரே! நீரும் மற்ற தேவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய நான் அவள்மேல் பாராமுகமாய் இருந்தேன். ஆகையால், நாம் இனி நெல்லி துளசி மரங்களுடனும், தேவர்களுடன் கூடி லக்ஷ்மீ சமேதராய் சேர்ந்து ஸ்ரீவைகுண்டம் அடைவோம் என்று எல்லோரும் ஸ்ரீவைகுண்டம் சேர்ந்தார்கள்.
அவ்வாறு ஸ்ரீவைகுண்டம் போய்ச்சேர்ந்த மஹா விஷ்ணுவானவர் லக்ஷ்மீ தேவியை நோக்கி, சதி லக்க்ஷ்மீ! நீ இனிமேல் என்மேல் பொறாமைக் கொள்ளக்கூடாது. பொறாமையில் இன்று நீ அடைந்த அவமானத்தை என்றும் மறக்கக்கூடாது. நான் எந்தக் காரியத்தில் இறங்கினாலும், அது யுக தர்மத்தை அனுசரித்தேயிருக்கும் என்று சமாதானம் கூறி பள்ளி அமர்ந்தார். ஆகையால் யாறொருவர் தன் வீட்டில் துளசிச் செடியை வைத்து வளர்த்து பரிபாலிக்கின்றனரோ, அந்த வீடு விஷ்ணு ஆலயம் போன்று விளங்கும் அவ்வீட்டினை யூதப்ரேத பைசாதிகள் அணுகாது. மேலும் துளசி மரத்தை தினம் தினம் தரிசிப்பதால், வாக்கு மனம் காய சஞ்சிதமான பாபத்தைப் போக்கும். துளசி மாலையைத் தரித்துக்கொண்டோ அல்லது கையில் வைத்துக் கொண்டிருக்கும் பொழுதோ ப்ராணனை விடுபவன் மஹா பாவியானாலும் அவன் செய்த பாவங்கள் எல்லாம் விலகும் . துளசி , நெல்லி உற்பத்தியாய் இருக்கும் நந்தவனத்தில் போய் பித்ரு ஸ்ராரத்தம் பிண்டப் பிரதானம் செய்வதால் பித்ரு தேவதைகள் ஆனந்த திருப்தியுடன் பெற்றுக்கொண்டு புண்யலோகத்தை அடைவார்கள் . கார்த்திகை மாதத்தில் நெல்லிப்பூவை சிரஸில் தரித்துக்கொண்டலும் அதைப் பகவானானவர் தனக்கு அர்ப்பணம் செய்ததாக எண்ணுவார் . அதாவது , நெல்லிப்பூவும் துளசியும் ஒருவன் முக்தியடைவதற்கு ஏதுவாக இருக்கிறது . ஆகையால் , துளசி , நெல்லிப்பூ இதனை மாலையாகத் தொடுத்து கழுத்தில் தரித்துக்கொள்ளக்கூடாது .
இன்னும் துளசி , நெல்லி இவைகள் தடாகக் கரையில் வளர்ந்து , அதன் பூக்கள் அத்தடாகத்தில் உதிர்ந்து விழ , அப்போது அத்தடாகத்தில் ஸ்னானம் செய்பவர்கள் கங்கா ஸ்னானப் பலனையடைவார்கள் . நெல்லி , துளசி இவைகளால் தேவதார்ச்சனை செய்பவன் ஸ்வர்ணமணி , முத்து இவைகளால் அர்ச்சித்த பலன் அடைவான் , ஏனெனில் , துளசி மரத்தில் சதா விஷ்ணுவாசமும் நெல்லி மரத்தில் சகல தேவர்களும் வாசம் செய்கிறார்கள் . ஆகையால் , இக்கார்த்திகை மாதத்தில் அதாவது சூர்யன் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது , சமஸ்தமான தேவருஷிகளும் நெல்லி , துளசி இவ்விரண்டு மரங்களில் வந்து வாசம் செய்வார்கள் . கார்த்திகை மாதம் துவாதசியன்று மட்டும் துளசி தளமும் , நெல்லி இலையும் உபயோகிக்கக்கூடாது . தவிர , யாறொருவர் கார்த்திகை மாதத்தில் நெல்லி மரத்தின் கீழ் இருந்தது சக்தியுடன் அன்னதானம் செய்கிறானோ , அவன் எத்தனை ஜன்மங்கள் எடுத்தாலும் அவனுக்கு வறுமை என்பது அணுகாது . மேலும் ஒருவன் நெல்லி மரத்தினடியில் உட்கார்ந்து துளசியால் விஷ்ணுவை எண்ணி அர்ச்சனை செய்கிறார்களோ அவர்கள் விஷ்ணு க்ஷேத்ரத்தை பூஜித்த பலனடைவார்கள் . இப்பேர்ப்பட்ட துளஸி , நெல்லியாகிய புண்ய விருக்ஷங்களின் ப்ரபாவம் , ப்ரம்ம தேவனாலும் அறிந்துகொள்ள இயலாது என்றால் , மற்ற யாரால்தான் அறிந்துகொள்ள முடியும் . ஆகையால் , மாந்தர்களே ! நாம் மனிதப்பிறவி அடைந்து , சதா துன்பத்தில் ஆழ்ந்து நற்கதியடையும் வழியைப் பின்பற்றாது . உலக விவகாரத்தில் ஈடுபட்டு தான் என்ற அகங்காரத்துடன் பொருள் சேகரிப்பதும் , கொள்ளை அடிப்பதும் , தர்மத்தை மறந்து அதர்மத்தைக் கைக்கொண்டு அநேக தீய காரியங்களைச் செய்து , அதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை நாம் அடைகிறோம் என்பதை நாம் நம் கண் முன்னாலேயே காண்கிறோம் .
Also Read :Day 13 KarthikaaPuranam Tamil
ஆகையால் , இவையெல்லாம் விடுத்து இக்கலியுக தர்ம ரீதியின் படி நாம் செய்யவேண்டிய சத்கர்மாவை செய்து , மோக்ஷ சாதனத்திற்கு வகை தேடிக் கொள்ளவேண்டியது முக்கியமான கடமை . ஆகையால் , நாம் இக்கார்த்திகை மாதத்தில் செய்யவேண்டிய விரதமானது எவ்வளவு கடினமாயிருந்தாலும் , நம் சக்திக்குத் தகுந்தவாறு கார்த்திகை மாதம் பூர்த்தியாகும் வரையிலாவது அல்லது ( ஒருபக்ஷம் ) பதினைந்து நாளாவது அல்லது ( ஒரு வாரம் ) ஏழு நாட்காளாவது , இல்லையென்றால் ஒரு நாளாவது அதற்கும் சக்தியில்லையென்றால் மூன்றே முக்கால் நாழிகை அல்லது முஹூர்த்த காலமாவது நியம நிஷ்டையுடன் இருந்து , மனதை நிலை நிறுத்தி உலக மாயையை வெறுத்து மிகுந்த பயபக்தியுடன் பகவானை ஆராதித்து இவ்விரதத்தை பூர்த்தி செய்யவேண்டும் . அதற்கும் சாத்தியமில்லை என்றால் கார்த்திகை புராணம் உபன்யாஸம் செய்யும் இடத்தில் சென்று , அவைகளைக் கேட்டு ஆனந்தித்து ஜீவன் முக்தியடைய வழி தேடவேண்டும் . மேலும் மஹிமை பொருந்திய நெல்லி துளசியின் உற்பத்தியை யார் பக்தியுடன் வாசிக்கின்றனரோ அல்லது கேட்கின்றனரோ அல்லது கேட்க வேண்டும் என்று மனதில் நினைக்கின்றனரோ அவர்கள் ஊர்வசியின் உலகத்தில் வாசம் செய்வதற்கு இடம் பெறுவர் . ஆகையால் , இக்கார்த்திகை புராணத்தை யார் கார்த்திகை மாதத்தில் முப்பது நாட்களும் பூர்த்தியாக படிக்கின்றனரோ , அவன் சாக்ஷாத் ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு தாசானுதாசனாக விளங்குவார்கள் . என்று பகவான் சத்யபாமையிடம் உரைத்தார் .
0 Comments